Thursday, July 18, 2013

மரியான் விமர்சனம்..!!!

ராசா... கடல் ராசா...!!!!

தனுஷ், பார்வதி மேனன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படத்தினை பரத்பாலா இயக்கியிருக்கின்றார். பெரும் பாலான படங்கள் இந்த பாணியில் படம் வருவதில்லை. ‘நமக்கு எதுக்கு வீண் பொல்லாப்பு..’ என்று அரைத்த மாவையே அரைத்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் ’மரியான்’ வழமையான மசாலா படங்களின் இருந்து கொஞ்சம் வித்தியாசம். தமிழில் சர்வதேச பிரச்சினைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை. அப்படி வந்தால் கமல் போல எந்த பிரச்சனை வந்தாளும் தாக்குப்பிடிக்க கூடியவர்களிடம் இருந்துதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலைப்பாட்டை உடைத்தெறிந்து வெளியாகியிருக்கும் படம் தான் தனுஷின் மரியான். மிகவும் பலமான கதைக்களம் தான் இந்த மரியான். ஒரு தனி மனிதனின் எமோஷனை காட்டும் படம், காதல், ஆக்‌ஷன் என்று எல்லா கோணத்திலையும் படத்தை பின்னி எடுத்திருக்காரு இயக்குநர்...!!!
பார்வதி மேனன்... அவளா இவள்?

2008ஆம் ஆண்டு ஸ்ரீகாந்துடன் ‘பூ’ என்ற படத்தில் நடித்த அதே நடிகைதான் இந்த பார்வதி மேனன். ஆனால் அடையாளமே தெரியாத அளவுக்கு பரத்பாலா மாற்றியிருக்கின்றார். படத்தில் பனிமலர் என்ற கதாப்பாத்திரத்தில் அருமையான நடிப்பு, தனக்கு தந்த காட்சிகளில் தன்னை தனித்து காட்ட வேண்டும் என்பதற்காக ஒவர் டைம் எல்லாம் எடுத்து நடித்திருப்பாங்க போல. படத்தில் ரொமாண்டிக் காட்சிகளில் பார்வையாளர்களை ‘நாம முன்னம் பூ படத்தின் பார்த்த பொண்ணுதானா இது..’ என்னும் அளவுக்கு வாய் பிளக்க வைத்திருக்கின்றார். காதல் காட்சிகளில் கொஞ்சம் ஆம்பிளைத்தனம் இருக்கின்றது. சில நேரம் இதைத்தான் இயக்குநர் எதிர்பாத்தாரோ தெரியவில்லை. ஆனால் இது தமிழ்க்கு கொஞ்சம் புதுசுதான். இயக்குநர் பரத்பாலா கிட்டத்தட்ட இருபது வருடமாக விளம்பர படங்கள், குறும் படங்கள், ஆவணப்படங்கள் என்று நிறையவே சாதித்திருக்கின்றார். ஆனால் இவர் தமிழுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் புது. படத்தில் கவிஞ்ஞர் வாலி, கபிலன், குட்டி ரெவதி, ரஹ்மான், தனுஷ் என்று பெரும் புள்ளிகளே பாடல்களை எழுதி கலக்கியிருக்கின்றார்கள். படத்துக்கு பாடல்கள் பெரும் பலம் செர்த்திருக்கின்றது...!!!


ஒரு பக்கமா பார்க்கும் போது புரூஸ் லீ போல இருக்காரே!!!

இந்த படத்தில் பல தேசிய விருது பெற்றவர்கள் நடிப்பதனால் ’மரியான்’ மிகவும் எதிர்பாக்கப்படும் படமாக உள்ளது. மலையாள நடிகர் சலீம் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தனுஷுடன் ஒரு மலையாக படத்துக்கான தேசிய விருதினை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து தேசிய விருது பெற்ற அப்புக்குட்டியும் மரியானில் உண்டு. இதை எல்லாம் விட தேசிய விருது பல கண்ட ஒஸ்கார் நாயகன் ‘ஏ.ஆர்.ரகுமான்’ படத்துக்கு இசை அமைத்தே படத்தினை எல்லோரின் கவனைத்தையும் ஈர்த்தது. உண்மையில் நடத்த ஒரு கதையின் பின்னணியின் எடுக்கப்பட்ட படம் இது. இருந்தாலும் ஒருவனுக்கு காதல் இவ்வளவு மன, உடல் வலிமையை கொடுக்கும் என்று இயக்குநர் காட்டியிருப்பது ஒரு பக்கம் வியப்பாகவும், நம்ம முடியாமலும் இருக்கின்றது. ஆனால் நிட்சயமாக பார்க்கும் போது சலிக்காமல் இருக்கும். காட்சிகள் ஒரு கோர்வையாக இருப்பது படத்துக்கான இன்னோரு பிளஸ். படத்தில் காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி என்று ஐந்து வகையிலும் எமோசனை கையில் எடுத்து கைதட்டல்களையும் அள்ளியிருக்கின்றார் இயக்குநர்..!!!


இசையின் இரண்டு ராஜாக்கள்...!!!

ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர் பரத்பாலா என்பதால் கதையை கூட கேட்காமல் படத்துக்கு இசையமைக்க சம்மதித்தாராம் ரஹ்மான். படத்தில் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களும் ஏழுவிதமான உணர்வுகளை தரக்கூடியது. இருந்தாலும் ஒரு சில விமர்சகர்கள் இந்த பாடல்கள் அனைத்தும் ‘எங்கோ கேட்ட நியாபகம் இருப்பதாக...’ கூறியது நினைவுக்கு வருகின்றது. காட்சிகளுடன் பார்க்கும் போது பாடல்கள் இன்னும் சூப்பராக இருக்கின்றது. இதை விட முக்கியம் முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மானின் இசையில் பாடியிருக்கிறார். ’கடல் ராசா...” என்ற பாடலை தனுஷ் எழுத ரஹ்மான் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளமை ஆரோக்கியமானதும் படத்துக்கு இன்னும் பலம் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் இயக்குநர் இருந்த போது ‘ஆடுகளம்’ படத்தை பார்த்து தனுஷ் மீது இம்பிரஸ் ஆகி இந்த கதைக்கு தனுஷை தெரிவு செய்தாராம். படம் பார்க்கும் போது இதை ஏற்றுக்கொள்ள முடியும். நலிந்த உடல் சடுதியாக ஒரு நடிப்பை மிகவும் எளிதில் முகத்தில் கொண்டுவரக்கூடிய தன்மை என்பது எல்லாம் தனுஷுடம் அதிகமாகவே உள்ள்து. இதை படத்தில் சரியான இடத்தில் வெளிக்காட்டியிருப்பது இன்னும் படத்துக்கான சுவாரஸ்யத்தை அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்...!!!


நடிகன்...டா... நீ நடிகன் டா...!!!

படத்துக்கு இன்னொரு பலம் கமராமேன் தான். இவர் ஒரு பிரஞ்சுகாரர் ஆகும். அவர் பெயர் மார். மரியானை தொடர்ந்து இனி நிறைய தமிழ் படங்களில் இவர் பங்கு இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். மிகவும் அற்புதமாக இருக்கின்றது. ‘கடல் ராசா...’ ’ஐ லவ் மை ஆஃப்ரிக்கா...’பாடல்களில் கமரா கோணமாக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளிடம் இருந்து தனுஷ் தப்பி ஓடும் போதும் சரி கமராமேன் பாராட்டை அள்ளிக்கொள்கின்றார். படம் சூடானின் நடப்பதாகத்தான் இருக்கும் ஆனால் அந்த காட்சிகல் எடுக்கப்பட்டதோ நபீபியாவில் தான். புது கமராமேன் என்பதால் அவர் இந்திய, உலக அழகை காட்டும் விதம் தமிழுக்கு புதுசு. கமராமேன் என்ற தன்னுடைய பங்கை மிகவும் சரியாக செய்திருக்கின்றார். இவரின் பங்கில் குறையேதுமில்லை. படத்துக்கு எல்லா துரையிலும் பிரபலங்கள் பூந்து விளையாடியிருக்கின்றார்கள்...!!!


புது கோணம்... புது பார்வை...!!!

படத்தில் தனுஷ் மண்டைக்காடு என்ற இடத்திற்க்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒரு மினவனாக நடித்திருக்கின்ரார். எல்லோரும் வலை வீசி மீன் பிடிப்பார்கல் ஆனால் இவன் நீண்ட கூரிய ஆயுதத்தால் ஆழ் கடலுக்குள் போய் பிடிப்பார். தமிழ் படம் என்பதால் இதை எல்லாம் நாங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும். தனுஷின் இயல்பான நடிப்புக்கு ஆயிரம் கிளாப்ஸ். ஆழ் கடலில் தனுஷ் மீன் பிடிக்கும் காட்சி மிகவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். ம‌ரியானில் சூடானில் உள்ள எண்ணைய் எடுக்கும் தொழிற்சாலையில் பணிபு‌ரிகிறவராக தனுஷ் நடித்திருக்கிறார். அவரையும் உடன் பணிபு‌ரிகிற சிலரையும் தீவிரவாதிகள் (கொள்ளைக்காரர்கள்?) கடத்துகிறார்கள். அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நமிபியா போன்ற ஆப்பி‌ரிக்க நாடுகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றி செய்திகளில் படித்திருப்போம். அவர்களைப் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள், எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பதை ம‌ரியானை பார்த்து தெ‌ரிந்து கொள்ளலாம். கதை முழுவதையும் சொன்னால் அப்புறம் படம் எதுக்கு பார்ப்பான்...!!!


ரொம்ம ரிஸ்க் எடுத்திருக்காரு...!!!

படத்தில் அண்டர் வாட்டர் காட்சிகள் வருகின்றன. அதனை அந்தமானில் படமாக்கியிருக்கின்றனர். தனுஷ் தண்ணீருக்கு அடியில் நடித்திருக்கிறார். தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடைத்தபடி நீந்துவதில் சுத்தமாக அனுபவமில்லை தனுஷுக்கு அதனால் பயிற்சியாளர் ஒருவரை வைத்து நீச்சல் கற்று, குறிப்பிட்ட காட்சியில் டூப் வைக்காமல் நடித்தார். இந்த காட்சிகளை பார்க்க போது மிகவும் அற்புதமாக இருக்கும். படத்தில் இதேபோல் வரும் நல்ல காட்சிகளில் எல்லாம் மிகுந்த சிரமத்துக்குள்ளானார் தனுஷ் என்று பரத்பாலாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தனுஷ் கடத்தப்பட்டு பின்னர் திரையில் வரும் ஒவ்வொரு இடங்களிலும் தனுஷ் தனித்து தெரிகின்றார். கதையை எதிர்பார்பவர்களுக்கு கதை இருக்கு! பாடல், பின்னணி பாடல்களில் பிரியர்களுக்கு நல்ல விருந்துதான் மரியான்! காதல் அவஸ்தகர்களுக்கு நல்ல ஒரு காவியம்! முழுமையாக தனுஷின் நல்ல சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இனி மரியானும் ஒன்றாகப்போவது உருதி..!!!

உன்ன விட்டுபுட்டு எங்க போவன் புள்ள...!!!

படம் பார்ப்பது பொழுது போக்குக்கே தவிர பிளாக் எழுதுவதுக்கு இல்லை. அதை விட்டு விட்டு படத்தையே சொல்லி முடிக்க முடியாது. கதையை ஒரு வரியில் சொல்லி முக்கிய பங்களிப்புக்களை சொல்ல வேண்டும். ஆக மொத்தத்தில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். எனது கணிப்பில் படம் தேறிவிடும். இந்த வருடத்தின் சூப்பர் படங்களில் தனுஷின் மரியான் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் எதுகும் இல்லை.

"மரியான் உலக ரசிகர்களுக்கான தமிழ் திரைப்படம்...!!!” 

Post Comment

6 comments:

 1. முதல் முறையாக படத்தின் கதையை கூறாமல் விமர்சனம் மட்டும் படித்துள்ளேன். நல்ல விமர்சனம். அழகு...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...!!! மீண்டும் சந்திப்போம்...!!!

   Delete
 2. நிறைய எழுத்துப் பிழை உள்ளது... சரி செய்யவும்... மேலும் வாசிக்க என்பது மேலும் வசிக்க என்று உள்ளது... பிழை இல்லாமல் எழுத முயலுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஏற்றுக்கொள்கின்றேன் சகோ... அவசர அவசரமாக எழுதி முடிக்க வேண்டும்.. என்று எழுதிய பதிப்பு என்பதால் எழுத்துப்பிழைகள் வந்துவிட்டது போலும்... இன்னொரு விமர்சனத்தில் பிழைகள் இல்லாமல் உங்களை சந்திக்கின்றேன்... வருகைக்கு நன்றி...!!!

   Delete
  2. இந்த பிழைகளையே, சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் சகோ. அவசரம் புரிகிறது, கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்களேன்....

   நன்றி, வணக்கம்...

   Delete