Wednesday, July 10, 2013

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-01

இந்த பதிவு நிட்சயமாக நீண்ட பதிவாகத்தான் இருக்கும். பதிவில் சம்மந்தப்பட்டவர்களின் முக்கிய படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் பதிவு கொஞ்சம் இல்லை அதிகமாகவே நீண்டதாகத்தான் இருக்கும். சரி அப்படி என்னதான் எழுதப்போகின்றேன் என்று பார்ப்போம். அதாவது உலகில் பல பிரபலங்கள் இருந்திருக்கலாம் ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தான் மறக்காமல் நியாபகம் வைத்திருப்போம். அப்படியானவர்களில் அதிகம் எதிர் பார்க்கப்படும் முதற்பத்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதுகின்றேன். இதிலும் என்ன ஒற்றுமை என்றால் இந்த பத்து பேரின் இறப்பிலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த பிரபலங்களில் அதிகமானவர்களின் இறப்பு எப்படி நடந்தது? என்று சரியான ஒரு முடிவினை சொல்ல முடியாததாகவே இருக்கும். எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் இறந்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் போல் இருக்கின்றது. சரி அதிகம் பேசாமல் பிரபலங்களின் முடி(க்கப்பட்ட)ந்த வாழ்க்கை வரலாற்றினை பார்ப்போம்...!!!


10. மைக்கல் ஜாக்சன்

புகழின் உச்சியில் இருந்த போது தனது செய்திகள் அடிக்கடி வருவதை போதையாக அருந்திய ஜாக்சன் நேரெதிரான காலத்தில் வரும் செய்திகளுக்காக இடிந்து போயிருப்பார் என்றால் மிகையில்லை. ஜாக்சன் இருந்தாலும் ஆயிரம் பொன் அவர் ஒழிந்தாலும் ஆயிரம் பொன் என்று சிறுவர்கள் மீதான பாலியல் விவகாரத்தில் ஊடகங்கள் நடந்து கொண்டன. நீதிமன்றத்திற்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பு வழங்கி ஆயுள் சிறையிலிருக்கும் ஜாக்சனது வாழ்க்கை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்தார்கள். இங்கு வெள்ளை நிறவெறியும் சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படித்தான் உலகை ஒரு காலத்தில் ஆடவைத்த கலைஞன் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டார். இதனை எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது ஆனால் இதுதான் நியம்!!!

அழகு...அழகு... இதுவல்லவோ அழகு...!!!

வழக்கிற்காக மனநிம்மதியை இழந்த ஜாக்சன் அதற்காக பெரும் செல்வத்தையும் இழந்தார். பண்ணை வீட்டையும் காலி செய்தார். ஆடம்பரத்தில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை வரும் என அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. வீட்டில் நிம்மதி இல்லை, வெளியே நடமாடினால் விசிரிகளினால் நிம்மதி இல்லை, தொழில் இல்லை, கலை இல்லை என்றால் அவர் எதை வைத்து வாழ்ந்திருக்க முடியும்??? போதை மருந்துகள், வலி நிவாரணிகள் மூலம்தான் அவரது இறுதி காலம் வேறு வழியின்றி நகர்த்தப்பட்டது. கட்டாயத்தின் மத்தில் வாழ்த்திருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. பரவியிருக்கும் செய்திகள் படி அவரது உடலில் இருந்த அளவுக்கு அதிகமான மருந்துகளே அவரது உயிரைப் பறித்திருக்கலாம் எனவும கூறப்படுகிறது.

உரு மாறத்தொடங்கிய நடன புலி..!!!

ஆனாலும் ஆயுள் கைதியாக மருந்துகளின் உதவியால் ஒரு பைத்தியக்காரனைப் போல வாழ்ந்து வந்த ஜாக்சனை இசை நிறுவனங்கள் விடுவதாக இல்லை. ஒரு சிறிய காலம் அந்த நிறுவனங்களை ஆட்டிப்படைத்த அந்த கலைஞன் இப்போது அந்த நிறுவனங்களுக்கு மறுப்பேதும் சொல்லும் நிலைமையில் இல்லை. ஐம்பது வயது, முடி இல்லாத தலை, உரியும் தோல் துணுக்குகள், மருந்தின்றி நடமுடியாத நிலை, உடல் எடை குறையும் நோய், இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சினைகளோடு இருந்த அந்த கலைஞனை ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்திரவிடுவதற்கு எத்தனை கொடூர மனம் வேண்டும்??? இவர்கள் எல்லாம் மனிதர்களா?? என்று நினைக்கும் அளவுக்கு அநியாயமாக நடந்து கொண்டார்கள். வந்த வரை இலாபம் என்பதால் முதலாளிகள் ஜாக்சனது கட்டாய நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பொழுது போக்கு தொழிலில் அங்கமாகிப் போன இசைச் சந்தையை விரிப்பதற்கு, புதிய தலைமுறைக்கு பழையதை அறிமுகம் செய்து ஈர்ப்பதற்கு முதலாளிகள் நினைத்திருக்கலாம்.

இறுதியின் ரசிகர்களின் உள்ளத்தை உருவ வைத்த ”போப்” மன்னன்!!!

இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் என்னென்ன விதிகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விவரங்கள் பிரேதப் பிரிசோதனையைவிட முக்கியமானது என நமக்குத் தோன்றுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சிங்கத்தை அடித்து வேலை வாங்கும் ரிங் மாஸ்டர் வேலையை முதலாளிகள் செய்தனர். ஆனால் சிங்கமோ வேலை செய்ய இயலாமல் செத்துப் போனது. எங்கும் பரவியிருக்கின்றது முதலாளித்துவம். அரசியல் தொடக்கம் பொழுதுபோக்கு வரை எங்கும் எதிலும் பிரபலங்கள். MJயின் வாழ்க்கையும் கூட எப்படி? யாரால்? முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று இன்று வரை யாராலும் கூற முடியாமல் இருக்கின்ரது. 

09. சதாம் ஹுசைன்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிந்து போராடிய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈராக்கிய பொம்மை அரசினால் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சதாம் மீதான நீதிமன்ற விசாரணை ஒரு நாடகமாகவே நடந்தது. சதாமுக்கு ஆதரவாக பேசிய நீதிபதி மாற்றப்பட்டார். சதாமுக்காக வாதாடிய வக்கீல்கள் கொல்லப்பட்டனர். இப்படி விசாரணை நடந்த பொழுதே சதாமின் முடிவு தெரிந்து விட்டது. சதாம் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவரும் ஒரு அடக்குமுறையாளரே. சதாமின் 25 வருட ஆட்சியில் பலர் அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார்கள். ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதற்காக ஈராக்கிய மக்கள் சதாமுக்கு தண்டனை வழங்கி இருந்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஈராக்கிய மக்கள் சதாமை தண்டிக்கவில்லை. அமெரிக்காவே சதாமை கொலை செய்தது.

சீருடையில் இருந்தால் இராணுவ ஆட்சியா???

சதாம் உசேன் 23 ஏப்ரல் 1937இல் திக்ரித்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்து சில மாதங்களிலேயே இவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. சதாமின் தாயார் அவரது கணவரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார். இதனால் அந்தப் பகுதி மக்கள் சதாமின் பெற்றோரை மிகவும் அவமானப்படுத்தியும் கேலியும் செய்தார்கள். இதனால் மனமுடைந்த சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இங்கே சதாமின் பிறந்த தினம் குறித்தும் ஒரு மர்மம் நிலவுவதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய மக்களின் பெரும் வீரராக போற்றப்படும் சலாவுதீனின் 800வது பிறந்த நாளும் சதாம் பிறந்த திகதியாக சொல்லப்படுகின்ற அதே நாளில் வருகிறது. சதாமின் எதிர்ப்பாளர்கள் இந்த பிறந்த தினம் சதாமினால் பொய்யான முறையில் அறிவிக்கப்பட்டதாக சொல்வார்கள். 

1956இல் தடை செய்யப்பட்டிருந்த பாத் கட்சியில் சதாம் இணைந்து கொண்டார், 1958இல் ஈராக் மன்னரை எதிர்த்து அவரது இராணுவ அதிகாரிகள் புரட்சி செய்தனர். பல போராட்டங்கள் பல எதிர்ப்புக்களுக்கு பிறகு 1969இல் உபஜனாதிபதியாக ஆனார். உபஜனாதிபதியாக இருந்த சதாம் 1973இல் ஈராக் இராணுவத்தின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இப்படி அரசு, இராணுவம் என்ற இரண்டு அதிகார மையங்களிலும் செல்வாக்குப் பெற்ற சக்தியாக இருந்த சதாம் 1979இல் பாத் கட்சியின் தலைவராக ஆனதோடு அதே ஆண்டு ஈராக்கின் ஜனாதிபதியாகவும் ஆனார்.

முன்னேற்றம் பிடிக்காதவர்களால் இதைத்தான் செய்ய முடியும்..!!!

நிலக்கீழ் அறையில் இருந்த சதாம், இருதிக்கட்டத்தின் அமேரிக்க இராணுவத்திற்க்கு முன்னால் வந்து நின்று ‘நான் தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் சதாம், ஈராக்கின் அதிபர் சதாம்’ என்று சொன்னார். சதாமிற்க்கு தெரியும் தப்பிக்க முடியாது. ஏன் ஒழிந்து அழிவான். நிமிர்த்தே சாவோம் என்று துணித்தார். ஆயிரம் நடந்திருக்கலாம். சதாம் என்ற ஒரு தனி மனிதனின் இந்த அளவுக்கான போராட்டம் சரியானதோ இல்லை அனேகமானவர்களின் கருத்தை போல பிழையானதோ...? அது எதுவாக கூட இருக்கட்டும். போராட்டம்...அரசு...அரசாங்கம் இந்த அத்தியாயத்தில் சதாமுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு...!!!

08. கடாபி

ஒரு தனி மனிதனால் ஒரு நாட்டின் முழு அதிகாரத்தையும் 42ஆண்டுகள் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். என்றால் இதை யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் என்ன செய்ய முடியும் நம்பித்தான் ஆக வேண்டும். ’கடாபி’ என்ற அந்த ஒரு தனி மனிதன் ’லிபியா’ என்ற சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் உள்ள நாட்டை ஆண்டான். வறண்ட தரைகள் சொல்லும் அந்த நல்ல உள்ளத்தின் ஆட்சியை! இங்கும் அமேரிக்க ஏகாதிபத்தியம் தன் சிரங்கு பிடித்த அரசியலை நுழைத்தது. சதாமை தொடர்ந்து துவண்டு இருக்கும் மக்களை நிமிர்த்தும் மன்னனாக கடாபி உலகின் இன்னொரு மூலையில் இருந்தார். இது பொறுக்காத முதலாளித்துவம் ஆரம்பித்தது லிபியாவிலும் தங்களது புளுத்துப்போன அரசியலை!

அனுபவம் புதிது...!!!

இவர் 1942.06.07 பிறந்தார். இளம் வயதில் லிபிய இராணுவத்தில் சேர்ந்தார். தனி நாடு நிருவ வேண்டும் என்பது இவரின் அவா. 1966 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு இராணுவ பயிற்சிக்கு பெற்ற பின்பு நாடு திரும்பி தனது சகாக்களுடன் தனி நாட்டிற்கான போராட்டமாக இராணுவ புரட்சியை மேற்கொண்டார். தக்க சந்தர்பமாக அந்த கால லிபிய மன்னர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார் இதனை பயன்படுத்தி நாட்டினை கைப்பற்றினார். இதே போல் ஒரு சூழ்ச்சியின் தானும் சிக்குவேன் என்று கடாபி கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார். இதே போல் ஒரு சூழல் அமைந்தது எமனாக அமேரிக்கா வந்து நின்றது; கடாபியை!!!

முதலாளித்துவமும் இயலாமையும்...!!!

42 ஆண்டுகள் தனக்குள்ளேயே ஆட்சியை வைத்திருதார். என்பதற்காக சொந்த நாட்டு மக்களே இராணுவ புரட்சி என்ற பேரில் ஒரு குடும்பத்தையே கொன்று குவித்தது. கடாபி நல்லவரா இல்லை கெட்டவரா என்ற வாதத்திற்க்கு வரவில்லை. ஆனால் இந்த அளவுக்கு திறமை இருக்கும் ஒருவரை நாம் மறந்து விடக்கூடாது. தன் நாட்டு மக்களை திருப்தியாக வைத்திருந்த முன்னேற்றிய ஒருவன், அயல்நாட்டுக்கு அள்ளி அள்ளி உதவிய ஒருவன் கெட்டவன் என்று அமேரிக்கா சொன்னால் அது உண்மைதான். உலகில் நாம் குறிப்பிட்ட ஒரு சிலரின் வாழ்க்கை காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்று பெருமைப்படும் அந்த சிலரின் விளக்கம் கொடுக்க முடியாத இறப்பிற்க்கு முழுமையான்; முக்கியமான இடத்தின் உலகிற்க்கு வெளிக்காட்டப்படாத(வெளிக்காட்டிக்கொள்ளாத) சர்வாதிகாரத்தின்(அமேரிக்காவின்) அளுத்தம் நிட்சயம் இருக்கும்.!!!

வரலாற்றில் வரும் இறப்பு...!!!

’கத்தி எடுத்தவன் கத்தியாலே இறப்பான்’ என்பது போல எந்த ஒரு இராணுவ புரட்சி மூலம் லிபியாவை கைப்பற்றினாறோ அதே போல கடாபி அசந்த நேரம் பார்த்து கடாபியின் ஆட்சிக்கு எதிரானவர்களை தூண்டி விட்டு புரட்சியை உண்டு பண்ணி அவர்களுக்கு மறை முகமாகவும் இறுதியில் பல நாடுகள் ஒன்று திரடும் மக்களை காப்பாற்றுவதாக சொல்லி ஒட்டு மொத்தமாக மிச்சம் மீதி வைக்காமல் கொன்று ஒழித்தது. தன் நாட்டை முன்னேற்றுவதே குற்றம் இதில் அயல் நாட்டையும் சேர்த்து முன்னேற்றினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். 42 வருடம் ஆண்டு ஓய்ந்த பின்னே சாய்க்க முடிந்தது கடாபி என்ற இரும்பு மலையை!!!

07. ஜொன் கனடி

இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். 

முதலாளித்துவத்திலும் ஒரு நல்ல முதலாளி...!!!

 புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார். இவரது அரசுகியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

வாளும் கொல்லும்; சொல்லும் கொல்லும்...!!!

நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.

06. டயானா

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales)
இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர்
பிறப்பு - ஜூலை 11961
இறப்பு - ஆகஸ்ட் 311997
பிள்ளைகள் - இளவரசர்கள் வில்லியம்ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். டயானாவின் வாழ்க்கை வித்தியாசமான திருப்பங்களை கொண்டதாக அமைந்தது. வாழ்க்கை மட்டும் இல்லை இறப்பும் கூட அப்படியே. அழகு மட்டும் டயானாவை நினைவு வைத்திருக்க காரணம் இல்லை. அவ்ர்தான் ஒரு காலகட்டத்தில் மேலைத்தேய பத்திரிகைகளின் முக்கிய செய்தி. அவர் தும்மினாலும் இருமினாலும் அதனை செய்தியாக்கி காசு பார்த்தது அக்கால பத்திரிக்கைகள். 

டயானா...!!! இளவரசி...!!!

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் தானுந்து ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. எனக்கும் இந்த முடிவில் பூரண விளக்கம் இல்லை. கடமைக்காக ஒரு முடிவினை முன் வைத்தார்கள்.

அழகின் மொத்த உருவம்...!!!

அந்த 15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற பந்தாவான வாழ்க்கையால் மீடியாக்களில் படாதுபாடுபட்டார் டயானா. அறைகுறை ஆடை காட்சிகள், குடிபோதையில் அரைநிர்வான ஆட்டங்கள் என்பன செய்தால் அசிங்கம், அப்படிப்பட்டவர்களை கேவலமாகத்தான் சித்தரிக்க வேண்டும் என்றால் டயானாவும் அப்படியானவர்தான். இப்படிப்பட்ட ஒருவரை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலைசெய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவனமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்டவாறு எழுதியும் வைத்தார். என்னத்தை பதிவு செய்து என்ன எல்லா ஆதாரங்களும் தான் இறுதியில் இல்லாமல் அழிக்கப்பட்டதே!!!

36வயதில் முற்றுப்பெற்ற அழகு...!!!

அவர் ஆவனப்படுத்த எண்ணிய வரிகள் “I am sitting here at my desk today in October, longing for someone to help me & encourage me to keep strong & hold my head high. This particular phase in my life is the most dangerous. My Husband is planning 'an accident' in my car. brake failure & serious head injury in order to make the path...”  Princess Diana, Oct. 1996. அந்த வரிகளின் தமிழாக்கம் - ''இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்...'' இத்துடன் முற்றுப்பெற்றதா டயானாவின் வாழ்க்கை.? உலக பிரபலம் ஆன கொஞ்ச காலத்தில் இவரும் இறந்தார். இதுகும் தடயம் தெரியாதா.. மரக்க(மழுப்ப)ப்பட்ட ஒரு (தற்)கொலையே!!!

என்னால் அனுமானிக்கப்பட்ட முதற்பத்தின் வரிசைப்படுத்தலில் கடைசி ஐந்து பேரையும் பற்றி தெரிந்தவற்றை எழுதி முடிக்கும் போது தான் பார்த்தேன் பதிவு ரொம்ப ரொம்ப நீண்டதாக இருந்தது. பாகம் பிரிக்க கூடாது என்ற நினைப்பில்தான் எழுத ஆரம்பித்தேன் வேறு வழி இல்லாமல் பிரிக வேண்டியதாயிற்று. இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02 இனை படிக்க இங்கே கிளிக்குக்கள்..!!! பாகம்-01 உங்களை நிட்சயம் திருப்திப்படுத்தி இருக்கும் அப்படி இல்லை என்றால் பாகம்-02 நிட்சயம் விட்ட தொட்ட குறை எல்லாத்தையும் பூர்த்தி செய்யும். வாசித்தது தான் வாசித்தீங்க... உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்... முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்...!!!

அடுத்த பாக நாயகர்கள் அடோஃப் ஹிட்லர், சுபாஸ் சந்திர போஸ், சே குவரா, திரு.வே.பிரபாகரன், புரூஸ் லீ...!!!

”பிறப்பில் இருந்தே இறப்பும் தொடர்கின்றது ஆனால் ஏப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் மரணித்து போன இவர்களின் பட்டியல் தொடரும்...!!!” 

Post Comment

2 comments:

  1. அழகான தேடல்... சதாம் மற்றும் கடாபி பற்றிய தகவல்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே... என்னதான் எழுதினாலும் அதற்கான தகுந்த அங்கிகாரம் கிடைக்கவில்லையே... நமீதாவின் இடுப்புக்கு இருக்கின்ற வாசக்ர்கள் இந்த பதிவுக்கு இல்லையே!!! உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி நன்பரே!!!

      Delete