Wednesday, July 31, 2013

ஹிந்திக்கு போகும் விஜய்; அதை தடுக்கும் ஷாருக்கான்...!!!

என்னதான் விஜயும் விஜயின் ரசிகர்களும் முதல் தரம், முதல் தரம் என்று மூக்கு வியர்க்க கத்தினாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது; ஆகவும் முடியாது! என்னதான் ஷாருக்கான் விஜய் T.Vயின் அவாட்டு நிகழ்ச்சியில் விஜயை புகழ்ந்தது போல பார்வையாளர்களுக்கும்; ரசிகர்களுக்கும் இருந்தாலும் அது உண்மையில்லை. பலரும் நியாபகம் வருவது 2007ஆம் ஆண்டு தீபாவளி தான். சரி என்ன அந்த தீபாவளியில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அதுதாங்க விஜயின் ‘அழு(ழ)கிய தமிழ் மகன்’ வெளிவந்தது. அது மட்டும் வந்திருந்தா பறவாயில்லை. கூடவே கொஞ்ச படங்களும் வந்தது. அதுதான் அவருக்கு வழமையை போல ஆப்பாக அமைந்தது.

படத்தோட பேர்ல மட்டும்தான்...!!!


இப்போது எல்லொரினதும் நியாபகத்துக்கு 2007 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகிய படங்களும் அவை கட்டிய கல்லாக்களும் நியாபகத்துக்கு வந்திருக்கும்! சரி ரெட் கார்ட் நடிகரின் உழைப்பு புஸ்வானம் ஆன கதையை பார்போம். என்னாச்சு..என்னாச்சு.. 2007 ஆம் ஆண்டு தீபாவளி வந்தீச்சு..எதோ மூணு படம் ரிலீஸ் ஆச்சு..அதில விஜய் படமும் வந்தீச்சு..அப்புறம் என்னாச்சு..என்னாச்சு..!!! அழகிய தமிழ் மகன், வேல் , பொல்லாதவன் என்னு 3 படம் தமிழ்ல ரெலீஸ் ஆச்சு! ஆரம்பத்தில் என்னவோ விஜய் படம் கல்லா கட்டுவது போல இருந்தாலும் போக போக வழமையை போல தியட்டர்களில் ஈ ஆட தொடங்கியது..(அந்த படத்தை ஈ கூட பார்த்திருக்காதுன்னு நீங்க நினைப்பது சரிதான்...!!!)

விஜய்யின் இந்த நிலமைக்கு தள்ளியது சூர்யாவின் ‘வேல்’ ஓ இல்லை சின்ன பொடியன் என்று எல்லோராலும் ஓரங்கட்டப்பட்ட நல்ல நடிகன் தனுஷின் ‘பொல்லாதன்’ ஓ இல்லை.. தமிழ் மொழியில் கூட வெளிவராத, தமிழ் கதைக்களம் இல்லாதா ஒரு ஹிந்தி படம் தான் விஜயை அந்த அளவுக்கு அள வைத்தது. விஜய் படத்தை எடுத்த தியட்டர் உரிமையாளர்கள் எல்லாம் தலையில் கையை வைத்தார்கள். அந்த அளவுக்கு ஒரேயடியாக ஆட்டம் கண்டது விஜயின் ஆட்டம்.(இப்ப மட்டும் என்ன வாழுது என்றூ நீங்கள் நினைக்கலாம்..பப்புளிக்கில சத்தமா சொல்லாதீங்க விஜய் மானம் போய்டும்..ஓ..அது வேற அவருக்கு இருக்கா???) சரி மறுபடியும் 2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு போவோம்..!!!

என்னதான் பிரச்சனையோ...தெரியல...!!!

வழமையை போல தமிழ் ரசிகர்கள் நல்ல கதை உள்ள படத்துக்கு வரவேற்ப்பு கொடுக்காமல் படத்தினுடைய டைட்டிலுக்கும் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்கும்(ஹீரோ, நடிகன்னுதான் அவர் தன்ன சொல்லிக்கிறாரு...!!!) சம்மந்தமே இல்லாமல் வெளியான..அத்தாங்க ‘அழு(ழ)கிய தமிழ் மகன்’ படத்துக்கு எல்லாரும் விமர்சனங்களை ஆகா, ஓகோன்னு எழுதி தள்ளினார்கள். ஈற்றில் என்னாகிற்று எந்த அலப்பரையும் இல்லாமல் வெளியான அந்த படங்கள்தான் சூடு பிடித்து ஓடியது; தியட்டர் உரிமையாளர்களின் வயிற்றிலும் பால் ஊற்றியது..!!! என்னதான் இருந்தாலும் விஜய் அந்த நேரத்தில் எந்த அளவுக்கு கஸ்டப்பட்டிருப்பார்.. ஆனால் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் ஷாருக்கான் துவைத்து எடுத்து விட்டார்...!

சாதாரணமாக வெளியாகிய பொல்லாதவன் , வேல் படங்களை முதல்ல யாரும் கணக்கில் எடுக்கவில்லை (கடைசியில ஹிட் ஆனது என்னவொ அந்த ரெண்டு படங்களும் தான்...!!!) ’ஓம் சாந்தி ஓம்’ படத்துக்கும் அழகிய தமிழ் மகன் தான் போட்டி!! (இந்த இடத்தில் விஜய் ரசிகர்கள் நாங்கள் ஹிந்தி ஹீரோ உடன் போட்டி போட்டோம் என்று சலாப்பல் பதில் கொடுப்பார்கள்..வடை சுடும் அவர்களின் கதையையும் கேட்க வேண்டும் எந்து தல எழுத்து...!!!) நம்ம சாந்தி போட்ட போடுல தமிழ் மகன் மண்ணை கவ்விபுட்டாரு!! ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நான் கஸ்டப்பட்டு தெலுங்கு, ஆங்கில படங்களில் இருந்து சுட்டு சுட்டு நடிக்கும்??? படங்கள் எல்லாம் இப்படித்தான்... சம்மந்தமே இல்லமல் அடிவாங்குது...!!!

இலங்கையில் ‘தலைவா’ பிரீமியர் காட்சியை பார்க்க..!!!

ஷாருக்கானுக்கும்இளைய தளபதிக்கும் என்ன முன் விரோதமோ தெரியாது. 2007ஆம் ஆண்டுதான் விஜயின் உழைப்பில் கை,கால் எல்லாத்தையும் வைத்தார் என்று பார்த்தால் மறுபடியும் அதே பாணியை பின் பற்றிகின்ரார். அத்தாங்க மறுபடியும் கோத்து விடுராங்க. இந்த முறை கதை, கதைக்களம் எல்லாமே தமிழை மையப்படுத்தி எடுத்திருக்காங்க. ரெண்டு படத்திலயும் அழகி ‘தீபிகா படுகோன்’ நடித்திருக்காங்க என்பதும் ஒரு முக்கிய விடயம். இதே அழகிதான் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்துக்கும் கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலை தொடர்பு படுத்தி தனது அரசியல் ஆசையை மூன்று மணித்தியாள படத்திலாவது நிறைவு செய்து கொள்வோம் என்ற நினைப்பில் தான் ‘தலைவா’ படம் உருவானது...!!!

இந்த முறையும் சம்மந்தமே இல்லமல் தான் தலைப்பை வைத்திருக்கின்றார்கள் என்ன பண்ண...!!! முன்னம் சொன்னது போல இந்த முறை ஷாருக்கானின் படம் டைட்டிலிலும் தமிழ்; தமிழ் நாட்டையும் மையப்படுத்தியிருக்கின்றது. இது போதாது என்று ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் என்ற
கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றாராம். சும்மா வந்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தையே
சமாளிக்க முடியவில்லை. இந்த லட்சனத்தில் எப்படித்தான் ‘தலைவா’
தாக்குப்பிடிக்கப்போகுதோ? தெரியவில்லை. மறுபடியும் அரசியல் ஆசையில் தலைவா ஆன டாக்குத்தர் விஜய்க்கு ஆப்பு அடிக்க வந்திருக்காரு ஹிந்தி சூப்பர் ஸ்டார்...!!! இந்த முறை நோன்பு பெருநாளை முன்னிட்டு ’தலைவா’ படம் ஓகஸ்ட் 9 ஆம் திகதி வெளியாகின்றது...!!!


அதே நாளில் தான் வெளியிடனும் என்று ஷாருக்கான் தன்னுடைய ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தையும் ரிலீஸ் பண்ணறாரு. முன்னது சொன்னதை போல ஹிந்தில எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் பாதி தமிழ் படம்! சத்யராஜ் மற்றும் பல முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கிறாங்க!! இது போதாதுன்னு படத்தில நம்ம ஷாருக் ரஜினி ரசிகனாக வாராரு!!! போதாக்குறைக்கு இந்த படத்தின் நாயகி வேற தமிழ் பெண் ஆக நடிக்கின்றாவாம். கிழிந்துது கதை.. அப்ப இந்த முறையும் தியட்டர் உரிமையாளர்களுக்கு ஆப்புத்தான். எத்தோ ஒரு சல சலப்பு இவர்களுக்குள் இருக்குத்தான் போல ஷாருக்கான் தன்னுடைய படத்தில் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து ஒரு பாட்டும் வைத்திருக்காரு!!! நம்மாளுக ரஜினியின் ஒரு சிங்கள் படம் திரையில் வந்தாலே கூட்டம் சும்மா ஆகா ஓகோன்னு கூடும் இதில பாட்டு வேற...இனி சொல்லவா வெண்டும்..!!!

இப்ப சூர்யா சூப்பர் ஆகீட்டாரே...!!!

இந்த முறையும் விஜய் படம் மண்கவ்வப்போகுது போலதான் இருக்குது. ஆனால் இந்த முறையாவது டாக்குத்தரின் வாயால் வடை சுடும் ரசிகப்பெருமக்கள்..அத்தாங்க தளபதி BLOODS இந்த தடவை பதிலடி கொடுக்க தயாராக இருக்கின்றார்களா??? பொருத்திருந்து பார்ப்போம்..!!!


மூச்சு பிடித்து இந்த பதிப்பை வாசித்து விட்டு போன உங்களுக்கு எல்லாம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் ஆகப்போகின்ற ஒரு படத்தின் சூப்பர் ஸ்டில் காத்திட்டு இருக்கு...!!! இந்தாங்கோ..பார்த்துக்கோ..டவுன்லோட் பண்ணி உங்க பேஞ்ல போட்டுக்கோ...!!!

யார் படம் வந்தாலும் வரட்டும் ‘தல’ படம் வந்தா மிரட்டும்..!!!

“தலைவன் என்ற பட்டம் படத்துக்கு டைட்டில் வைத்து வாறது இல்லை...தானாக தேடிவரனும்”

Post Comment

6 comments:

 1. Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி...உங்களுக்கு மொக்கையாக இருக்கும் பதிவு இன்னொருவருக்கு சூப்பராக... இருக்கும் உங்களுக்கு சூப்பராக இருக்கும் விஜய் பலருக்கு மொக்கையாக இருப்பதை போலத்தான்...!!! விடுங்க பாஸ்...நீங்க என்னதான் கத்தினாலும் விஜய்க்கு எல்லாம் நடிக்க வராது...நடிக்கவும் தெரியாது!!!

   Delete
 2. Replies
  1. விஜய் தானே மொக்கை அப்படித்தானே சொல்ல வாறீங்க???

   Delete
 3. Super Makka!!!
  Kosubaava Kokka!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ... நமக்கு பெருமை எல்லாம் பிடிக்காது!!! ஹா ஹா ஹா உங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வாருங்கள்... பதிவை வாசியுங்கள்...உங்கள் கருத்துக்களை பின்னூட்டுங்கள்...!!!

   Delete