Wednesday, July 10, 2013

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02

என்னால் அனுமானிக்கப்பட்ட பிரபலங்கள் பத்துப்பேரில் கடைசி ஐந்து பேரின் வாழ்க்கை சுவாரசியங்களை(பாகம்-01 இனை) படிக்க இங்கே சொட்டுங்கள்...!!!

05. சுபாஸ் சந்திர போஸ்

”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது. ஆக மொத்ததில் இவர் இறந்தாரா? இல்லையா? என்பதே இங்கு சந்தேகம்..!!! உண்மையான இந்திய சுதந்திர போராளி..!!! உண்மையானவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டார்கள் என்பது உண்மைதான் போல இருக்கின்றது.


இந்திய சுதந்திர போராளி...!!!


ஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டது. ‘நேதாஜியினுடையது’ என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும் ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்” என்கிற தேவபிரதா பிஸ்வாஸ், “நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.

வெள்ளையனை வெருண்டு ஓட வைத்த நடை...!!! 

இந்தியா அரசியல் மிகவும் சிக்கலானது தான். அதுக்காகா இந்த அளவுக்கா! நாட்டுக்கா தன் மக்களையே திரட்டி வெள்ளையனை விரட்டி அடித்த ஒரு உன்னத மனிதனுக்கு இன்றைக்கு கொடுக்கப்படும் அதிகப்படி மரியாதை என்ன? வெள்ளைக்கார சீமாட்டிகளுடன் ‘கபரே’ டான்ஸ் ஆடியவர் இந்தியா காசில் பல் இழித்துக்கொண்டு இருக்கும் போது போஸ்ற்கான மரியாதை எங்கே போனது? இன்றும் கூட இதுக்கான ஒரு சக பகிர்வு கொடுக்கப்படாமை வருத்தமே! உண்மைக்கும் அற்பணிப்புக்கும் இன்னமும் தகுந்த அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கும் போது ஆத்திரமாகவும், கவலையாகவும் உள்ளது. ஏன் ஆயுதம் ஏந்தி போராடியதால் தான் இந்த ஒதுக்கி வைப்பு நிகழ்கின்றதா? என்று தெரியவில்லை. போஸ் உம் ‘கபரே’ நடனம் ஆடியிருந்தால் இன்று சில நேரம் இந்திய கரன்ஸியில் இருந்திருக்கலாமோ?

04. அடோஃப் ஹிட்லர்

ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கின்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தான் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியி ருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக் கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன்.
வீரம்...வீரம்...வீரம்...!!!

1945 இல் உலக வரலாற்றையே தலை கீழாகத் திருப்பிப் போட்டவன் இந்த அடாலஃப் ஹிட்லர் (Adolf Hitler)  இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரும், அவனது மனை வியான ஏஃபா பிரெளனும் தற்கொலை செய்து இறந்தது மட்டுமல்லாமல், அவர்கள் உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக் கூடாது என்பதால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட் டார்கள் என்பதுதான் நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் வரலாறு. ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, அவன் தன் மனைவியுடன் தப்பிச் சென்று விட்டான் என்னும்செய்தி 66 வரு டங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

’WOLF’ வித் வொல்ஃப்

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ஜெர்மனியின் ஆக்ரோசமான சக்தியைத் தனித்தனியாக எதிர்கொள்ள முடியாத நாடுகள், 'நேச நாடுகள்' என்னும் பெயரில் ஒன்று சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கின. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்பன ஒரு பக்கத்தில் அணி சேர்ந்து தாக்க மறுபக்கத்தில் சோவியத் ரஷ்யா தாக்கத் தொடங்கியது. இந்த நான்கு நாடுகளின் ஒன்று சேர்ந்த தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 30.04.1945 இல் ஜெர்மனி தனது தோல்வியைத் தழுவிக் கொண்டது. இறுதிக் கட்டப் போரின் போது ஹிட்லர் பெர்லின் நகரில் அமைந்த அரசுத் தலைவரின் கட்டடத் துக்கு கீழே இருந்த ஒரு நிலக்கீழ் சுரங்கத்திலேயே இருந்தார். எதிரி நாடுகளின் குறிப்பாக ரஷ்யாவின் விமான குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ள அங்கேயே பதுங்கியி ருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவே அவனின் இறப்புக்கான கடைசி இடமாகவும் மாறியது என்றும் சொல்லப்பட்டது. ஹிட்லரின் இறுதி நாளில் என்ன செய்தான், எப்படி இறந்தான் என்பதை உலகிற்கே வெளிக்கொண்டு வந்தவர், 95 வயதாகியும் இன்றும் உயிருடன் இருக்கும் ஹிட்லரின் மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த 'ரோஹுஸ் மிஷ்' (Rochus Misch)  என்பவர்தான். இந்த ரோஹுஸ் மிஷ் பிறந்தது 29.07.1917 ஆம் ஆண்டு. தனது 28 வது வயதில் அவர் ஹிட் லருடன் கடைசியாக இருந்திருக்கிறார். அவர் ஹிட்லரின் இறுதி நாள் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.....!

ஒரு போர் சகாப்தம்..!!!

ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜெர்மனி அறிவித்த அன்றுவரை அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நோர்வே துறைமுகத்தில்தான்ஸி977 என்ற நீர் மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நோர்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல் அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை. ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது. மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த ஸி977 பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும் அர்ஜெடீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள். அதன் பின்னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து இரகசியமா, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள்பிகியிஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.

03. புரூஸ் லீ

1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ. (வீடியோவை பார்க்க இங்கே கிளிக்குங்கள்)

ஆண் அழகன்...!!!

“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.
இரண்டு உலக பிரபலங்கள்...!!!

அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடா முயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!

இதோடு முடிவுக்கு வந்த குங்பூ கலை...!!!

குங்பூ, கராத்தே, யூடோ என்று பல வித்தைகளை தன் வசம் வைத்திருந்த லீ கை நழுவ விட்டது நம்பிக்கை. எதிராளிகள் என்று தெரிந்தும் அவர்களின் நாட்டுக்கு போனது. அது சொந்த நாடாக இருந்தாலும் பகையாளிகள் என்று தெரிந்தும் போனது அந்த சந்தர்ப்பம்தான் இன்று நாம் மாபெரும் ஒரு தற்காப்பு கலை பயிற்றுவானை இழந்து நிற்க்கின்றோம். ‘ஒருவனை தாக முற்படும் போது இப்படித்தான் தாக்க வேண்டும் என்று எண்ணித்தாக்காதே! அந்த சந்தர்ப்பத்தை முற்றுமுழுதாக அறிந்து செயற்படு’ நீ ஒரு நீர்(தண்ணீர்) போல இருக்க வேண்டும். அதாவது எப்படி தண்ணீர் எந்த பாத்திரத்திற்க்குள் விடும் போது அது அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கின்றதோ. அதை போல நீயும் இருந்துகொள் உன்னை தக்க சமையத்துக்கு ஏற்றால் போல மாற்ற கற்றுக்கொள். இப்படி ஏகப்பட்ட நம்பிக்கைகளை அள்ளி தெளித்த மரக்க முடியாத ஒரு நிய நாயகன்...!!!

02. திரு.வே.பிரபாகரன்

வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.
தமிழரின் நம்பிக்கை...!!!

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார்.1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 51976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

போராளி + நல்ல குடும்பஸ்தன்...!!!

பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கைஇந்தியா,ஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009மே 18 அன்றுமுல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவனது உடலத்தின் புகைப்படமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

மரணித்ததா? இல்லை மறைக்கப்பட்டதா?

முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லி நான்கு வருடங்கள் முடிந்தாகிவிட்டது. ஆனால் இன்னும் எந்த தமிழனும் முழுமையாக திரு.வே.பிரபாகரன் அவர்களின் இழப்பை நம்புவதாக இல்லை. ஏன் என்றால் இது நம்ம கூடியதாகவும் இல்லை. சொந்த மக்களுக்காக எவ்வளவத்தை இழக்க முடியுமோ அவ்வளவத்தையும் இழந்துவிட்டார். என்ன என்ன வெற்றிகளை சுவை பார்க்க வேண்டுமோ அவை எல்லாவற்றையும் பார்த்து விட்டார். நினைத்த நினைப்பு வெகு தொலைவில் இல்லை. 

01. சே குவரா

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

எங்கள் தோழன்... சே...!!!

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

போராளிகளில் முதற்போராளி...!!!

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார். 1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

புரட்சியின் ஆரம்பகர்த்தா...!!!

எங்கு எல்லாம் மக்களுக்கு அநீதி நடக்கின்றதோ அங்கு எல்லாம் வருவான் சே...! என்ற அளவுக்கு மக்கள் விருப்பம் வைத்திருக்கும் ஒரு நல்ல ஆத்மா! இன்றும் கூட ’காவாலிகளின் பெனியன்களிலும் போராளிகளின் உள்ளத்திலும் குடியிருப்பவர்’ தான் சே. வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பல கருத்துக்களை கூறியிருக்கின்றார். இறுதியாக உடல் சுகவீனம் காரணமாக இயலாமல் இருந்த சேயை பழி தீர்க்க வந்த போதும் சளைக்காமல் தன் நெஞ்சை காட்டி மார்பிலே சன்னங்களை(துப்பாக்கி தோட்டாக்களை) வாங்கினார். எனக்கு மிகவும் பிடித்த சேயின் பொன்மொழிகளின் இதுவும் ஒன்று ‘நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்’ சொன்னது போலவே இன்றும் கோடிக்கணக்கான மக்கள் மனதின் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

வாசித்தது தான் வாசித்தீங்க... உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்... முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்...!!!

“புரட்சிகள் உருவாகுவதில்லை; நாம் தான் உருவாக்க வேண்டும்..!!!”

Post Comment

6 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல்களோட ரொம்ப மெனக்கெட்டு பதிவிட்டுருக்கீங்க.. அருமையான பதிவு..!!
  ஹிட்லர் இன்னும் உயிரோட இருக்காரா ? ரொம்ப அதிர்ச்சியான தகவல்.

  ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே பதிவிட்டிருக்கலாம். இன்னும் நிறைய தகவல்கள் கிடைத்திருக்கும். பரவாயில்லை. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு புரிகின்ரது சகோ // ரொம்ப மெனக்கெட்டு// என்று ஆனால் பொதுவான மற்றவர்களுக்கு தெரியவில்லையே!!! மொத்தமாகவே ஒன்று சேர்த்து பதிவிட நான் பட்ட பாடு...இதின் தனித்தனியாகவா ஏன் சகோ...இந்த கொலவெறி... இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி...!!!

   Delete
 2. Hitler data super machi

  ReplyDelete
  Replies
  1. இந்த மச்சீ யாரு என்று தெரிந்தால் இன்னமும் சந்தோசம்...!!! உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!!!

   Delete
 3. very useful news expecting more historical news nanba

  ReplyDelete
  Replies
  1. நன்றி...உங்கள் கருத்துக்கும்..பின்னூட்டலுக்கும்...!!!

   Delete