Thursday, July 11, 2013

சப்ப பிகரு சமந்தா; நச்சு பிகரு நஸ்ரியா...!!!

இந்த பதிவு முழுக்க முழுக்க சமந்தாவை கலாய்ப்பதற்காக எழுதப்படும் பதிவாகும். இந்த பதிவினை வாசித்த பின்பு சமந்தாவின் எந்த ஒரு ரசிகனும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். (சமந்தாவுக்கு ரசிகர்கள் இருப்பதே பெரிய விசயம் இதில தற்கொலை... ரைட்டு விடு.. நீங்க கடுப்பாவது புரியுது...!!!) தமிழ் மொழியில்(ஆமா ஆமா சமந்தா உலக மொழிகளில் எல்லாம் நடிக்கும் நடிகை தானே... குறிப்பிட்டு தமிழ் மொழி என்று சொல்லத்தான் வேணும்...இப்படி டென்ஷன் ஆகாதீங்க பாசூ...)உருப்படியாக ஒரு படம் ஒரு படம் கூட நடித்து ஹிட் கொடுக்கவில்லை அதுக்குள் சித்தார்த்துடன் கிசுகிசு..!!! எங்க இருந்துதான் கூடுறாங்களோ தெரியவில்லை. எச்ச சோற்றுக்கு காகம் வருவது போல வந்து தொலைகின்றார்கள்...(பாருயா...காகம் என்று திட்டியதும் காகத்து வாற கோபத்தை...!!!) சரி சரி ஆரம்பத்திலேயே போட்ட மொக்கை போதும்.. இனியாவது தலைப்புக்குள் போவோமா?

ம்ம்ம்...ஒரு பக்கமா பார்த்தா...!!!


சமூக வலைத்தளங்களில் சமந்தாவுக்கு என்று தங்களையே அர்ப்பணித்த எத்தனையோ கோடான கோடி தலைவர்கள்/ மகான்கள்/ பிரபுக்கள் இருக்கின்றார்கள்..(ஜொள்ளு சேவை செய்வதில் அம்புட்டு ஆசை...இதுலை இப்படி ஒரு விளம்பரம் வேறு என்று நீங்கள் கேவலமாக நினைப்பது எங்கை வரைக்கும் கேட்கின்றது...நம்மாளுக யாரு குஷ்புவுக்கே கோவில் கட்டினவர்கள் ஆச்சே...!!!) ஆரம்ப காலத்தில் ஒரு கிளுகிளுப்புக்கு சமந்தா "எனக்குதான்......." என்று சவால் விட்டாலும்; சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைக்கும்போதுதான் தெரிகின்றது எனக்கு முன்னாடியே எத்தனை பேர் லைன் கட்டி நிற்கின்றார்கள் என்று..!!!(அம்மணிக்கு அம்புட்டு மவுசு... சூப்பர் மவுத்து..!!!) ஆனால் என்ன தான் இருந்தாலும் காலம் போக போக சமந்தாவும் ஊசிப்போன போண்டா ஆகிவிட்டார். கொடி பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஏதும் படங்கள் அடுத்து அடுத்து நடித்தால் தானே மனதில்(மனதில் மட்டுமா? என்று நீங்கள் பொங்குவது புறிகின்றது..!!) நிற்க்க முடியும். இல்லாவிட்டால் இப்படித்தான் வந்த தடமும் தெரியாது போன இடமும் தெரியாமல் அடிபட்டு போகத்தான் வேண்டும்..!!!

பிம்பிலிக்கா...பிலாப்பி...!!!

விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, நடுநிசி நாய்கள், நான் ஈ,
நீ தானே என் பொன்வசந்தம் போன்ற ஆறு படங்களையே இதுவரைக்கும் தமிழில் நடித்திருக்கின்றார். ஆனால் ஏதோ அறுபது படம் நடித்த நடிகைக்கு இருக்கும் மார்கெட் அம்மணிக்கு இருந்தது. ஆரம்ப காலத்தில் குல்ஃபி ஐஸ் ஆக உருவவைத்த சமந்தா...நஸ் இன் வருகைக்கு பின்னர் சப்புன்னு ஆகீட்டார்...இல்லை இல்லை ஆக்கப்பட்டு விட்டார்.(சப்பா சமந்தாவை கலாய்க்க கமல் போல வசனம் எல்லாம் பேச வேண்டி இருக்குப்பா...!!!) அதிலையும் நம்ம பயலுக(என்னையும் சேர்த்து) சமந்தாவை பத்தி கதைத்தாலே போதும் கையடக்க தொலைபேசியில் சமந்தாவின் ஒரு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு கன்னத்தை கிள்ளிக்கொண்டே (கன்னத்தை மட்டும் தானா? என்று நீங்கள் கள்ள பார்வை பார்ப்பது எனக்கு புரிகின்றது?) ஜொள்ளு கதை கதைக்க தொடங்குவார்கள் ஆனால் இப்போது நஸ்ஸின் படத்தை வைத்துக்கொண்டு செல்லம், குஞ்சு என்று ஆரம்பித்து விட்டார்கள்.(ஆக இதில் இருந்து என்ன தெரியவருகின்றது என்றால் சமந்தா காலம் முடிந்து போச்சு...இனி நஸ்ரியா காலம் தான் என்று...!!!)

அவ்வ்... விட்டா கிறுக்கன் ஆகீடுவாங்க போல...!!!

சினிமா வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் போது அம்மணிக்கு காதல், கத்ரீக்கா.. எல்லாம் கேட்குது.. நல்ல காலம் லவ் பண்ணவன் தெய்வாதிசயமாக தப்பித்து விட்டான். இதற்கிடையில் சமந்தாவுக்கு சரும நோய் என்று வதந்தி வேறு! (பாவம் இதுக்கு மேல எதுனாச்சும் சொன்னா அழுதிட போகுது பாப்பா...!!!) அதுக்காக சமந்தா எல்லாம் ஒரு ஆளா? என்று கேட்டு நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ள கூடாது. ஏன்னா நானும் ஒரு காலம் சமந்தாவுக்காக (???) சமூக வலைத்தளங்களின் சண்டை போட்ட காலமும் உண்டு. என்று நான் அவளை கண்டேனோ அன்றில் இருந்து ஆரம்பித்தது. காய்ச்சல்... நஸ்ரியா காய்ச்சல்... என்ன அழகு... அழ்கு அவள்...!!!

இப்படி புகழாதீங்க...எனக்கு வெட்ட வெட்கமா வருது!!!

கவர்ச்சி காட்டுவதுக்கு என்று எத்தனை நடிகைகள் வந்தாலும், அழகால் மயக்குவதற்க்கு எத்தனை அழகிகள் வந்தாலும், ஒற்றைப்பார்வையால் ஒட்டு மொத்தத்தையும் அடக்கி ஒரு உயிருள்ள யடமாக்குவதுதான் அந்த பார்வை; அவை கண்கள் அல்ல ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கும் காந்தம்.. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.. எவ்வளவு சொன்னாலும் சொல்லி அடக்க முடியாத அழகினை உடைய ஒரு அழகி..இல்லை இல்லை அதுக்கும் மேலே.. அந்த அழகி வேறு யாரும் இல்லை நஸ்ரியா நஸீம் என்ற நஸ்ரியா தான்..!(இங்கை என்ன ஆண்டிறுதி பரீட்சைக்கா ஆட்கள் எடுக்கின்றார்கள் என்று நீங்கள் சிலுத்துக்கொள்வது புரிகின்றது...நஸ்ரியாவுக்காக எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கின்றது..!!!)

டேய்...இது நடக்காது.. நான் ஒத்துக்க மாட்டன்...!!!

"நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம், தற்போது தமிழில், "நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் என்றும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், "திருமணம் என்றும் நிக்கா பட நாயகனான ஜெய்க்கும், நஸ்ரியாவுக்கும் இடையே, காதல் தீ கொழுந்து விட்டு எரிவதாக, வதந்தி ரெக்கை கட்டி பறக்கிறது. இருவரும், படப்பிடிப்பில் எப்போதும் தனிமையில் அமர்ந்தே பேசுவதாகவும், நஸ்ரியா வேறு படத்தில் நடித்தால், அவரை பார்க்க அந்த படப்பிடிப்பு தளத்துக்கே, ஜெய் விசிட் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த காதல் செய்திப்பற்றி, அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை, எந்த பதிலும் வெளியாகவில்லை. ஒருவேளை, விளம்பரத்துக்காக, இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றனவா என்பதும், தெரியவில்லை. ஒரு சில படங்களில் நடிப்பதற்குள்ளேயே, நஸ்ரியாவை குறிவைத்து காதல் கிசு கிசு பரவியுள்ளது, கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.(இது எல்லாம் நல்லதுக்கு இல்ல தாயீ வந்தமா நடித்தமான்னு இருக்கனும்...அந்த ஜெய் பயல நம்பாத.. அஞ்யலி பாப்பா கிட்ட அவன் பத்தி கேளு கத கதையா சொல்லும்...!!!)

இந்த பார்வைதான் இந்த லுக்குதான்...!!!

அம்பிகா-ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகளுக்குத்தான் தமிழ் சினிமா முன்னுரிமை கொடுத்து வருகிறது.(இப்படி சொன்னதும் பின்னூட்டலில் கேரளா தவிர்ந்த வேறு இடங்களில் இருந்து வந்த நடிகைகளின் பட்டியலை யாராவது போடணுமே!!!) காரணம், எளிதில் தமிழை கற்றுக் கொண்டு நடிக்கக்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை முழுசுமாக அவர்கள்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். ஆனால், அப்படி தமிழில் நடிக்கும் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவைச்சேர்ந்த யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் என்று வருகிறபோது கேரளாவைச்சேர்ந்தவர்களையே நாடிச்செல்கின்றனர். விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ரம்யா நம்பீசன் மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் கூட, கண்டிப்பாக எங்கள் மலையாள தேசத்தை சேர்ந்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த நிலையில், நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம், ”எதிர்காலத்தில் நான் ஒரு தமிழனைத்தான் திருமணம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.(இது காணூமே நமக்கு தீயா உழைப்பமில்லே... யாருப்பா அங்க... லைன்ல வா லைன்ல வா..!!!) மலையாளிகளுக்கு எந்தவிதத்திலும் தமிழர்கள் குறைந்தவர்கள் அல்ல என்று தனது கருத்தை கூறியுள்ளார்.(இப்படி நஸ்ரியா சொன்னதாக சொல்லித்தானே நாம ஹிட்ஸ் ஐ வாங்கிக்கொள்ளனும்...!!!) நஸ்ரியாவின் இந்த கருத்து கோலிவுட்டின் இளவட்ட ஹீரோக்களுக்கு இனிப்பு செய்தியாகி உள்ளது.(இள வட்ட ஹீரோக்களுக்கு மட்டுந்தானா நமக்கும் தான் மக்கள்ஸ்...!!!)

ம்ம்ம்... இந்த பழத்தை எவன் கொத்தீட்டு போக போறானோ!!!

ளவாணி பட இயக்குனர் சற்குணம் தனது நாயகிகளைத் தேடி கேரளத்தைத் தவிர வேறு எங்கேயும் செல்வதில்லை! அவரது முதல் படமான  களவாணியில் ஓவியாவை  திருச்சுரில் இருந்து கூட்டி வந்தார்! இரண்டாவது படமான வாகை சூட வா படத்துக்கு இனியாவை  திருவனந்தபுரத்தில் இருந்து அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். இப்போது திருவனந்தபுரத்தில் இருந்து மேலும் ஒரு மேலும் மலையாள பெண்குட்டியை அழைத்து வந்திருக்கிறார். ஆனால் இம்முறை  ஓவியா, இனியா இரண்டுபேரையும் விட ஒரு அழகான இளம் தேவதையை அழைத்து வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்! காரணம் குறுகுறு பேசும் விழிகளோடு அவ்வளவு அழகாக இருக்கிறார் அவர் அழைத்து வந்திருக்கும் நஸ்ரியா நஜீம்! மலையாள தொலைக்காட்சிகளில் ஹாட் ஆங்கராக இருக்கும் நஷ்ரியா நஜீம்தான்… தனுஷ், அடுத்து சற்குணம் இயக்குனம் ‘ நய்யாண்டி’ படத்தில் நடிக்கிறார். அதில்தான் தனுஷுடன் ஜோடி சேர்கிறார் நஸ்ரியா. இவர் கேரளத்தின் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமும் கூட!!!(அப்ப நேரம்??? என்று நீங்கள் குழம்புவது புரிகின்றது..!!! போடுயா சற்குணத்துக்கு அழைப்பை..பஞ்சாயத்தை வைத்து பைசல் பண்ணிப்புடுவம்...!!!

கண்ணுகளா...இந்த டவுன்லோட் பண்ணி கவர் போட்டோவாக போட்டுகனும்...!!!

எத்தனை பேருக்கு இந்த விசயம் தெரியுமோ தெரியாது. ஆனால் உண்மை இது தானுங்கோ...!!! இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி இப்போது கதாநாயகி என்ற அந்தஸ்த்துக்கு வந்திருக்கின்றார். தமிழில் பாசில் இயக்கி, ஶ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த ‘ஒரு நாள் ஒரு கனவு’ திரைப்பட படத்திலும் சிறுமியாக நடித்திருந்தார். மலையாளத்தில் ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடித்த பின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆனால் நஸ்ரியாவை சற்குணம்தான் தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள். இயக்குநரும், நடிகருமான நாசரின் உதவியாளர் அனிஷ் இயக்கும் ‘திருமணம் என்னும் நிக்கா’ என்ற தமிழ்படத்தில் ஏற்கனவே ஜெய் ஜோடியாக தமிழில் நடித்து முடித்து விட்டார்!

அழகால் கொல்வதுன்னா இதுதானா???

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது! அதேபோல தமிழ், மலையளம் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட ‘நேரம்’ படத்தில் நடித்து முடித்து நமக்கு எல்லாம் காய்ச்சலை உண்டு பண்ணினார். ஆக மொத்தத்தில் நஸ்ரியாபத்தி என்ன என்ன எல்லாம் தெரியுமோ...ஒண்ணு விடாமல் எல்லாத்தையும் உங்க முன் கொட்டியாச்சு.. அதில நீங்க எத பொறுக்குவீங்களோ... எத விட்டு தள்ளுவீங்களோ.. அது உங்க இஸ்டம்... மொக்க போடுவது நம்ம இஸ்டம்.. இன்னைக்கு கடை இந்தளவத்துக்கும்தான் திறந்திருக்கும்..!!!(அதுதானுங்கோ கடயை சாத்தும் நேரம் வந்துட்டுன்னு சொல்ல வாரன்...!!!)

சமந்தாவை கொஞ்சமாக கலாய்த்ததுக்கும், நஸ்ரியா குட்டியை தூக்கிப்பிடித்து கதைத்ததுக்கும் கோபப்படும் அன்பு பக்தகோடிகளே எல்லோரும் என்னை மன்னிச்சூ..மன்னிச்சூ.. மன்னிப்பு எல்லாம் கேட்டாச்சு அப்புறம் ஆளை வைத்து அடிக்கப்படாது. (இப்போதைக்கு சமந்தாவுக்கு இருக்கும் ரசிகர்களே நாலோ ஐந்து பேர்தான் அவீங்க எங்க நம்மள பிடிக்குறது...!!!) எது எப்படியோ நல்ல நடிகைகள் வந்தால் வரவேற்போம்.. அதிலும் சமந்தா, நஸ்ரியா போல் அதிக அழகு நடிகைகள் வந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவோம்.(காலம் போன பின் இப்படி மொக்கை பதிவு போட்டு கொல கொலயா கொல்லுவம்...!!) நஸ்ரியாவை ஒவர்டேக் பண்ணி இன்னொரு ஹீரொயின் வரும் வரை நஸ்ரியா பிழைத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள் நஸ்ரியா குட்டி...!!!

“சமந்தா காலம் முடிந்தது; நஸ்ரியா காலம் தொடங்குது...!!!”

Post Comment

2 comments:

  1. aiyo, aiyo ippadiya samanthava ninga thakkurathu bos. hmm... sari.. ennoda vela vanthachu pathiva padichachu. comment pottu poyituren..

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோதரா சும்மா பொழுது போக்குக்கு யாரையாவது மொக்கை போட்டு எழுதனும் என்று நினைத்தன் அதுக்கு சமந்தாதான் கிடைத்தார்...!!! அவ்வளவும்தான் மத்தப்படி எனக்கும் சத்துவை ரொம்ப பிடிக்கும்!!!

      Delete