Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்...!!!

பட்டத்து யானையாவது விஷாலுக்கு கை கொடுக்குமா???

கொஞ்சம் படத்தைப்பற்றி :- மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  காமெடி மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும்  மொத்தம் 850 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி தெருவிக்கின்றன. ’பட்டத்து யானை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன்.

நிலைத்து நிற்குமா???

அதோடு படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது கூட தன் மகளை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம். காரணம் என்னவென்றால் தன்னை பார்த்தால் மகளுக்கு நடிப்பு சரியாக வராது என்பதால்தான்.இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு குறித்து இயக்குனர் மற்றும் விஷாலிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொள்வாராம். அந்த வகையில் தனது மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் பட்டத்து யானை படம் வெளியாவதற்குள் மேலும் இரண்டு நிறுவனங்கள் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கேட்டுள்ளனர்.ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம்.இப்போது படம் வெளியாகிவிட்டது.

கட்டாயம் எல்லோரும் படம் பார்க்க தியட்டருக்கு போய்டுங்க!!!

படத்தின் விமர்சனம் :- படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக விஷால், ஐஸ்வர்யா அர்ஜின், சந்தானம் போன்றோர் திகழ்கின்ரார்கள். படத்துக்கு ’பாய்ஸ்’ புகழ் எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். படத்துக்கான ஒளிப்பதிவினை எஸ்.வைதி செய்துள்ளார். இன்னும் பலர் ‘பட்டத்து யானை’யின் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளனர். இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹீரோ-விஷால் :- சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை, படம் பூராவும் அறுவை, அறுவை மட்டுமே. முகம் கழுவாதவனை போல ஏன் தான் ஒரு ஹீரோவை இயக்குநர் படம் முழுக்க நடிக்க ஐயோ ஓட விட்டாரோ தெரியவில்லை. சில நேரம் சேசிங் காட்சிகள் நிரம்பி இருப்பதால் அப்படி முகம் கழுவாமல் விட்டிருப்பாரோ... இந்த முறையும் விஷால் படம் சொதப்பலே...!!!

இயக்குநர்-பூபதி பாண்டியன் :- அண்ணாச்சி படம் என்று கேள்விப்பட்டதுமே எனக்கு தெரியும். இது ஏதாவது ஒரு படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இருக்கும் என்று. நினைத்ததை போல தான் இயக்கிய ‘மலைக்கோட்டை’ படத்தையே பயபுள்ள திருப்ப எடுத்திருக்காரு போல. சப்பா.. எத்த தடவ தாண்டா அதே புளித்துப்போன கதையை எடுப்பீங்க. உங்களுக்கு எல்லாம் எங்களை பார்க்க பாவமாக இல்லையா? இந்த முறையும் பூபதி பாண்டியன் பூஸ்வான பாண்டியன் தானுங்கோ...!!!

ஹீரோயின்-ஐஸ்வர்யா அர்ஜின் :- முதல்ல யார கேட்டு ஐஸ்வர்யான்னு பேரு வைத்தாரு அர்ஜின்.. சொல்லுங்க ஆக்‌ஷன் கிங்!!! இதை எல்லாம் உலக அழகி பார்த்தா மான நஸ்ட வழக்கு போடுவார் கவனமாக இருந்து கொள்ளுங்க. மழைக்காலத்தில முழைத்த போசாக்கு குறைந்த காளான் போல ஒரு மூக்கு..அதை மூக்குன்னுதான் பயளுக சொன்னாங்க. இதில இவவ விரட்டி விரட்டி லவ்வு பண்ணுறாரு ஹீரோ.. இதை எல்லாம் பொருத்துக்கொண்டால் டூயட் பாடல்களைத்தான் தாங்கிக்க முடியல.. பெரிய உருவம்...உருவம் மட்டும்தான் பெருசு மத்தபடி!!! மிச்சம் உங்க கற்பனைக்கு... பேர பார்த்த உடன பிகர பார்க்க போய்டாதீங்க மக்கள்ஸ் டாமேஜ் ஆகீடுவீங்க!!!


என்னது படத்தில நாந்தான் ஹீரோவா...அப்ப மீதி சம்பளம்..!!!

காமடி சூப்பர் ஸ்டார்-சந்தானம் :- சந்தானத்துக்கு கனக்க சீன் வைத்தால்தான் படம் ஒரளவுக்கு என்றாலும் எடுபடும் என்று தெரிந்த இயக்குநர். சந்தானத்துக்கு என்று வம்புக்கு எழுதியிருப்பாரு போல... எதோ சம்பந்தம் இல்லாமல் இருப்பது போலவே ஒரு பீலிங்கு...!!! தனக்கு கொடுத்த பங்கை சரிவர செய்த ஒரே ஆள் சந்தானம் தான். சம்பந்தம் இல்லாத காட்சிகளில் எல்லாம் சிரிப்புக்கும், இந்த படம் ஏண்டா பார்கிறம் என்றூ நினைப்பவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது சந்தானம்தான். என்றும் காமடியில் கலக்கல் இவரு தான்...!!!

கதை :- என்ன நம்பிக்கையில் இப்படியான படங்களை எடுத்து விடுகின்றார்கள் என்று தெரியவில்லை. விஷால் தன்னுடைய ஓனரோட பணத்தை பஸ்ஸில் கொண்டு போகும் போது...அந்தக்கால கமல் படத்தில் வருவது போல.. ஹீரொயின் தரிசனம் கிடைகுது. சேம் டைம் வில்லனுக்கும் ஹீரோயின் மேல லவ்வுவுவு... இவளை எல்லாம் ஒரு ஆள் காதலிப்பதே மேல் இந்த லட்சனத்தில ரெண்டு பேரு..தமிழ் சினிமா நல்லா வருமையா!!! வில்லனிடம் இருந்து எப்படி ஹீரொயின்னை காப்பாற்றுகின்றார். என்பதே மீதி கதை...!!!


  • விஷால், சந்தானம் ரசிகர்கள் படம் பார்க்கலாம் இருந்தாலும் கொஞ்சம் அவதானமாக இருக்கவும் போகும் போது காய்ச்சல் மருந்துகளை கொண்டு போகவும். ஓரே சேசிங் காட்சிகள் என்பதால் பார்க்கும் நமக்கு மூச்சு வாங்கும்... மறக்காமல் தண்ணீர் கொண்டு போகவும். இவளவும் கொண்டுபோய் படம் பார்கணுமா? என்று நீங்க நினைத்தால் வழமையை போல நல்ல திருட்டு டீவீடி வரும் வரை காத்து இருங்க மக்களே...!!!
பட்டத்து யானை - செம போர்..காசு கொடுத்து போனவங்களுக்கு சரியான தண்டனை. மரண மொக்கை. எவளவு பாவம் பார்த்து மார்க்கு போட்டாலும் 40/100 மேல ஒரு மார்க்கு கூட போட முடியாது...!!! இவளவு சொல்லியும் படம் பார்க்க போகணும் என்று நினைக்கும் உங்க மன வலிமையை நான் பாராட்டுகின்றேன்...!!!

“பட்டத்து யானை - செத்த யானை”

Post Comment

No comments:

Post a Comment