Sunday, June 30, 2013

"தலைவா" COPY அடிப்பதில் உனக்கு நிகரில்லை...!!!

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!!!

விஜய்..விஜய்.. ஜெய்கோ..!!!

இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலு‌ம், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் FIRST LOOK ஐ வைத்து, மச்சான் இது ஆங்கில(தெலுங்கு) படத்தின் காப்பி என்று பேசிக் கொள்வதைப் கேட்கும் போது இயக்குனர்களின் நிலமையை யோசித்து பாருங்க.. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பே‌ர், இந்த படம் எந்தப் படத்தோட காப்பி என்று பார்க்க வருவதாகதான் தெரிகின்றது. அதிலும் 80 வருட பாரம்பரிய தமிழ் சினிமாவில் அதிகம் உல்ட்டா பண்ணும் பாணியை தனக்குரியதாக்கி வைத்திருப்பவர்.. டாக்டர்... இனிய, இதய, இளைய தளபதி என்று பல பட்டங்களை தன் பக்கம் (வாங்கி)வைத்திருக்கும் அண்ணே.. இப்பத்தைய ப்ரோ(BRO).. என்றும் என்றென்ரும் எங்கள் ‘விஜய்’ அண்ணன் தானுங்கோ..!!!

இவர் பெயரை சொன்னால் விசில் சத்தங்கள் கேட்கின்றதோ இல்லையோ?நிறைய தெலுங்கி படங்களின் டைட்டில் சத்தம் இருக்கும்... இவர் பண்ணிய சே(வே)ட்டைகளை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்... அதுக்கு இவர் சினிமா உலகத்துக்கு வந்த ஆரம்ப காலத்துக்கே போய்யாக வேண்டும். அப்பாவின் அடைக்கலத்தில்தான் இவரின் சினிமா வாழ்க்கை தொடருகின்றது ஒரு புறம் இருக்க... ஹிட் அடிக்கும் தெலுங்கு படங்களின் உதவியுடந்தான் இவர் இன்னும் நீடித்து நிற்கின்றார்... ஆக மொத்தத்தில் இவர் சினிமாவில் நீடித்திருக்க ஏதோ ஒரு (இன்னொருவரின்)திறமை தேவைப்படுகின்றது... (சரி.. சரி.. புறாக்கு மணி அடித்தவர் போல.. அதிகம் மொக்கை போடாமல் நேரடியாக விடயத்துக்குள் போவோமா..!!!)

சத்தியமா நான் சொல்லலீங்கோ..எல்லாம் கவுண்டர் தானுங்கோ!!! 

விஜய்க்கு நல்லதோர் மார்க்கெட்டை உருவாக்கித் தந்த முதல் படம் பூவே உனக்காக. இந்தப் படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சி மலையாளப் படமொன்றிலிருந்து உருவப்பட்டது. முதலில் மலையாளப் படத்தைப் பார்ப்போம். துளசிதாஸ் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த படம் ’மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி’. இந்தப் படத்தில் முகேஷ், சித்திக் இருவரும் நண்பர்கள்; முகேஷ் இந்து, சித்திக் முஸ்ஸிம்.. (ஆகா இந்த கப்ல பாட்ஷா படத்தின் கதை கசியுது..!!) சித்திக்கின் தந்தைக்கு, தனது மகன் தனது நண்பனின் பள்ளியில் வாத்தியாராக வேண்டும் என்று ஆசை. அந்த பள்ளி அவர்கள் ஊரிலிருந்து நெடுந்தொலைவில் உள்ளது. சித்திக்கிற்கோ வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசை. தந்தைக்கும் மகனுக்குமான இந்த கருத்து வேறுபாடு முற்றும் போது சித்திக் செய்யும் ஒரு கோல்மால்தான் கதை.

இந்தக் காட்சியை விக்ரமன் அப்படியே சுட்டு பூவே உனக்காக படத்தில் வைத்திருப்பார். விஜய் அந்த வீட்டின் வாரிசு அல்ல என்பதையும், அவர் அங்கு வந்ததற்கான காரணத்தையும் சங்கீதாவிடம் சொல்வதை ஒருவன் மறைந்திருந்து கேட்பான். அதை சொல்ல அவன் ஓடும் போது கத்தி எறிந்து விளையாடுகிறவனின் கத்தி அவன் தொண்டையில் செருகிக் கொள்ளும். அவனால் பேச முடியாமல் போகும். ச‌ரி, விக்ரமனும் துளசிதாஸைப் போல் யோசித்திருப்பார் என்ற நினைத்தா‌ல், மருத்துவமனை லட்டர் காட்சியும் அடுத்து அப்படியே வரு‌ம்‌, ஈயடிச்சான் காப்பி. மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி 1994 ல் வெளியானது. பூவே உனக்காக 1996. (இப்ப என்ன சொல்ல போகிறீர்கள் மக்கள்ஸ்...!!!)

வாயால..வட சுடும் எல்லொரும் வாங்க.. அண்ண எப்புடீ சுடுரார் என்ரு கொஞ்சம் பாருங்க...!!!

தெலுங்கு படங்களில் இருந்து சுட்டது பத்தாது என்ரு இப்போது உலகத்தரமாக COPY பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மாட்டிக்கொண்டது விஜயின் துப்பாக்கி திரைப்படம். இப்படி சுடுவது இயக்குநருக்கும், நடிகருக்கும்(மற்ற நடிகர்கள் இந்த இடத்தில் அவமானப்படவோ, கோபப்படவோ கூடாது...!!!) கைவந்த கலை என்று இது எல்லோரும் அறிந்த ரசகசியமே! இயக்குனர் முருகதாஸு தீனாவுக்கு பிறகு சொந்த கதை, திரைக்கதை என்றால் என்னவென்றே மறந்து போயிருக்கும் போல தெரியுதே.. (ஒண்ணு சீனா படத்தில இருந்து உருவுறார்... இல்லைன்னா ஆங்கில படங்களில் இருந்து சுடுறாரு!!!)கஜினி படத்தை தமிழ், ஹிந்தி என்று வெற்றிபெறச் செய்தாலும் அது ஏற்கெனவே ஹொலிவூட்டில் வெற்றி பெற்ற ’மெமொண்டோ’ என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும்..(சரி தலைவாவை விட்டு விட்டு சின்ன பொடியனை எல்லாம் அழ வைத்துக்கொண்டு...என்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவது புரிகின்றது... சரி மொக்கையை மொக்கை பொடுவம்...!!!)

நல்லா..தூக்குவியளே... இதை மட்டும் அந்த காலத்தில் இருந்து நல்லா பண்ணுங்க.. நீர் ஒரு தூக்கல் மணி திலகமையா!!!

அந்த ரெண்டு COPY KINGகுகளும் சேர்ந்து கொடுத்த படம்தான் து...பக்கி இல்லைங்க துப்பாக்கி...!!! இப்படத்தின் முதலாவது போஸ்டர் வெளியானபோதே போஸ்டருமாடா கொப்பியடிப்பாய்ங்க... கள்ளத்துப்பாக்கி குழுவினர் போட்ட வழக்கு.. ஒருபடியாக அதிகாரத்தை கொண்டு அந்த வழக்கு முடிந்து 3 நாள் கூட முற்றுப்பெறவில்லை. ’An Officer and a Gentleman’ என்ற ஆங்கில பட குழுவினரை சீண்டும் விதமாக இருந்தது துப்பாக்கி படத்தின் FIRST LOOK. 1982ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸ்சை அள்ளிக்கொடுத்த 'An Officer and a Gentleman' படத்தின் போஸ்டரை அப்படியே.. அதாவது படத்தின் கோணம் கூட மாறுபடாமல் அப்படியே... சுட்டு போட்டார்கள். (ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அது என்னாண்ணா... விஜய் இருக்கிற இடங்களில் COPY வேலை நடக்குதா இல்லை COPY வேலை நடக்குற இடத்திலே விஜய் இருக்கிறாரா?)

ஏற்கனவே ஏ.எல்.விஜய்யின் (இங்கேயும் விஜய்யா? போகிற போக்கை பார்த்தால் விஜய் என்றால் வெற்றி இல்லை COPY என்று அர்த்தமாக்கிவிடுமோ! ) ’ஐ எம் சாம்’ படத்தின் தமிழ் பதிப்பாக வெளிவந்த தெய்வத்திரு(ட்டு)மகள் என்ற கதை மறைவதற்குள் முருகதாஸ் துப்பாக்கி என்ற லைசன்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கியை வெளியிட்டார்! சரி அந்த பாவிதான் வாழ்க்கைல விளையாடீட்டான் விட்டு தள்ளுவம் என்றால் அதுக்குள்ள ஏ.எல்.விஜய் ‘தலீவா’ பண்ண போறன் என்று கிளம்பினார். இது போதாத விஜய்யை கலாய்ப்போருக்கு சும்மா கழுவி கழுவி ஊத்த விஜய்யே நல்ல தலைப்புக்களை கொடுக்கின்ரார். ‘தலீவா” படமும்... (என்ன தலீவா... படமுமா... அட போங்கடா கொங்கனாங்கிகளா என்று நீங்க பொங்குவது புரியுது..!!!)

நமகின்னு வந்து சிக்குறானுகளே..சிக்கினா விடுவோமா..கழுவீ..கழுவீ  ஊத்துவமில்லே!!!

தெலுங்குல 2010 ஆம் ஆண்டு வந்து சூப்பர் ஹிட் படந்தாங்க இந்த “Leader”. இந்த படத்தின் முக்கிய நிய கதாப்பாத்திரமாக “ராஜீவ் காந்தியின்” கதையை மையமாக வைத்து படம் முலுமையான ஒரு அரசியல் படமாக இருக்கும். இப்போ இளைய தளபதியோட “தலைவா” பட ட்ரெயிலர பாத்தப்போ பளைய படி ஆரம்பிச்சுட்டாரு தலேவரு என்ரு நினைத்துக்கொண்டிருந்த போது சமூக வலைத்தளத்தில் பார்க முடிந்த ஒரு அரிய தகவல்தான் இந்த ‘லீடர்’க்கும் ‘தலீவா’க்கும் இருக்கும் தொடர்பு.தரமான ஒரு அரசியல் படம்! முன்பாதி ஜெட் வேகத்துல போச்சு பின் பாதி கொஞ்சம் அசைய மாட்டேன்னு அடம்பிடிச்சுது. ஆனாலும் அலுப்பு தட்டாத ஒரு படம். இரண்டேமுக்கா மணித்தியாளம் ஆசைய விடாம அதுவும் தெலுங்கு சரளமாக தெரியாதபோவெ பாக்க வைச்ச டைரக்டருக்கு ஒரு ஜே போடலாம்!!! அதுகும் தமிழில் முதல்வனை போல ஒரு படம்!!! அலுப்பில்லாத அரசியல் படம்!!!” இப்டீன்னு நண்பன் ஒருவன் சொன்னார். நமக்கு தமிழ்லிலேயே முக்க முடியாது.. இந்த கொடுப்பனவில் தெலுங்கில நான் பார்த்தன்னு சொன்னா நீங்க என்ன நம்பவா போரீங்க? 


தலைவா உங்க கூட ஒரே தலவலியா போச்சு..!!!

“தலைவா” படம் இந்த படத்தோட நேரடி ரீமேக்காக இருக்க பெருமளவு வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் இப்ப மட்டும் விஜய் முழு அரசியல் படத்தில் நடிக்க தேவையில்லை சும்மா ஒருக்கா ’தல’ காட்டினாலே போதும்... அண்ணாவின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு கொண்டுவருவதற்க்கு பலர் கழுகு கண்களுடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இது நன்ராக தெரிந்தும் மீண்டும் ஒரு முறை முட்டாள் ஆக மாட்டார் என்ர ஒரு சின்ன நம்பிக்கை இருக்கின்றது.. கவலை என்னன்னா இந்த படத்தில இருந்து எத்தன சீன்களை நம்ம ஏ.எல்.விஜய் சுட்டாரோ தெரியல... 

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, ப்ரியமானவளேகில்லி திருப்பாச்சி, போக்கிரி, வேலாயுதம், துப்பாக்கி, தலைவா...(பல படங்கள் விடுபட்டுக்கூட இருக்கலாம் மன்னிக்கவும்!!!) இப்படியான படங்களை கூசாமல் சுடார்.. இந்த அளவுக்கு விஜய்க்கு கதைக்கு அந்த காலத்தில் இருந்து பஞ்சம் ஆட்டுகின்ரது போல... என்னதான் இருந்தாலும் படங்களை சுட்டு போட்டார்கள் என்ன பண்ண நாம இணைய தளத்தில் சுடவில்லையா.. நாமலும்தான் COPY..PASTE பண்ணுறம் படம்தானே என்று விட்டுட்டு இருந்தா பாவிப்பய நமக்கு சவாலாக விளம்பரத்தில் கூட... அடங்கொப்பன்... கொக்க மக்கா? முடீல்ல..!!

ஐயோ..ராமா..ஏன் என்ன இந்த கழுசற (???) படைத்தாய்..!!! COPY அடித்து சாவடிக்குறான்..!!!

பின்குறிப்பு :- முன்குறிப்பில் தெளிவாக சொல்லியிருந்தும், இப்படி ஒரு பதிப்பை எழுதியது குற்றம்.. வருந்தத்தக்க செயல் என்று.. யாராவது புராணம் பாடுபவர்கள் யாராவது இருந்தால் தாராளாமாக பின்னூட்டல்களை பதிக்கவும்.. இது தொடர்பாக முழு விளக்கம் தர கம்பனி ஆவலுடன் காத்திருக்கின்றது..!!!
”COPYன்னா விஜய்... விஜய்ன்னா COPY...”

Post Comment

8 comments:

 1. உண்மையான விடயங்களை நகைச்சுவை உணர்வுடன் கொடுக்கும் ஆற்றல் உம்மை விட்டா வேற ஆளுக்கு இல்லைப்பா கோகுலன்... அருமையான கலாய்ப்பு..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்களிடம் இருந்து பெற்றறுக்கொண்டதுதான்... நன்றி உங்களின் பன்னூட்டலுக்கும் வருகைக்கும்...!!!

   Delete
 2. இயக்குனர்கள்,டிசைனர்கள்,இசையமைப்பாளர்கள்,ஒலி,ஒளிப்பதிவாளர்கள்,ப்ரொடியூசர்கள் விடும் தவறுகள்,காப்பிகள் எல்லாம் எப்படி நடிகர் மீதான விமர்சனமாகும்? விளக்கம் ப்ளீஸ்? :)

  ReplyDelete
  Replies
  1. Oru padam vetrikku palaper ulaippu irukkum, Aanal vetrikku pin anaivarin peyar naam kuripiduvathillai vijay padam hit yendru thane kuripidukirom appadi erukkayil intha copykku othulaikkum vijaykkum mukkiya pangu irukkirathu yenbathay marava vendam.

   Delete
  2. Oru padam vetriyil palaper ulaippu erukkayil vijayin peyar mattuma thooki niruthikirom. vetrikku porupetkkum vijaykku intha still copy adikkiroma yenbathay kuda ariyatha oru siru pillaya. ovvaru visayathilayum nammidam thani theramaya yosithaal vijay vithyasa yethirparpalaraga iruppar vijay oru sombari nadanathai mattum vaithu nadikan yendru peyar vaanga paavam rasigarkalukku athika pangu

   Delete
 3. இயக்குனர்கள்,டிசைனர்கள்,இசையமைப்பாளர்கள்,ஒலி,ஒளிப்பதிவாளர்கள்,ப்ரொடியூசர்கள் விடும் தவறுகள்,காப்பிகள் எல்லாம் எப்படி நடிகர் மீதான விமர்சனமாகும்? விளக்கம் ப்ளீஸ்? :)// அதே அதே... காரணம் சிம்பிள். சொறிதல்,புகைதல், எரிதல் எல்லாம் குறிப்பிட்ட நடிகரின் மீது இருக்கும்போது நீங்கள் சொன்னவர்கள் மீது குற்றம் சொல்ல எப்படி மனம் வரும் மைந்தன். அதுவும் ஒரு அஜீத் ரசிகனிடம் இருந்து இத்தகைய கருத்து வருவது இயல்புதானே...

  அதுவும் கடைசியில காப்பின்னு தல ஒன்று போட்டிருக்கிறாரே.... ஹா ஹா ஹா.. தம்பி ராச்சா.. அது விளம்பரம் ஐயா... அதை பத்து லாங்குவேஜ்ல எடுத்தாலும் ஒரே மாதிரித்தான் எடுப்பாங்க ஐயா :P பெட்டர் லக் நெக்ஸ் டைம்

  ReplyDelete
 4. இயக்குனர்கள்,டிசைனர்கள்,இசையமைப்பாளர்கள்,ஒலி,ஒளிப்பதிவாளர்கள்,ப்ரொடியூசர்கள் விடும் தவறுகள்,காப்பிகள் எல்லாம் எப்படி நடிகர் மீதான விமர்சனமாகும்? விளக்கம் ப்ளீஸ்? :)// அதே அதே... காரணம் சிம்பிள். சொறிதல்,புகைதல், எரிதல் எல்லாம் குறிப்பிட்ட நடிகரின் மீது இருக்கும்போது நீங்கள் சொன்னவர்கள் மீது குற்றம் சொல்ல எப்படி மனம் வரும் மைந்தன். அதுவும் ஒரு அஜீத் ரசிகனிடம் இருந்து இத்தகைய கருத்து வருவது இயல்புதானே...

  அதுவும் கடைசியில காப்பின்னு தல ஒன்று போட்டிருக்கிறாரே.... ஹா ஹா ஹா.. தம்பி ராச்சா.. அது விளம்பரம் ஐயா... அதை பத்து லாங்குவேஜ்ல எடுத்தாலும் ஒரே மாதிரித்தான் எடுப்பாங்க ஐயா :P பெட்டர் லக் நெக்ஸ் டைம்

  ReplyDelete
 5. காப்பியடிப்பதற்கு கூடிய விரைவில் காப்பிரைட் வாங்கச் சொல்லி, தலீவாவுக்கு வாழ்த்துக்கள், ஏனென்றால் காப்பியடிப்பதை பிறப்புரிமையாக வைத்திருப்பவர், நன்றி

  ReplyDelete