Tuesday, July 23, 2013

சூர்யா - பிறந்தநாள் ஸ்பெசல்(BIRTHDAY SPECIAL)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!


இப்ப எல்லாம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களை நஸ்டப்படுத்தாத நடிகர்கள் யாரெண்டு பார்த்தா ரஜினிக்கு அப்புறம் எல்லா சினிமா விற்பன்னர்களும் முணுமுணுப்பது சூர்யாதான்... சூர்யாவிடம் கால்சீட் பெற்றுவிட்டால் கோடிகளில் இலாபத்தில் புரளலாம் என்பது அவர்களின் எதிர்பாப்பு.. உண்மையும்கூட! தொட்டதெல்லாம் பொன் என்று உச்சத்துக்கு சென்றார் சூர்யா. அதீத நம்பிக்கை, அதிகூடிய முயற்சி என்று சினிமாவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த சூர்யா இன்று(2013.07.23) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவர் சினிமாவுக்குள் நுழைந்து 16 ஆண்டுகள் முடிவடைகின்றன. நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் திரையை பகிர்ந்துகொண்டு சூர்யா தனது திரையுலக வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தார். பல கஸ்டங்கல், பல தோல்விகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளியாக திகழ்கின்றார். சரி பிறந்தநாளுக்கு வாழ்த்தியாச்சு... இனி கொஞ்சம் சினிமா பக்கம் போய் அலசிப்பார்ப்பம்...!!!


1. சூர்யாவும் சினிமாவும்...!!!

சரவணன் தொடக்கம் சூர்யா வரை...!!!

சினிமா வாழ்க்கையின் ஆரம்பகாலம் இலகுவாக புதுமுக நடிகர்களுக்கு அமைவதில்லை. இதற்க்கு சூர்யா மட்டும் என்ன விதிவிலக்கா!!! 1997ஆம் ஆண்டு ’நேருக்கு நேர்’ என்ற படத்தில்தான் சரவணன் சிவகுமாராக இருந்த அந்த இளஞ்ஞன் சூர்யா சிவகுமாராக மாறினார். முதல் படம் இரண்டு HEROகளுக்கான படம். இதனை அடுத்து 1998ஆம் ஆண்டு ’காதலே நிம்மதி’ , ’சந்திப்போமா’ என இரண்டு படங்கள் நடித்தார். இதே போல 1999ஆம் ஆண்டும் இரண்டு படங்கள் ஆனால் போன வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் இரட்டைக்கொண்டாட்டம். ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் தான் சூர்யா, ஜோதிகா என்ற வெற்றி ஜோடிகள் இணைந்தார்கள். இந்த படமானது சூர்யாவாலும், சூர்யா ரசிகர்களாலும் என்றும் மறக்க முடியாத படமாகும். ஏன் என்றால் இந்த படம் மூலம் தான் சூர்யா, ஜோதிகா காதல் ஆரம்பமானது. சினிமாவில் சூப்பர் ஜோடியாக இருந்த இவர்கள் நியத்திலும் சூப்பர் ஜோடியாக மாற்றுவதற்க்கு அடித்தளம் போட்டது இந்த படம் தான். வசந்த் இயக்கத்தில் உருவானாது இந்த படம். அதே ஆண்டு ’பெரியண்ணா’ என்ற படத்திலும் நடித்தார். அதனை தொடர்ந்து 2000ஆம் ஆண்டு ‘உயிரிலே கலந்து’ ஒரே ஒரு படத்துடன் நிறுத்திக்கொண்டார்.

காதல் ஜோடிகள்...!!!

இதையடுத்து அதே ஆண்டு ‘உயிரிலே கலந்து’ என்ற படத்தில் நடித்தார். இதை எல்லாம் தாண்டி தடைகளை எல்லாம் உடைத்து குறிப்பாக பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் நடிகனாக உருவாகியது ‘பிரண்ஸ்’ என்ற படத்தின் போதுதான். இந்த படமும் இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதைக்களம். இதிலும் விஜய்யுடன் திரையை பகிர்திருப்பார். சூர்யா, வடிவேலு, விஜய் காமடியில் சும்மா கலக்கி இருப்பார்கள். இன்றும் அந்த நகைச்சுவைகளை பார்த்தால் சிரிக்காமால் இருக்க முடியாது. இந்த படத்தை அடுத்து சூர்யாவுக்கு நல்ல காலம் ஆரம்பமாகியது என்றுதான் சொல்ல வேண்டும். 2001ஆம் ஆண்டு சூர்யா தனது அடுத்த படத்துக்காக Tamil Nadu State Film Award for Best Actor விருதினை வாங்கினார். அந்த படம் என்னவென்றால் “நந்தா” தான். இந்த படத்தின் மூலம்தான் சூர்யா சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அந்த காலத்தில் உண்டாக்கிக்கொண்டார். அருமையான நடிப்பு, நல்ல நகைச்சுவை கொண்ட படம்.(இப்படியான படங்களை பாலா ஏன் இப்போது தருவதில்லை.. என்பது பல ரசிகர்களின் கவலையாகும்...!!!)

கலக்கல்...பொருத்தம்...!!!

வழமையாக இரண்டு அல்லது ஒரு படங்களில் நடிக்கும் சூர்யா மாறாக 2002ஆம் ஆண்டு மூன்று படத்தில் நடித்தார். ‘உன்னை நினைத்து’, ‘ஸ்ரீ’ , ‘Mounam Pesiyadhe’ இதில் இன்றும் தொலைக்காட்சியில் போட்டால் சலிப்பு தட்டாமல் பார்க்க கூடிய படங்களாக அமைந்தது மிகவும் ஆச்சரியம். இதை அடுத்து ‘காக்க காக்க’ என்ற போலீஸ் படம். இந்த படம் 2003ஆம் ஆண்டுக்கான ITFA Best Actor AwardNominated—Filmfare Award for Best Actor – Tamil விருதுகளை பதம் பார்த்தது. சாக்கிலட் பையனாக இருந்த சூர்யாவை போலீஸ்காரன் ஆக்கியது கவுதம் மேனன் தான். அந்த கெத்தான கெட்டப்பை இன்று வரை தொடர்வது இன்னும் சிறப்பே...! இதை அடுத்து மீண்டும் ஒரு இரண்டு கதாநாயகர்கள் கதை.. இந்த முறை விஜய் இல்லை.. விக்ரம்..! இந்த படமும் விருது தந்த பாலாவின் இயக்கத்தில்தான். ’பிதாமகன்’ படமும் அந்த ஆண்டுக்கான Filmfare Award for Best Supporting Actor – Tamil விருதினை மறக்காமல் வாங்கிக்கொடுத்தது. இப்படியே விருதுகளும் நல்ல படங்களுமாக சூர்யாவின் வாழ்க்கை பயணம் சென்றுகொண்டிருந்தது.

வெற்றிகளும்...விருதுகளும்...!!!

இதையடுத்து 2004ஆம் ஆண்டு ‘பேரழகன்’ மற்றும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மூன்று கதாநாயகர்கள் கொண்ட கதை ‘ஆயுத எழுத்து’ இந்த படம் விருது பெற்றதா இல்லையா என்பதை தாண்டி இன்றும் பலரின் விருப்ப படங்களின் தெரிவுகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கலக்கல், கொண்டாட்டம் என ஆரவாரப்படுத்திய ஆண்டாக 2005ஆம் ஆண்டு அமைந்தது சூர்யாவுக்கு. இந்த ஆண்டும் மூன்று படங்கள் ‘மாயாவி’ , ‘ஆறு’ மற்றும் ‘கஜினி’ ஆகும். குறிப்பாக இந்த படம்தான் சூர்யாவின் மொத்த சினிமா அத்தியாயத்தையும் புரட்டிபோட்டது என்று சொல்ல வேண்டும். வித்தியாசமான கதைக்களம், சிறப்பான இயக்கம் என எல்லாப்பக்கத்திலும் கொடி நாட்டிய படம் தான் ஏ.ஆர்.முருகதாஸ் இன் ‘கஜினி’ படம். வழமையாக பாலாவின் படங்கள் தான் விருது அள்ளும் இந்த முறை அதை எல்லாம் தகர்த்தெறிந்து Tamil Nadu State Film Award Special PrizeNominated—Filmfare Award for Best Actor – Tamil விருதுகளை பதம் பார்த்தது. இந்த படம் பின்னைய காலத்தில் ஹிந்தி சினிமாவிலும் அதே இயக்குனரால் எடுக்கப்பட்டது இந்த படத்துக்கும், தமிழ் சினிமாவுக்கு மேலும் சிறப்பே...!!!

ஹிந்தி வரை புகழ்...!!!

’கஜினி’ இன் வெற்றிக்கு பிறகு கதைகளில் மிகவும் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களே வெளிவரும். 2006ஆம் ஆண்டு ‘ஜீன் ஆர்’ , ’சில்லுன்னு ஒரு காதல்’ போன்ற படங்களும் 2007ஆம் ஆண்டு புதிய வெற்றிக்கூட்டனி இயக்குனர் ஹரி சூர்யா சேர்ந்த முதல் படம் ‘வேல்’. அந்த வருடம் ஒரே ஒரு படத்தினை வெளியிடார். இந்த படம் Nominated—Vijay Award for Favourite Hero விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. ஒரு கதாநாயகரின் படம் வருடத்துக்கு ஒன்று தான் வரும் என்னும் போதே புரிந்துகொள்ள வேண்டும் அந்த கதாநாயகர் உச்சத்துக்கு போய் விட்டார் என்று. அதே போலதான் ‘கஜினி’ ‘வேல்’ வெற்றிகளை தொடர்ந்து சின்னவர் முதல் முதியவர் வரை ரசிகர்களை கூட்டம் கூட்டமாக குமித்துக்கொண்டார் சூர்யா. என்னதான் ரசிகர் கூட்டம் இருந்தாலும் இன்னும் அடை மொழி இல்லாமல் இருக்கும் நடிகன் என்ற பெருமை சூர்யாவை சாரும். அடை மொழி இருந்தால் தால் நிலைத்து நிற்க்க முடியும் என்ற நிலையை உடைத்தார் சூர்யா...!!! இதையடுத்து 2008ஆம் ஆண்டு சிரப்பு தோற்றமாக ‘குசேலன்’ , மீண்டும் கவுதம் மேனனின் ‘வாரனம் ஆயிரம்’ படம் அமைந்தது. இந்த படத்திலும் விருதுகளுக்கு பஞ்சம் இல்லை. Filmfare Award for Best Actor – TamilTamil Nadu State Film Award Special PrizeVijay Award for Best ActorNominated—Vijay Award for Favourite Hero மகுடத்தில் மேலும் இரத்தின கற்கள். பட்டியலில் பெரியதோர் மாற்றம்...!!!

சூர்யா தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம்...!!!

இதையடுத்து 2009ஆம் ஆண்டு கே.வி.ஆனந்தின் ‘அயன்’ மற்றும் வெற்றி இயக்குனர் கே.ஸ்.ரவிக்குமாரின் ‘ஆதவன்’ போனற படங்களில் நடித்து Vijay Award for Entertainer of the YearNominated—Vijay Award for Favourite Hero போன்ற விருதுகளுக்கு குறி வைத்தார். வருடத்துக்கு ஒரு படம் இல்லையேல் ஒரு சிறப்பு தோற்றத்தில் இன்னொரு படம் என்று நிதானமாக அடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த சூர்யா மறுபடியும் வருடத்துக்கு மூன்று படங்களை எண்ண தொடங்கினார். 2010ஆம் ஆண்டு ‘சிங்கம்’ , ’ரத்த சரித்திரம்’ , ’மன்மதன் அம்பு’ போன்ற படத்தில் நடித்தார். இதில் முக்கியாமாக ’சிங்கம்’ பற்றி சொல்லியே ஆக வேண்டும். விருதுகளை வேட்டையாடிய படம் இது. BIG FM Most Entertaining Actor of the YearVijay Award for Entertainer of the YearNominated—Filmfare Award for Best Actor – TamilNominated—Vijay Award for Favourite Hero பாலா, முருகதாஸ் கூட்டனி போல ஹரி, சூர்யா கூட்டனியும் வெற்றி மட்டுமே தரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. இந்த படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் தான் ‘சிங்கம்-2’ ஆகும்...!!!

கண்ணா இது சிங்கள்...சிங்கம்...!!!

மீண்டும் வருடத்துக்கு நிதானமாக ஒரு படம் என 2011ஆம் ஆண்டை ஆரம்பித்தார் சூர்யா. கே.வி.ஆனந்தின் ‘கோ’ , பாலாவின் ‘அவன் இவன்’ , மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏழாம் அறிவு’ போன்ற படத்தின் நடித்தார். இந்த ஆண்டு பெரிதும் கை கொடுக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வழமையாக கைக்கு எட்டும் விருதுகள் இம் முறை வெருமனையே பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டது. நல்ல கதைகளை குறிபார்த்த சூர்யாவுக்கு 2012ஆம் ஆண்டு பழைய கூட்டனி கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வந்த படம் தான் ‘மாற்றான்’ தமிழுக்கு புதிதான நடிப்பு, வித்தியாசமான தோற்றம் என படம் முழுக்க சூர்யா சூப்பர்..!!! இந்த படமும் விருப்பக்கம் தலை சாய்த்தது. CineMAA Award for Best Actor - Male (Tamil),Nominated—Vijay Award for Best ActorNominated—Vijay Award For Favourite Hero, Nominated—SIIMA Award for Best ActorNominated—Filmfare Award for Best Actor – Tamil மேலும் வெற்றி, இந்த ஆண்டுடன் பட்ட கண்ணூறூ எல்லாம் போனது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த வருடம் மீண்டும் சிங்கம் விருது வேட்டைக்கு தயாரானது..!!!

வாங்கலே விருது வாங்குவம்...!!!

கமர்சியல் படங்களின் ராஜா ஹரியின் இயக்கத்தில் சிங்கம்-1 ஐ தொடர்ந்து ’சிங்கம்-2’ உருவானது, வெளியானது. இப்போது சக்க போடு போட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்த வருடம் முதல் சூர்யாவுக்கு நல்ல வருடமாக அமைய வேண்டும். வரவிருக்கும் படங்களாக 2014ஆம் ஆண்டை சிறப்பிக்க லிங்குசாமியின் பெயர் இன்னமும் வைக்கப்படாத படம், மற்றும் கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’. கவுதமின் படம் கைவிடப்பட்டத்தாகவும் ஒரு கதை அடிபடுகின்றது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. சிறந்த நடிகன் என்று பேர் வாங்குது ரொம்ப கஸ்டம் அதைவிட அதை நிலைக்க வைத்துகொள்வது என்பது அதை விட கஸ்டம். இதை எல்லாம் தாண்டி இன்றும் சூர்யா... சூர்யாவாக..!!! வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடிப்பதே இவரின் குறிக்கோளாக கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் அந்த நினைப்பு மாற்றப்படுவதாக தெரிகின்ரது. அப்படி ஆகாமல் வழமையை போல இனி வரும் காலங்களில் கோடாம்பக்க தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறக்க மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்கள்...!!! 

1997 தொடக்கம் இன்று வரை...!!!

2. சுர்யாவும் தனிப்பட்ட வாழ்க்கையும்...!!!

2D தியா, தேவ்

சூர்யா ஜூலை 231975 பிரந்தார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இருமுறை பிலிம்பேர்விருதுகளை வென்றுள்ளார். ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா உலகை ஆட்டிப்படைத்த நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 112006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் குழந்தைகள் தியா, தேவ் ஆகும். இவர்களின் நினைவாகவே இப்போது 2D என்ற சினிமா படங்களை தயாரிக்கும் கம்பனி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் ’அகரம்’ என்ற அமைப்பின் மூலம் உதவிகளை விளம்பரப்படுத்தி செய்யாமல் தானும் தன்பாடும் என்ற ரீதியில் செய்துகொண்டு இருக்கின்றார். இனி வரும் காலத்திலும் சிறந்த படங்களில் நடித்து மென்மேலும் சிறந்த நடிகராக வர வேண்டும் என்று இந்த பிறந்தநாளில் வாழ்த்திக்கொண்டு பதிவினை முடிவுக்கு கொண்டு வருவோம்.

“கோடாம்பாக்க சினிமாவின் அடையாளம் சூர்யா...!!!”

Post Comment

No comments:

Post a Comment