Monday, July 29, 2013

தாலிகள் சொல்லும் சேதிகள் - ஆழம் அறியாத தேடல்...!!! பாகம்-01

இந்த பதிப்பில் முழுக்க முழுக்க தாலி, தாலியுடன் சம்பிரதாயங்கள் போன்றன மட்டுமே இருக்கும். பதிவின் நீளம் கருது இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். இந்த பதிவை எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்பதோ; எத்தனை பேரை சென்றடகின்றது என்பதோ எனது நோக்கம் இல்லை. எத்தனை நாட்களுக்குதான் சினிமா, ஹீரொ, ஹீரொயின் என்று புளிச்சல்களை எழுதிக்கொண்டே இருக்க முடியும். என்னதான் சொன்னாலும் அந்த பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பை போல எந்த காத்திரமான பதிவுக்கும் வாசகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்காது. இருந்தாலும் இவை பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது அவா..!!! சரி பதிப்புக்குள் செல்வோம்...!!! தாலி, எனும் பொழுது ஒன்பது இழைகளுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம் என்று முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்!!!

தாலியின் பகத்துவம்!!!


தாலியின் அறிமுகம் தாலி பற்றிய சுருக்கம்!!!


பரவலாக எல்லாப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் உலகில் உள்ள, தமிழ் எழுத்தாளர்களும், கல்வி மான்களும், தத்துவ அறிவாளிகளும்,கூறுவது தாலி எனும் பொழுது இந்த ஒன்பது இழைத்தாலியின், தத்துவம் என்று பெண்களை அடிமைப் படுத்துவதாகவே பொருள் படுகின்றது. இது தாலியை அணிவிக்கும் ஆணுக்கும் பொருந்தும், தாலிக்குப் பொன் உருக்கும் விஸ்வப்பிரம்மகுலஆசாரிக்கும் பொருந்தும்; கட்டுப்படுத்தும் என்பதே உண்மை அடிப்படைத் தத்துவம் புரியாமல் அல்லது விளங்காமல் திரிபு படுத்தப்பட்டவையே இந்த ஒன்பது இழைத் தத்துவம் என எங்கு வேண்டுமானாலும் வாதிடலாம்.ஒன்பதின் மகத்துவமே வேறு அதை ஒன்பது சொல்லில் சுருக்கி பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் தாலி எனும் கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது!!!அவையாவன,
1.தெய்வீகக் குணம்,
2.தூய்மைக் குணம்,
3.மேன்மை,
4.தொண்டு,
5.தன்னடக்கம்,
6.ஆற்றல்,
7.விவேகம்,
9.உண்மை, உள்ளதைஉள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இத்தனைக் குணங்களும்ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும்.இதில் என்ன தெரிந்து கொள்கிறீர்கள் முழுவதும் பெண்ணடிமையே இதில் பெரும் ஆச்சரியம் என்னவெனின் சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் தான் இளங்கோவடிகளின் எழுத்தை பின்பற்றியே இவர்களின் அடிப்படைவாதமே இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

திருமணமாகாத ஒரு புத்ததுறவியே இளங்கோவடிகள் அவர் ஒரு பிரம்மச்சாரி அப்படிப்பட்டவர் எப்படி திருமணத்திற்கு உரிய தாலிக்கு சிலப்பதிகாரத்தில் விளக்குவது, இது பொய்த் தகவலே. அப்படிப்பார்த்தால் திருவள்ளுவருக்கும்-காமத்துபாலுக்கும் இடையில் பல கேள்விகளை எழுப்ப வேண்டி வரும். இளங்கொவடிகளின் தகவலின் அடிப்படையில் ஏனையோரும் கருத்துக் கூறுவது பெரியா ஆச்சரியமாக இருக்கிறது ஒருவருடைய திருமணவாழ்வில்(அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறும் பொழுது!!!) அதை ஒன்பது இழை என்று வரையறுத்து தாலி அணியும் பெண்ணை மட்டும் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தும் இந்த குறுகிய
எண்ணம் கொண்டதா இந்தச் சிலப்பதிகாரம்?

உலகம் தோன்றிய போதே
1.பிரம்ம புராணம்,
2.கிருஷ்ண புராணம்,
3.சிவபுராணம்,
4.வைஷ்ணவ புராணம்,
5.கந்தபுராணம், என பல புராணம்களும் இதிகாசம்களும் திருமணத்தின் பந்தத்தில் இணையும் பொழுது அங்கும் இந்தத் தாலியின் மகிமை உணர்த்தப் பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுப் பெருமையுள்ள விடயம் மறைக்கப்பட்டு ஒன்பது இழைக்குள் அடக்கிப் பெண்ணடிமையை விளக்கமாக கொடுத்துள்ளனர்.

தாலி அணிந்த பெண் கணவன் இறக்கும் வரை அதைக் கழுத்தில் இருந்து கழட்டவே கூடாது என்பதே உண்மை. 10 வருடம் அல்லது 16 வருடங்களில் தாலியை புதுப்பிக்கலாம் ஏனெனில்; ’பதிவிரதைக்குப் பத்து’ எனும் பழமொழியும் உண்டு. பதினாறு பெரும்பேறு 16 வருடங்கள் கடந்தால் அந்தப்பெண் பூரண அனுபவம் பெற்றுக்கொண்டு அடுத்தவருக்கு ஆலோசனை வழங்கும் தகுதியும் பெற்றவள் என்பதே..!!!(இப்படியான உண்மைத்தொகுப்பிற்குள் உள்ளடங்கியிருக்கும் தாலியினை பெண் அடிமையின் சின்னமாக இன்னமும் சித்தரிப்போரின் நோக்கம் என்னவென்று தெரிந்தபாடில்லை!!!)

ஆனால் திருமணச் சடங்கின் போது தாலி பிரிப்பது என்பது ஒரு சடங்காகவே இருக்கிறது. அதுவும் தாலிகட்டி மூன்று மாதத்தில் அந்தத் தாலியைக் கழட்டுவது எவ்வளவு மடமைத்தனம் இப்பொழுது புரிகிறதா? (என்னதான் புரிந்தாலும் நாங்கள்தான் புளுத்துப்போன சம்பிரதாயங்களை தூக்கி தோளில் சுமப்பவர்கள் ஆகிற்றே...!!!) இதற்கும் வேறு பல அர்த்தம் உண்டு. இதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் நிறையவே எழுதிக் கொண்டு போகலாம்.(அதிகம் எழுதினால் நீண்ட பதிவு போல என்று வாசிக்காமல் போய் விடுவார்கள் நம் மக்கள்ஸ்...!) பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவே வாழ்த்துவார்கள். அதைச் சுருக்கி ஒன்பதாக வாழ்த்த மாட்டார்கள். திருமணத்திற்கு பன்னிரண்டு வகைப் பொருத்தமே பார்ப்பார்கள். அதைச் சுருக்கி ஒன்பது பொருத்தம் பார்ப்பதில்லை. (தாலியின் மகத்துவத்தை வெறுமனையே ஒன்பது இழைகளுக்குள் அடக்கி பார்ப்பது ஏன்? அடக்க நினைப்பதும் ஏன்?)

தாலியில் 12 வகை உள்ளது. அதைஒன்பது வகையாகச் சுருக்கினால் சில பரம்பரை சார்ந்த குடிவளியினருக்கு திருமணத்தின் போது தாலி கட்டவே முடியாது, அவையாவன,

1.பிள்ளையார் தாலி,
2.அம்மன் தாலி,
2.லட்சுமி தாலி,
3.கொம்புத் தாலி,
4.மூன்று கொம்புத் தாலி,(விஸ்வப்பிரம்ம குலத்தாருக்கு உரியது)
5.லிங்கத் தாலி,
6.புலிப்பல் தாலி,
7.பாப்பயத் தாலி,
8.பவளத் தாலி,
9.பொட்டுத்தாலி,
10.சிவ தாலி,
11.புறாத் தாலி,
12.கிருஸ்ண தாலி,

இன்னும் சில தாலிகள் குடிவளிசார்ந்து காணிக்கையாக ஆலயத்திற்கும் சில திருமண தோஷங்களுக்கும் நிவாரணம் பெற செய்து கொடுப்பது வழக்கம். இதில் நான் கூறவருவது இந்த ’ஒன்பது’ எனும் பொருள் படும் விடயங்களை என்னால் முடிந்தவரை தொகுத்துள்ளேன். ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..!!!

ஒன்பது என்றால் என்ன? அதன் சிறப்பு தெரியுமா?


தாலியும் தமிழரும்...!!!

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். ஆபரணத்தில் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுகின்றார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!(சென்ரிமென்ற் ஆக தாக்கி விட்டமே...!!!) ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள்

1.வாமை,
2.ஜேஷ்டை,
3.ரவுத்ரி,
4.காளி,
5.கலவிகரணி,
6.பலவிகரணி,
7.பலப்பிரமதனி,
8.சர்வபூததமனி,
9.மனோன்மணி

நவ தீர்த்தங்கள் 

1.கங்கை,
2.யமுனை,
3.சரஸ்வதி,
4.கோதாவரி,
5.சரயு,
6.நர்மதை,
7.காவிரி,
8.பாலாறு,
9.குமரி

நவ வீரர்கள் 

1.வீரவாகுதேவர்,
2.வீரகேசரி,
3.வீரமகேந்திரன்,
4.வீரமகேசன்,
5.வீரபுரந்திரன்,
6.வீரராக்ஷசன்,
7.வீரமார்த்தாண்டன்,
8.வீரராந்தகன்,
9.வீரதீரன்

நவ அபிஷேகங்கள் 

1.மஞ்சள்,
2.பஞ்சாமிர்தம்,
3.பால்,
4.நெய்,
5.தேன்,
6.தயிர்,
7.சர்க்கரை,
8.சந்தனம்,
9.விபூதி

நவ ரசம்

1.இன்பம்,
2.நகை,
3.கருணை,
4.கோபம்,
5.வீரம்,
6.பயம், 
7.அருவருப்பு,
8.அற்புதம்,
9.சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் 

1.சூரியன்,
2.சந்திரன்,
3.செவ்வாய்,
4.புதன்,
5.குரு,
6.சுக்கிரன்,
7.சனி,
8.ராகு,
9.கேது


தாலிகள் பல வகை...!!!

நவமணிகள் - நவரத்தினங்கள்

1.கோமேதகம்,
2.நீலம்,
3.வைரம்,
4.பவளம்,
5.புஸ்பராகம்,
6.மரகதம்,
7.மாணிக்கம்,
8.முத்து,
9.வைடூரியம்

நவ திரவியங்கள் 
1.பிருதிவி,
2.அப்பு,
3.தேயு,
4.வாயு,
5.ஆகாயம்,
6.காலம்,
7.திக்கு,
8.ஆன்மா,
9.மனம்

நவலோகம் (தாது)

1.பொன்,
2.வெள்ளி,
3.செம்பு,
4.பித்தளை, 
5.ஈயம்,
6.வெண்கலம்,
7.இரும்பு,
8.தரா,
9.துத்தநாகம்

நவ தானியங்கள் -
1.நெல்,

2.கோதுமை,
3.பாசிப்பயறு,
4.துவரை,
5.மொச்சை,
6.எள்,
7.கொள்ளு,
8.உளுந்து,
9.வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது
1.சோமவார விரதம்,

2.திருவாதிரை விரதம்,
3.உமாகேச்வர விரதம்,
4.சிவராத்ரி விரதம்,
5.பிரதோஷ விரதம்,
6.கேதார விரதம்,
7.ரிஷப விரதம்,
8.கல்யாணசுந்தர விரதம், 
9.சூல விரதம்

நவசந்தி தாளங்கள்
1.அரிதாளம்,

2.அருமதாளம்,
3.சமதாளம்,
4.சயதாளம்,
5.சித்திரதாளம்,
6.துருவதாளம்,
7.நிவர்த்திதாளம்,
8.படிமதாளம்,
9.விடதாளம்

ஒரே ஒன்பதின் பெருமையை சொல்லிக்கொண்டு இருந்தால் வாசிக்கும் உங்களுக்கு வாசிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் இருக்காது எனவே கொஞ்சம் பெண்களுக்கு சமூகத்தில் நாங்கள் ஒதுக்கி விட்ட தகுதிகளை பற்றி பார்ப்போம். சரி குற்றம் சுமத்துதலை இலக்கியங்கள், புராணங்களில் இருந்து ஆரம்பிப்போம். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான்.

கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத் திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.

இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடிய வில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது! அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.

இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல், மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான், நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல், காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!

தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும்...!!! (எல்லோரும் இதையே சிந்தித்துக்கொண்டு இருக்கனும் சுட சுட பாகம்-2இல் சந்திப்போம்...!!!)

Post Comment

No comments:

Post a Comment