Wednesday, April 10, 2013

அஞ்சலியை காணவில்லை - கடத்தியது குஸ்பு சுந்தர்.C ??? பலகோண விசாரணையின் முடிவு..!!!

அஞ்சலி என்று சொன்னால் யாருக்குமே தெரியாமல் இருக்காது என்பது நம்பிக்கை. ஆனால் இப்ப அஞ்சலி காணமல் போய் விட்டார் என்றால் அதையும் நம்பித்தான் ஆகவேண்டும். ஆரம்பத்தில் இந்த செய்தி கேள்விப்பட்டதும் நானும் நம்பவில்லை. ஆனால் என்ன செய்வது ஒரே விடயம் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லப்படும் போது நம்பித்தானே ஆக வேண்டும். சரி அப்படி என்னதான் நடந்தது என்று பார்ப்பம்.


இதுதான் தப்பு... ஆனா கொஞ்சம் மப்பு..!!!


இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அஞ்சலி என்ன சொல்லி இருக்கா என்றால் "தன்னை தன் சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் ஏமாற்றிவிட்டார்கள்..." என பரபரப்பு புகார் எழுப்பினார் அஞ்சலி. இதற்க பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அஞ்சலிக்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்தார் இயக்குநர் களஞ்சியம். மேலும் அஞ்சலியின் சித்தியும் தன்னுடைய தரப்பு நியாயத்தை நிருபர்களிடம் சொன்னார். அஞ்சலி என்னுடைய அக்காள் மகள். படிக்கும் போதே வேறு ஒரு பையனுடன் ஒடிவிட்டாள். அவளை அழைத்து வந்த நான் கஷ்டப்பட்டு இத்தனை பெயரையும், புகழையும் உருவாக்கினேன். மேலும் அவர் எந்ததெந்த படத்திற்கு எவ்வளவும் சம்பளம் வாங்கினாள் என்ற விவரத்தையும் தெரிவித்தார். இது மட்டுமா அஞ்சலிக்கு கொடிய நோய் ஒன்று இருக்கின்றது தினமும் மருந்து போடாவிட்டால் அஞ்சலி இறந்து விடுவா என்று அவ சித்தி சொல்லி இருக்கா... ஆஹா இது ஒண்ணு போதுமே நம்ம ஆளுகளுக்கு போட்டு தள்ளிட்டு பாப்பா பண்ணார் என்று சொல்லீடுவாங்க்களோ...?? (டேய் யாருகிட... உங்களுக்கு எல்லாம் எத்தனை நெடுந்தொடர்களை ஒளிபரப்பினாலும் உங்க அட்டகாசம் அடங்காது போல இருக்கே... களஞ்சியம் உண்மைய சொல்லு அஞ்சலி பாப்பா உன்கிட்ட தானே இருக்கு..!!!)


கட்டாயம் வாசிக்கவும்..!!!

இந்நிலையில் ஐதாராபாத்தில் ஒட்டலில் தங்கியிருந்த அஞ்சலி காணாமல் போய்விட்டதாக அவருடைய அண்ணன் போலீசில் புகார் செய்தார். தற்போது அஞ்சலி காணாமல் போனது தொடர்பாக நடிகர் ஜெய்யிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்கும் போதில் இருந்து இருவரும் காதலித்தாகவும், தற்போது ஜெய் கட்டுப்பாட்டில் தான் அஞ்சலி இருப்பதாகவும் அவர் சித்தி தெரிவித்த தகவலை அடுத்து ஜெய்யிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் தகவல். (யோ.. யாருகிட்ட போய் என்னத்தை கேட்குறது என்று ஒரு விவஸ்த்தை இல்லையா... பாவமையா அந்த பயலு... அந்த விசயத்துக்கு எல்லாம் ஜெய் சரிப்பட்டு வர மாட்டார் என்று பச்ச குழந்தைக்கும் தெரியும்... உங்க ஜஜ்மென்ட் ரொம்ப தப்பு... சிம்பு சேட்டை பண்ணி இருக்கார் என்று சொன்னால் நம்பலாம்.. இது கொஞ்சம் ஓவர் தான்...! )

சென்னையை விட்டு வெளியேறி, ஐதரபாத்தில் மாயமாகிப்போன நடிகை அஞ்சலி எங்கே இருக்கிறார் என்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில போலீசார் தேடி வருகின்றனர். கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது, தாய் மொழியான தெலுங்கிலும் பிஸி நடிகையாக இருக்கிறார். (அண்மையில் கூட வத்திக்குச்சியில் நெருப்பே இல்லாமல் பற்ற வைத்த நடிகை... கொஞ்சம் உசரம் என்றாலும் சமாளித்துகலாம்... என்று எந்த பாவி தூக்கினானோ..!!! )

இந்நிலையில் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் மு.களஞ்சியம் மீதும், சினிமாவுக்கு தன்னை அழைத்து செல்ல உதவியாக இருந்த தனது தாய் என்று சொல்லி வந்த சித்தி பாரதி தேவி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார் நடிகை அஞ்சலி. இருவரும் தனது கோடிக்கணக்கான சொத்தை மோசடி செய்ததாகவும், இருவரும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனக்கும், தனது குடும்பத்துக்கும் அவர்களால் ஆபத்து என்றும் கண்ணீர் மல்க ஐதராபாத்தில் பேட்டி கொடுத்தார் அஞ்சலி. ஆனால் அஞ்சலியின் குற்றச்சாட்டை களஞ்சியமும், பாரதி தேவியும் மறுப்பு தெரிவித்தன. (ஆக மொத்தத்தில அவீங்க ரெண்டு பேர்லையும் தான் நமக்கு டவுட்டு... டே கூட்டுங்கடா பஞ்சாஜத்தை; என்ன சொல்ல பாவம்... அஞ்சலி போச்சே..!!மேலும் அவர் பெங்களூர் சென்று இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது. இதனால் அஞ்சலியை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என மூன்று மாநில போலீசாரும் வலை வீசி தேடி வருகின்றனர்.இப்படி கடத்துவாங்க என்று தெரிந்திருந்தா நடிக்கவே வந்திருக்க மாட்டானே..!!!

நடிகை அஞ்சலி காரில் கடத்தப்பட்டதாக அவரது அண்ணன் ஒரு புகார் கொடுத்துள்ளார். (வடிவா சொல்லுங்க அது கார் ஆ இல்லை ஜீப் ஆ...) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஹைதராபாத்தில் குடியேறி விட்டேன் என்று அம்மணி தெரிவித்தார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரின் அண்ணே கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். தேடித்தேடி ஓய்கிறது போலீஸ்... ஹைதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஹோட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஹோட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. (டே சித்தப்பா... நீ ஏண்டா நேரம் கெட்ட நேரத்தில அவ ரூமுக்கு போனே... இப்ப உன் மேலயும் ஒரு டவுட்டுதான்...!)

அஞ்சலி ஓட்டம் :- ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஹோட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன. தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றாராம். காரில் சென்றார்... ஹோட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள் அஞ்சலி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை. மின்னலாய் மறைந்த கார்... பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. கார் நம்பர் கேமராவில் பதிவாகவில்லை. ஏற்கனவே இரண்டு தடவை காதல் வயப்பட்டு அஞ்சலி 
வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள். (வீரப்பன் கேஸ் ஐ முடித்த தமிழ்நாடு போலீஸ் எங்க பார்ப்பம் இதை முடியுங்கோ பார்ப்பம்...! )

இதனையடுத்து அஞ்சலி தானாக அந்த காரில் ஏறி சென்றாரா...? அல்லது அவரை யாரேனும் கடத்தினார்களா...? ஒருவேளை காரில் இருந்த அந்த நபர் அஞ்சலியின் காதலரா? இருவரும் வேறு எங்காவது ஓடி விட எண்ணியிருந்தனரா? என்று பல கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். (ஆமா ஆமா... பல கோணத்தில விசாரித்தால் மட்டும் என்ன கண்டா பிடிக்க போறீங்க..? அட போங்க பாஸ் சும்மா காமடி பண்ணாம..!! ) எது எப்படியோ.. கடத்தினார்களோ? இல்லை அஞ்சலியாகவே மனம் ஒத்து சென்றாளா என்று தெரியவில்லை. ஆனால் அஞ்சலி இப்ப மிஸ்ஸிங் என்பது மட்டும் உண்மை. நடிகர்களுக்காக எத்தனை  சங்கங்கள் இருந்தும் என்ன பலன்... ஒரு நல்ல நடிகையை ஓட விட்டுபுட்டிகலேடா...!!!


யாருக்குமே அடையாளம் தெரியலையே...!!!

எனக்கு என்னவோ சுந்தர்.சீ மேலத்தான் டவுட்டு.. ஏன்னா அவர் கலகலப்பு படத்துக்கு பின்னர் தான் அஞ்சலி கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தா.. ஆமா மொத்தத்தில் இதுக்கு அவரும் ஒரு விதத்தில் காரணம். (ஹீ ஹீ ஹீ நமக்கு இப்படி எவனையாது காய்ச்சாமல் இருக்க முடியாது..!!)
சுந்தர்.சீ லேசுப்பட்ட ஆள் இல்லை இவரின் தலைநகரம் படத்தில் நடிகைகளுடன் சில்மிஷம் பண்ணி குஸ்பு கிட்டையே அடி வாங்கின ஆள்.. அஞ்சலி பாப்பாவை விட்டு வைத்திருப்பார் என்றால் நம்பும் படியாவா இருக்கு..!

நடிகைகளை கவர்ச்சியாகவும் கிக்காகவும் பார்த்து பார்த்து பழகிப்போன நமக்கு அவர்களின் வாழ்கையின் இன்னொரு கஷ்டமான பக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நடிகையும் எப்படியும் திருமணத்துக்கு முன்னமும் சில சமையம் பின்னரும் கூட ஏதாவது ஒரு பெரிய பண முதலைக்கு அடிமையாகவே இருந்தாகணும்... எல்லோரும் யோசிக்கலாம் பணத்துக்காகத்தானே போகின்றார்கள் என்று... பணம் கொடுக்கவில்லை என்றாலும் போய்த்தான் ஆக வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மிரட்டல், கொலை என்று ஆரம்பித்து விடுவார்கள். இதை விட கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு இருந்திடலாம் என்று இருந்து விடுகின்றார்கள். எல்லாம் கஷ்டம் தான். சீரழிந்த வாழ்க்கை என்றால் அது இதுதான். சொந்தமாக எதையும் செய்ய முடியாது.

எது எப்படியோ ஒரு நல்ல நடிகை காணவில்லை. நடிகைகள் மத்தியில் நல்ல நடிப்பை காண்பது காண்பது அரிது. அதிலும் நல்ல நடிகைகள் காணம் போனால் இனி கமலஹாசன் போல பொம்பிள வேசம் போட்டுத்தான் ஹீரோக்கள் ரோமான்ஸ் பண்ண வேண்டி வரும். எங்க போய் இருந்தாலும் மீண்டும் வந்து, நல்ல படங்களை நடிக்க ஆரம்பிக்கணும் என்று எண்ணிக்கொள்வோம்...!!!


இவள் வருவாளா... வருவாளா..???"ஓடிவா...ஓடிவா... அஞ்சலி பாப்பா ஓடிவா..."

Post Comment

No comments:

Post a Comment