Saturday, July 13, 2013

விஜய்யை சீண்டிப் பார்க்கும் பிரபுதேவா..!!!

யார் ரசிகன் என்பது முக்கியம் இல்லை. ஆனால் ஒருவரின் திறமையை தனிப்பட்ட வெறுப்புக்காக கேவலப்படுத்துவது நல்லது இல்லை. அதுகும் பிரபுதேவா போன்ற மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்த ஒரு சக திறமைசாலிக்கு நல்லது இல்லை. என்னவோ தெரியவில்லை பாரதிராஜாவுக்கும் பிரபுதேவாவுக்கும் காலம் சரியில்லை போல இருக்கின்றது. பாரதிராஜா கதை எல்லோரும் நன்கு அறிந்ததே.! ஆனால் இப்ப தேவா கொடுத்த பேட்டி அவரையும் குழப்பகாரர்கள் லிஸ்ற்ரில் சேர்த்து விட்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ரெண்டு பேரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். தேவா இவரை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கின்றார். அதில் போக்கிரி என்ற படம் வசூல் அள்ளிய படம். அதே போல இவர்கள் இருவரும் இணைந்த அடுத்த படம் வில்லு. வில்லு பத்தி சொல்லத்தான் வேணுமா? இந்த இடத்தில்? சரி என்ன மேட்டர் என்று பார்ப்பம்..!!! 

நல்ல டான்ஸ்சர்...இப்ப கிழியுது டவுசர்...!!!


தமிழில் சூப்பர் படத்தை இயக்கி கடைசியில் எவளவத்துக்கு மொக்கை படம் கொடுக்க முடியுமோ அவளவத்துக்கு மொக்கை படம் ஒன்ரை கொடுத்த இயக்குநர் சிகரம்தான் இந்த பிரபுதேவா. இவர் நடிகனா? இல்லை நடன இயக்குனரா? இல்லை இயக்குனரா? என்று தெரியவில்லை. இவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுகின்றாரா? என்ன என்று சரியாக இன்னும் புரிந்த பாடு இல்லை! இந்த நிலமையில் இனி தமிழ் சினிமாவை நம்பி இருந்தால் சோறுக்கு கும்மிதான் அடிக்கணும் என்று நன்றாக தெரிந்துகொண்ட தேவா... தெலுங்கு சினிமாவை வால் பிடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த ‘இறுக்கி பிடித்து தொங்கியது” தான் இப்போது கார சாரமான கதையாக மாரிவிட்டது. சரி அந்த கதை என்ன என்று பார்ப்பம்.
எப்படி இருந்தோம் இப்படி ஆகீட்டே???

”சினிமாதான் என் வீடு, இதுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது, ஆந்திராவுக்கு வந்தாலே நான் என் வீட்டுக்கு வந்ததைப் போல உணர்கிறேன்” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய பிரபுதேவா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தமிழ்சினிமாவில் நன்றாக டான்ஸ் ஆடத்தெரிந்தவர்களின் லிஸ்ட்டை வெளியிட்டு விஜய்யை (ரசிகர்களின்) எரிச்சலுக்கு ஆளாகியிருகிறார். வர வர பிரபுதேவாவும் நம்ம ’யங் சூப்பர் ஸ்ரார்’  STR இன் அப்பா TR போல கைல  மைக் கிடைத்தால் எதையாவது பேச வேண்டும் இல்லாவிட்டால் மறுமுறை மைக் தர மாட்டார்கல் என்று எதையாவது பேசி வம்பை விலை கொடுத்து வாங்கிக்கொள்கின்றார்கள். அவர் ஆந்திராவை புகழ்ந்து பேசியது இல்லை விசயம் அந்த லிஸ்ட் தான் விசயம்..!!!
இந்த ’அப்பா’வியை எப்டீயா தேவா நீ அப்டீ சொல்லலாம்???

மீடியாவில் வேலை செய்பவர்களை கேட்டு பழகிக்கொள்ளனும் எப்படித்தான் இப்படி இரண்டு பேரையும் கொளுவி விடுவது போல கேள்வி கேட்பது என்று?ஆசமீபத்தில் உங்களுக்கு தெரிந்து நன்றாக டான்ஸ் ஆடும் நடிகர்கள் யார் யார்? என்று பிரபுதேவாவிடம் ஒரு மீடியாவின் சார்பில் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்துள்ள பிரபுதேவா, “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரின் பெயர்களையும், நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்க்ஷி சின்ஹா” ஆகியோரின் பெயர்களை மட்டும் அடுக்கியிருக்கிறார். ஆனால் இந்த லிஸ்ட்டில் விஜய், கமல்ஹாசன் ஆகியோரின் பெயர்களை கடைசியில் கூட அவர் சொல்லவில்லை, அவர் மறந்து விட்டாரா..? அல்லது சொல்ல விரும்பவில்லையா..? என்பது பிரபுதேவாவுக்கு வெளிச்சம்.
இப்படி சூப்பராக டான்ஸ் ஆடும் இவர்களை எப்படீ தேவா மறக்கலாம்?

உண்மையில் விஜய் ஒரு சிறந்த உன்னதமான டான்ஸ்சர் அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதே போல் தான் பிரபுதேவாவும். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்பட்டாலும் வாய் சும்மா இருக்குதில்லையே இவருக்கு! ஏற்கனவே நயன் பிரச்சனை இப்போதுதான் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து நயன் ஆர்யா நீதான் என் ஏரியா என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஒரு பிரச்சனை முடிந்ததும் இன்னொன்றில் தானாகவே போய் சிக்கிகொள்கின்றார். நல்ல ஒற்றுமையாக இருந்தார்கள். ஹிந்தி சினிமாவில் நடனம் ஆடும் அளவிற்க்கு விஜய்க்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்து கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் இருந்தது.. ஆனால் இப்போது மறை முகமாக இருவரும் மோதிக்கொள்கின்றார்களோ என்று எண்ண தோன்றுகின்றது. அண்மையில் விஜய்யின் ‘தலைவா’ படத்தில் கூட சந்தானம் டான்ஸ் பற்றி விஜய்யிடம் கேட்பார் அதுக்கு விஜய் ‘டான்ஸ் எல்லாம் ரொம்ப கஸ்டம் BRO’ என்று பதில் சொல்கின்றார். இதுக்கு நம்ம கலாய்ப்பு மன்னன் சந்தானம் “என்ன பெரிய டான்ஸ் BRO, இப்படி கழுத்தை ஆட்டித்தானே தமிழ் நாட்டில பெரிய ஆள் ஆகி இருக்காங்க..’ என்று கிண்டலாக பதில் சொல்லுறார். இந்த நக்கல் யாருக்கு விழுந்ததோ? தெரியவில்லை ஆனால் என் அனுமானம் பிரபுதேவாவுக்கு என்பதே!!! 
குள்ளனை கூட நம்பலாம் ஆனால் தாடிக்காரனை நம்பவே கூடாது!!!

இதே பிரபுதேவாதான், அக்‌ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் டைரக்ட் செய்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் விஜய்யை வம்படியாகக் கூப்பிட்டு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைத்தார். அந்தப்பாடல் காட்சியில் விஜய்யின் டான்ஸ் அசைவுகளைப் பார்த்த அக்‌ஷய் குமாரே விஜய்யை வெகுவாகப் பாராட்டினார். அதேபோல சமீபத்தில் கூட ஒரு விருது விழாவில் விஜய்யை நடிகர் ஷாருக்கான் பாராட்டினார். வட இந்திய நடிகர்களுக்கு தெரிந்த இந்த விஷயம் கூட ஒரே ஊரில் அதுவும் விஜய்யை வைத்து இரண்டு படங்களை டைரக்ட் செய்த பிரபுதேவாவுக்கு தெரியாமல் போய் விட்டதே… அதிக ஒற்றுமையும் ஆபத்தானது என்பதுக்கு இது கூட நல்ல உதாரண்ம் போல...!!!  இனி இந்த செய்திக்கு விஜய் ரசிகர்கள் என்ன செய்ய போகின்றார்கள் என்று நினைக்கும் போது ஒரே குஸ்டமாக இருக்கு! பிரபுதேவாவின் இந்தப் பதிலை படிக்கும் விஜய் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷனை காட்டப்போகிறார்களோ..? சில நேரம் இது எல்லம் வதந்தி நம்ம அண்ணா பத்தி பிரபுதேவா அப்படி சொல்லவில்லை என்று சொல்ல போகின்றாரோ தெரியவில்லை..!! இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!!

“அடிக்கலாம் ஆனால் ரத்தம் வாற போல அடிக்க கூடாது... ஏன்னா டான்ஸ்சருக்கு மூஞ்சிதான் முக்கியம்...!!!”

Post Comment

2 comments:

  1. Hehe Comedy udan Kalakal குள்ளனை கூட நம்பலாம் ஆனால் தாடிக்காரனை நம்பவே கூடாது!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!!!

      Delete