Tuesday, April 16, 2013

கமல் கொடுத்த சில்மிஷ முத்தம் DD பொண்ணு வெட்கம்...!!!

கமல் முத்தத்தில் நனையாத நடிகைகள் குறைவு, அந்த அளவுக்கு முத்தம் கொடுப்பதில் பேர் போன அவர் , இனி தன் படங்களில் முத்த காட்சி இல்லை என்ற அதி முக்கிய செய்தியை சொன்னால் எத்தனை பேருக்கு மூச்சு இறுகப்போகுதோ தெரியவில்லை. இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்.


அண்ணைக்கு அடித்த லிப்-லிப் இன்னைக்கு வரைக்கும் கவுதமி கமலிடம் இனித்(ருந்)துட்டே இருக்கு..!!!


"சட்டம் என் கையில்'' படத்தில்தான் கமலின் முத்தக்காட்சி முதன் முதலாக இடம் பெற்றது. அந்தப் படத்தில் காதரின் என்ற ஆங்கில நடிகைக்கு முத்தம் கொடுத்தார். இக்காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. இதே கதை "யேதா கமால் ஹோகயா'' என்ற பெயரில் இந்தியில் தயாராகியது. அந்தப் படத்திலும் கமலின் முத்தக்காட்சி இடம் பெற்றது. "புன்னகை மன்னன்'' படத்தில் ரேகாவுக்கும், "சாணக்யன்'' படத்தில் ஊர்மிளாவுக்கும், "மகாநதி''யில் சுகன்யாவுக்கும், "தேவர் மகன்'', "குருதிப்புனல்'' ஆகிய படங்களில் கவுதமிக்கும் முத்தம் கொடுத்தார். இந்த அளவுக்கு கோலாகலமாக ஆரம்பித்தது அவரின் முத்த பயணம்.

முத்தம் பற்றி கமல் கூறியிருப்பதாவது :- "ஒரு தாய் தன் மகளுக்கும், மகனுக்கும் முத்தம் கொடுக்கிறார். சிறு குழந்தைக்குப் பலரும் முத்தம் தருகிறார்கள். ஆழமான காதலையும், அன்பையும் காட்ட முத்தம் நியாயமானதே. "புன்னகை மன்னன்'' படத்தில் வரும் முத்தக்காட்சி, என்னைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். "வனமோகினி'' (எம்.கே.ராதா - தவமணிதேவி முத்தக்காட்சி இடம் பெற்ற படம்) காலத்திலேயே முத்தக்காட்சி வந்துவிட்டது. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. முத்தக்காட்சி தவறானதோ, பாவச் செயலோ அல்ல. அதைப் பயன்படுத்துகிற முறையைப் பொறுத்து, அந்தக் காட்சி அழகானதாகவே மாறும். எல்லோருக்குமே முத்தம் பொதுவானது! பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே இது விதிவிலக்கு!'' ஒரு விஷயத்தை செய்து விட்டு அதனை வக்காளத்து வாங்கும் அளவுக்கு சொல் வலிமை இருக்கு என்றால் அது கமலுக்கு தான். எதை பண்ணினாலும் அதில் சர்ச்சை அத்தனை சர்ச்சைகளையும் தனக்கு சாதகமாக மாற்றும் வியாபார உக்தியை நக்கு பயின்ருகொண்டவர்தான் நம்ம உங்க கமல்ஹாசன்...!!!

இவளோ காலம் தாமதமாக இந்த தலைப்பை தூசி தட்ட வேண்டியதன் காரணம் என்ன என்றால் அண்மையில் விஜய் டிவியில் கமல் வந்து கலக்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு லே(கோ)டி..' நிகழ்ச்சியில் கமல் சார் டீடீ க்கு கொடுத்த முத்தம் தான். என்னை இந்த அளவுக்கு சூடாக்கி விட்டது. சும்மாவே நாம சாருநிவேதாவுக்கு சவாலாக மொக்கை போடுவம், இதில நல்ல சமாச்சாரம் வேறை கிடைத்தால் விடுவமா?


தப்பா... பார்க்காதீங்க பாஸ் இதுதான் அப்பா... மகள்... உறவு..!!! 

அதுகும் கமல் சும்மா இருந்தாலே இழுத்துப்பிடித்து பசக்கு பசக்கு என்று இச்சு கொடுக்குத்துடுவார். இந்த லட்சனத்தில டீடீ வேற தனக்கு கமல் உம்மா தரனும் என்று கேட்டு வாங்கி இருக்காங்களாம்? அட அட.. என்ன ஒரு அப்பா மகள் உறவு நினைக்கும் போதே புல்லரிக்குது.. (கவனிக்க வேண்டிய விடயம் நான் அரிக்குது என்று சொல்லல..!!!) தான் பண்ணும் எல்லாம் காரியங்களுக்கும் ஒரு விதண்டாவாத விளக்கம் கொடுக்கும் கமல் முன்கூட்டியே முத்தம் பற்றி தனது ரசனைக்கு ஏற்றால் போல விளக்கம் கொடுத்து விட்டார். இனி இது பற்றி என்ன சொல்ல முடியும்.

கமலுக்கு பிறகு அடுத்து யாரு தனது ஒவ்வொரு படங்களிலும் முத்த காட்சிகளை தத்துரூபமாக தரப்போகின்றார்கள்? என்ற கேள்விக்கு யோசிக்காமலே உடனடியாக பதில் சொல்லிவிட முடியும் அது... அது நம்ம சிலம்பரசன்(சிம்பு) தான். ஆனால் இந்த உதடு கடிக்கும் வீர விளையாட்டில் நானும் இருக்கணும் என்று யார்யா...ஆர்யா..!!! தானாகவே முன்வந்திருக்கின்றார். என்ன சொல்ல எல்லாம் ஒரு கொலைவெறி தான். (உங்களுக்கு என்ன நீங்கள் இஸ்டத்துக்கு இச்சு கொடுப்பீங்க ஆனால் அதை எல்லாம் எங்களுக்கு காட்ட மாட்டேங்குறாங்க அந்த சென்செர் காரனுகள்... இது நியாயமா?)

நீங்க சொல்லுறத பார்த்தா இதுக்கும் அப்பா... மகள்... உறவா சார்...!!!

கமல் ஹாசனைப் போன்று முத்த ஸ்பெஷலிஸ்டாக விரும்புகிறாராம் ஆர்யா. கோலிவுட் நடிகர்களில் முத்த காட்சிகளுக்கு பெயர் போனவர் உலக நாயகன் கமல் ஹாசன் தான். கமல் படம் என்றால் முத்தம் இல்லாமலா என்று கூறும் அளவுக்கு 'இச்' கொடுப்பதில் அவர் ஸ்பெஷலிஸ்ட். இந்நிலையில் கமல் வழியில் ஆர்யாவும் முத்த நாயகனாக விருப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறது. அவரது விருப்பத்தை அறிந்து தான் சேட்டை படத்தில் ஹன்சிகாவுடன் ஒரு முத்தக் காட்சி வைத்துள்ளார்களாம். இந்த காட்சி பற்றி ஆர்யா முதலில் ஓவராக பில்ட்அப் கொடுத்துள்ளார். இதனால் அந்த காட்சி ஆபாசமாக இருக்கும் என்று செய்தி பரவியது. இது குறித்து அறிந்த ஆர்யா தற்போது முத்தக் காட்சி பற்றி தன்னிடம் கேட்பவர்களிடம் தானும், ஹன்சிகாவும் நடித்த முத்தக் காட்சி ஆபாசமாக இருக்காது. அது காதல் முத்தம் என்று கூறி வருகிறாராம். (அட...அட... இது எல்லாம் வரலாற்றில வரணும் பாசு...வரணும்..!!!)

'கடல் மீன்கள்' என்று ஒரு படத்தோட டிரைளர் வந்ததும் வந்திச்சு... 'கிஸ்' அடித்திட்டு கருணாநிதி-குஸ்பு தொடக்கம் ஆர்யா-ஹன்சிகா வரைக்கும் அந்த டயலாக்ஐயே சொல்லி தப்பிகொள்கின்றார்கள். அது என்னன்னாக்க 'மகளை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் என்பது காமத்தில் சேராது என்று..' யோ..யோ.. கடல் மீன்கள் டிரைக்டர் நீர் படம் நல்லா இருக்கனும் என்று அந்த வசனத்தை படத்தில வைத்தா பாவி பயலுக்க எல்லாம் உம்மா கொடுத்துட்டு உம்மட வசனத்தை யுஸ் பண்றாங்கப்பா..!!! எப்படி... எப்படி... முத்தம் காமத்தில் சேராதோ? டேய் டேய் காமத்தின் ஆரம்பமே முத்தம் தான் என்று அவரே சொல்லி இருக்கார். (இப்படித்தான் யார் சொன்னது என்று தெரியாட்டில் அவர் என்று சொல்லி சமாளித்திடனும்..) இது சரி பரவவில்லை முத்தம் உதட்டில கொடுத்தால் கூட அது தப்பில்லையாம். ஒருவருடைய எச்சி மற்றவருக்கு போகும் அளவுக்கு அழுத்திக்கொடுத்தால் தான் தப்பாம்.. (ஆமா ஆமா இப்ப சட்டத்தில இதையும் சேர்த்திருக்காங்க..! முத்தம்.. அதை எங்கை கொடுத்தா என்ன அதுக்கு பேர் முத்தம் தான்..!!)

அப்ப தெரியாமல் தான் கேட்கிறேன்... இதுக்கு என்ன உங்க ஊர் ல என்ன பேரு..?

பாருயா பாரு... அண்ணைக்கு "சட்டம் என் கையில்'' படத்தில் இச்சை கொஞ்சம் குறைத்திருந்தால் இப்ப இந்த (???) வளராத வயசில அவன் இப்படி அன்ரியா வாய கடிப்பானா? எல்லாம் மூத்தவர்கள் செய்த தப்பு இப்ப அவன் வாயை கடித்துட்டான் என்று நயன்தாரா தொடக்கம் அன்ரியா வரைக்கும் குற்றம் சொல்றது. இது எந்த வகையில் நியாயம்.? (ஆக மொத்தத்தில் அனிருத்துக்கு ஒன்னுமே தெரியாது... எல்லாம் அன்ரியா அக்கா தான் முத்தம் காமத்தில் சேராதுன்னு சொல்லி... பசக்கு பசக்கு என்று 'உம்' கொடுத்திரிச்சு... அப்டித்தானே அனிருத்..!!!) கீபோர்ட் ஐ பிளே பண்ணுன்னு சொன்னா இந்தாளு மவுத்தோகன் வாசிச்சுகிட்டு இருக்கு..!!! சத்தம் இங்க வரைக்கும் கேட்குது.!!!

முத்தம் என்பது இன்றைய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு விடயம்.. இப்படி அதனை தவிர்க்க முடியாத ஒரு காரணியாக மாற்றியது ரசிகர்களாகிய நாங்கள் தானே. குற்றம் சொல்ல வேண்டும் என்றால் ஓட்டு மொத்தமாக எல்லோரையும் தான் சொல்ல வேண்டும். அதுக்க அந்த முத்த காட்சிகளையும் குறைத்து படம் எடுக்கவும் சொல்ல முடியாது. அப்படி எடுத்தால் எதிர்பார்ப்பை  இழக்க செய்தது போல ஆகிவிடும். ஆக மொத்தத்தில் இதனை இப்படியே விட்டு விடுவதே நல்லது. முத்த கொடுத்தது கமல் பிழையா இல்லை முத்தம் கேட்டது டீடீ பிழையா என்றா வாதமும் தேவையில்லாததே. இது சம்மந்தமாக அதிகமாக பேசினால் வக்காளத்து வாங்க நிறைய பேர் வருவார்கள். (ஆனால் ஒண்ணு மட்டும் கமல் சார்... என்னை போன்றவர்களின் வயித்தெரிச்சல் மட்டும் உங்களை சும்மா விடாது. அது எப்படி சார் நீங்க மட்டும் வளைத்து வளைத்து 'கிஸ்' அடிக்க நாங்க அதனை பார்த்துகொண்டு இருக்க முடியும்.)

பாருயா... அந்தாளு ஆரம்பித்து வைத்தது அவன்... அவன் போர்வையை போத்திகிட்டு கிளம்பிட்டான்..!!!

கொடுக்குறதுக்கு அவங்க தயாராக இருக்காங்க.. வாங்குறதுக்கு இவங்க தயாராக இருக்காங்க.. நடுவில விலக்கு... (விளக்கு இல்லை...விலக்கு..) பிடிக்கும் வேலை எதுக்கு... நல்ல மஜா சீன் மச்சான் என்று என்ஜாய் பண்ணீட்டு போகவேண்டியதுதான். இதை எல்லாம் தட்டிக்கேட்க அந்நியனையா கூப்பிட முடியும். அப்படி கூப்பிட்டாலும் வந்திடவா போறார். அவர் எந்த புதருக்க சதாவோடா பிஸி ஆக இருக்காரோ தெரியலை. அட போங்கப்பா... நீங்களும் உங்க முத்தமும்... கடைசியா ஒண்ணு சொல்லிகிறேன்.. வெருமனையே புகைப்படங்களாக முத்தங்களை வீணடிக்காமல் ரெண்டு மூணு நிமிட காணொளிகளாகவும் விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே..!!!

கமலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு பெண்களை பேசவிட்டு, கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க என்று அவங்க ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்பளித்த விஜய் டிவி... நாளையே சமந்தாவையோ காஜலையோ நிகழ்ச்சிக்கு அழைத்து,எம்மை போன்ற தீவிர விசிறிகள் முறையே கட்டிப்பிடித்தல்,முத்தம் கொடுத்தல் போன்ற ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்பொன்றை உருவாக்கி கொடுக்குமா?

'I want a kiss and a hug from u dear' என்று அப்போது நாங்கள் சமந்தாவிடம் கேட்க முடியுமா? கேட்டால் இதே சிரிப்போடு நீங்களும் நிகழ்ச்சியை ரசிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்..! அதென்னையா அவருக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம்..? சரி... சமந்தா/காஜல் வேணாம் டீடீ ஆவது?


"கமல் கொடுத்தால் அது முத்தம் அதையே நாங்கள் கொடுத்தால் குற்றமா???"

Post Comment

4 comments:

 1. //சரி... சமந்தா/காஜல் வேணாம் டீடீ ஆவது?// semma line boss

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சொல்லி இருக்கலாம் அந்த டீடீ பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று சொன்னாய்ங்க ஏன் நம்மளால ஒரு பொண்ணு வாழ்க்கை நாசமா போவான் என்று விட்டுடன்...:P

   Delete
 2. nanba.... athu vanthu VIJAY TV VJ'S pirachchanai athula ungala maathiri visirigalayellam vida maattaanga....

  ReplyDelete