Wednesday, July 31, 2013

’தல’யின் “ஆரம்பம்” படத்தின் கதை என்ன? இதுதானா அது...!!!

ரஜினியின் படங்களுக்கு இருக்கும் வரவேற்ப்பை போலவே இப்போது அஜித்தின் படத்துக்கும் வரவேற்ப்பு இருப்பதை தல ரசிகர்கள் ‘மங்காத்தா’ படத்தின் வெளியீட்டின் போது நிறுபித்தார்கள். தல-53 என்று சொல்லப்பட்ட படத்தின் டைட்டிலை கண்டு பிடிப்பதே பெரிய பிரச்சனை; இப்போதுதான் அது ஓய்ந்தது. ஒரு படத்துக்கு பேர் வைக்க ஒரு வருஷமா? என்னு சலுத்துகாதீங்க மக்கள்ஸ்...இது சாதாரன ஹீரோவின் படமில்லையே...பிரபலங்கள் படம் என்றால் அப்படித்தான்...!!! சரி படம் பற்றியும் படத்தின் கதை பற்றியும் விஷ்னுவர்தன் என்ன சொல்லுகின்றார் என்று பார்ப்போம்...!!!

’தல’ ரசிகர்களின் பீலிங்...!!!

‘மாஸ் ஓப்பனிங்’… அஜித் ஸ்பெஷல். ஆனால், அவர் நடிக்கும் படத்துக்குத் தலைப்பு பிடிப்பதையே மாஸ் கொண்டாட்டம் ஆக்கிவிட்டது ‘ஆரம்பம்’ டீம்! 

Post Comment

ஹிந்திக்கு போகும் விஜய்; அதை தடுக்கும் ஷாருக்கான்...!!!

என்னதான் விஜயும் விஜயின் ரசிகர்களும் முதல் தரம், முதல் தரம் என்று மூக்கு வியர்க்க கத்தினாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது; ஆகவும் முடியாது! என்னதான் ஷாருக்கான் விஜய் T.Vயின் அவாட்டு நிகழ்ச்சியில் விஜயை புகழ்ந்தது போல பார்வையாளர்களுக்கும்; ரசிகர்களுக்கும் இருந்தாலும் அது உண்மையில்லை. பலரும் நியாபகம் வருவது 2007ஆம் ஆண்டு தீபாவளி தான். சரி என்ன அந்த தீபாவளியில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அதுதாங்க விஜயின் ‘அழு(ழ)கிய தமிழ் மகன்’ வெளிவந்தது. அது மட்டும் வந்திருந்தா பறவாயில்லை. கூடவே கொஞ்ச படங்களும் வந்தது. அதுதான் அவருக்கு வழமையை போல ஆப்பாக அமைந்தது.

படத்தோட பேர்ல மட்டும்தான்...!!!

Post Comment

Monday, July 29, 2013

தாலிகள் சொல்லும் சேதிகள் - ஆழம் அறியாத தேடல்...!!! பாகம்-01

இந்த பதிப்பில் முழுக்க முழுக்க தாலி, தாலியுடன் சம்பிரதாயங்கள் போன்றன மட்டுமே இருக்கும். பதிவின் நீளம் கருது இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். இந்த பதிவை எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்பதோ; எத்தனை பேரை சென்றடகின்றது என்பதோ எனது நோக்கம் இல்லை. எத்தனை நாட்களுக்குதான் சினிமா, ஹீரொ, ஹீரொயின் என்று புளிச்சல்களை எழுதிக்கொண்டே இருக்க முடியும். என்னதான் சொன்னாலும் அந்த பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பை போல எந்த காத்திரமான பதிவுக்கும் வாசகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்காது. இருந்தாலும் இவை பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது அவா..!!! சரி பதிப்புக்குள் செல்வோம்...!!! தாலி, எனும் பொழுது ஒன்பது இழைகளுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம் என்று முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்!!!

தாலியின் பகத்துவம்!!!

Post Comment

தாலிகள் சொல்லும் சேதிகள் - ஆழம் அறியாத தேடல்...!!! பாகம்-02

பதிப்பின் பாகம்-1 ஐ வாசிப்பதற்கு இந்த தொடுப்பை சொட்டுங்கள்...!!!
சரி விட்ட ஒன்பதின் பெருமைகளை தொடருவோம்..!!!

அடியார்களின் பண்புகள்
1.எதிர்கொள்ளல், 2.பணிதல், 3.ஆசனம் (இருக்கை) தருதல், 4.கால் கழுவுதல், 5.அருச்சித்தல், 6.தூபம் இடல், 7.தீபம் சாட்டல், 8.புகழ்தல், 9.அமுது அளித்தல்,

விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்கள்
1நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 2.க்ஷணபகர், 3.அமரஸிம்ஹர், 4.சங்கு, 5.வேதாலபட்டர், 6.கடகர்ப்பரர், 7.காளிதாசர், 8.வராகமிஹிரர், 9.வரருசி

அடியார்களின் நவகுணங்கள்
1.அன்பு, 2.இனிமை, 3.உண்மை, 4.நன்மை, 5.மென்மை, 6.சிந்தனை, 7.காலம், 8.சபை, 9.மவுனம்

நவ நிதிகள்
1.சங்கம், 2.பதுமம், 3.மகாபதுமம், 4.மகரம், 5.கச்சபம், 6.முகுந்தம், 7.குந்தம், 8.நீலம், 9.வரம்

பிரதான விருத்தம்
1.நவவித பக்தி 2.சிரவணம், 3.கீர்த்தனம், 4.ஸ்மரணம், 5.பாத சேவனம்அர்ச்சனம், 6.வந்தனம், 7.தாஸ்யம், 8.சக்கியம், 9.ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள்
1.குமார பிரம்மன், 2.அர்க்க பிரம்மன், 3.வீர பிரம்மன், 4.பால பிரம்மன், 5.சுவர்க்க பிரம்மன், 6.கருட பிரம்மன், 7.விஸ்வ பிரம்மன், 8.பத்ம பிரம்மன், 9.தராக பிரம்மன்

Post Comment

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்...!!!

பட்டத்து யானையாவது விஷாலுக்கு கை கொடுக்குமா???

கொஞ்சம் படத்தைப்பற்றி :- மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  காமெடி மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும்  மொத்தம் 850 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி தெருவிக்கின்றன. ’பட்டத்து யானை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன்.

Post Comment

சிம்புக்கு ஹன்சிகா இன்னொரு நயன்தாரா போல - செம கிளுகிளுப்பு..!!!

என் அருமை சினிமா பக்தகோடிகளே!!! எல்லோருக்கும் இனிய வணக்கம்... நாங்கள் எல்லம் எப்படியானதொரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று புரியவில்லை(இந்த டயலொக் உரிமையாளர் மனுஷபுத்திரன் அவர்களுக்கு நன்றி...!!!). சினிமா பக்கம் போனாலே ஒரே அழுகிய மீன் செத்த வாடைதான் வருகின்றது. எல்லொரும் அலப்பரை பண்ணுகின்றார்கள் என்றால் நம்ம விரல் ஆட்டுறதில் மன்னன் எங்கல் ‘வேட்டை மன்னன்’ பங்கு தமிழ் சினிமாவுக்கு அதிகமாகவே இருக்கின்றது. அதாகப்பட்டது என்ன வென்றால் மார்கழி மாதத்தில் நாய்களுக்கான சீசன் போல விரல் மன்னன் சிம்புவுக்கும் ஒரு சீசன் உண்டு. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.(வாங்கையா எல்லாரும் லைன்ல வரணும்..) முழுசா 25படம் கூட நடித்து முடியல அதுக்குள்ள புனைப்பெயர்களுக்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை. சரி நாம நம்ம மேட்டருக்குள் போவோமன்..!!!

ஒரு கிஸ் அடிக்க பலகோணத்தில திங் பண்ணுவார் போல...!!!

Post Comment

Tuesday, July 23, 2013

சூர்யா - பிறந்தநாள் ஸ்பெசல்(BIRTHDAY SPECIAL)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!


இப்ப எல்லாம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களை நஸ்டப்படுத்தாத நடிகர்கள் யாரெண்டு பார்த்தா ரஜினிக்கு அப்புறம் எல்லா சினிமா விற்பன்னர்களும் முணுமுணுப்பது சூர்யாதான்... சூர்யாவிடம் கால்சீட் பெற்றுவிட்டால் கோடிகளில் இலாபத்தில் புரளலாம் என்பது அவர்களின் எதிர்பாப்பு.. உண்மையும்கூட! தொட்டதெல்லாம் பொன் என்று உச்சத்துக்கு சென்றார் சூர்யா. அதீத நம்பிக்கை, அதிகூடிய முயற்சி என்று சினிமாவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த சூர்யா இன்று(2013.07.23) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவர் சினிமாவுக்குள் நுழைந்து 16 ஆண்டுகள் முடிவடைகின்றன. நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் திரையை பகிர்ந்துகொண்டு சூர்யா தனது திரையுலக வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தார். பல கஸ்டங்கல், பல தோல்விகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளியாக திகழ்கின்றார். சரி பிறந்தநாளுக்கு வாழ்த்தியாச்சு... இனி கொஞ்சம் சினிமா பக்கம் போய் அலசிப்பார்ப்பம்...!!!

Post Comment

Thursday, July 18, 2013

மரியான் விமர்சனம்..!!!

ராசா... கடல் ராசா...!!!!

தனுஷ், பார்வதி மேனன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படத்தினை பரத்பாலா இயக்கியிருக்கின்றார். பெரும் பாலான படங்கள் இந்த பாணியில் படம் வருவதில்லை. ‘நமக்கு எதுக்கு வீண் பொல்லாப்பு..’ என்று அரைத்த மாவையே அரைத்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் ’மரியான்’ வழமையான மசாலா படங்களின் இருந்து கொஞ்சம் வித்தியாசம். தமிழில் சர்வதேச பிரச்சினைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை. அப்படி வந்தால் கமல் போல எந்த பிரச்சனை வந்தாளும் தாக்குப்பிடிக்க கூடியவர்களிடம் இருந்துதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலைப்பாட்டை உடைத்தெறிந்து வெளியாகியிருக்கும் படம் தான் தனுஷின் மரியான். மிகவும் பலமான கதைக்களம் தான் இந்த மரியான். ஒரு தனி மனிதனின் எமோஷனை காட்டும் படம், காதல், ஆக்‌ஷன் என்று எல்லா கோணத்திலையும் படத்தை பின்னி எடுத்திருக்காரு இயக்குநர்...!!!

Post Comment

Tuesday, July 16, 2013

அஜித்-53 டைட்டிலே பரபரப்புத்தானே...!!!

எப்போதும் அஜித்துக்கு இறங்கு முகம் இல்லை. அதாவது அஜித் ஹிட் கொடுத்தாலும் சரி.. பிலாப் கொடுத்தாலும் அஜித்தின் மார்க்கட் ஒரு போதும் ஆட்டம் கண்டதே இல்லை. முந்தய காலத்தில் எல்லாம் அஜித்தின் பட வெளியீட்டில்தான் சஸ்பன்ஸ், பரபரப்பு இருக்கும் இப்ப அதை விஸ்னுவர்தன் முழுமையாக மாற்றிவிட்டார். இப்ப தலைப்புக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. விஸ்னுவர்தன் படம் எடுக்க ஆரம்பித்த நாளில் இருந்து படம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த காலம் வரை படத்தின் தலைப்பு பற்றி பல வதந்திகள் வந்தன. இன்னும் வந்திகொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்ய அஜித்தின் பட தலைப்பை ’நாங்கள்’தான் முதலில் வெளியிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது..!!!

டைட்டில் இன்னும் வைக்கல...!!!

Post Comment

Saturday, July 13, 2013

விஜய்யை சீண்டிப் பார்க்கும் பிரபுதேவா..!!!

யார் ரசிகன் என்பது முக்கியம் இல்லை. ஆனால் ஒருவரின் திறமையை தனிப்பட்ட வெறுப்புக்காக கேவலப்படுத்துவது நல்லது இல்லை. அதுகும் பிரபுதேவா போன்ற மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்த ஒரு சக திறமைசாலிக்கு நல்லது இல்லை. என்னவோ தெரியவில்லை பாரதிராஜாவுக்கும் பிரபுதேவாவுக்கும் காலம் சரியில்லை போல இருக்கின்றது. பாரதிராஜா கதை எல்லோரும் நன்கு அறிந்ததே.! ஆனால் இப்ப தேவா கொடுத்த பேட்டி அவரையும் குழப்பகாரர்கள் லிஸ்ற்ரில் சேர்த்து விட்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ரெண்டு பேரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். தேவா இவரை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கின்றார். அதில் போக்கிரி என்ற படம் வசூல் அள்ளிய படம். அதே போல இவர்கள் இருவரும் இணைந்த அடுத்த படம் வில்லு. வில்லு பத்தி சொல்லத்தான் வேணுமா? இந்த இடத்தில்? சரி என்ன மேட்டர் என்று பார்ப்பம்..!!! 

நல்ல டான்ஸ்சர்...இப்ப கிழியுது டவுசர்...!!!

Post Comment

Thursday, July 11, 2013

சப்ப பிகரு சமந்தா; நச்சு பிகரு நஸ்ரியா...!!!

இந்த பதிவு முழுக்க முழுக்க சமந்தாவை கலாய்ப்பதற்காக எழுதப்படும் பதிவாகும். இந்த பதிவினை வாசித்த பின்பு சமந்தாவின் எந்த ஒரு ரசிகனும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். (சமந்தாவுக்கு ரசிகர்கள் இருப்பதே பெரிய விசயம் இதில தற்கொலை... ரைட்டு விடு.. நீங்க கடுப்பாவது புரியுது...!!!) தமிழ் மொழியில்(ஆமா ஆமா சமந்தா உலக மொழிகளில் எல்லாம் நடிக்கும் நடிகை தானே... குறிப்பிட்டு தமிழ் மொழி என்று சொல்லத்தான் வேணும்...இப்படி டென்ஷன் ஆகாதீங்க பாசூ...)உருப்படியாக ஒரு படம் ஒரு படம் கூட நடித்து ஹிட் கொடுக்கவில்லை அதுக்குள் சித்தார்த்துடன் கிசுகிசு..!!! எங்க இருந்துதான் கூடுறாங்களோ தெரியவில்லை. எச்ச சோற்றுக்கு காகம் வருவது போல வந்து தொலைகின்றார்கள்...(பாருயா...காகம் என்று திட்டியதும் காகத்து வாற கோபத்தை...!!!) சரி சரி ஆரம்பத்திலேயே போட்ட மொக்கை போதும்.. இனியாவது தலைப்புக்குள் போவோமா?

ம்ம்ம்...ஒரு பக்கமா பார்த்தா...!!!

Post Comment

Wednesday, July 10, 2013

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-01

இந்த பதிவு நிட்சயமாக நீண்ட பதிவாகத்தான் இருக்கும். பதிவில் சம்மந்தப்பட்டவர்களின் முக்கிய படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் பதிவு கொஞ்சம் இல்லை அதிகமாகவே நீண்டதாகத்தான் இருக்கும். சரி அப்படி என்னதான் எழுதப்போகின்றேன் என்று பார்ப்போம். அதாவது உலகில் பல பிரபலங்கள் இருந்திருக்கலாம் ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தான் மறக்காமல் நியாபகம் வைத்திருப்போம். அப்படியானவர்களில் அதிகம் எதிர் பார்க்கப்படும் முதற்பத்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதுகின்றேன். இதிலும் என்ன ஒற்றுமை என்றால் இந்த பத்து பேரின் இறப்பிலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த பிரபலங்களில் அதிகமானவர்களின் இறப்பு எப்படி நடந்தது? என்று சரியான ஒரு முடிவினை சொல்ல முடியாததாகவே இருக்கும். எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் இறந்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் போல் இருக்கின்றது. சரி அதிகம் பேசாமல் பிரபலங்களின் முடி(க்கப்பட்ட)ந்த வாழ்க்கை வரலாற்றினை பார்ப்போம்...!!!

Post Comment

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02

என்னால் அனுமானிக்கப்பட்ட பிரபலங்கள் பத்துப்பேரில் கடைசி ஐந்து பேரின் வாழ்க்கை சுவாரசியங்களை(பாகம்-01 இனை) படிக்க இங்கே சொட்டுங்கள்...!!!

05. சுபாஸ் சந்திர போஸ்

”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது. ஆக மொத்ததில் இவர் இறந்தாரா? இல்லையா? என்பதே இங்கு சந்தேகம்..!!! உண்மையான இந்திய சுதந்திர போராளி..!!! உண்மையானவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டார்கள் என்பது உண்மைதான் போல இருக்கின்றது.


இந்திய சுதந்திர போராளி...!!!

Post Comment

Thursday, July 4, 2013

சிங்கம்-2 விமர்சனம் !!!

போஸ்டரிலேயே பயம் காட்டுறதுன்னா அது நீ தான்லே...!!!

ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம் சிங்கம். இதன் வெற்றியை தொடர்ந்து உருவாக்கிய படம்தான் சிங்கம் பாகம்-2 ஆரம்பத்தில் பலரின் கிண்டல்களை சம்பாதித்த இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஐ அடிக்கும் என்று சொன்னால் கிண்டல் செய்தவர்களுக்கு வியர்க்கத்தான் செய்யும் ஆனால் உண்மையும் இதுவே..!!! சிங்கம்-1 வெளிவந்த பொது நஸ்டத்தில் மூடிக்கிடந்த பல திரையரங்குகள் திறக்கப்பட்டதும் தற்போது வரைக்கும் போட்டதை எடுத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது முழு காரணமும் சிங்கம்-1 தான்லே...!!!

Post Comment