Saturday, August 24, 2013

குத்து ரம்யாவின் தேர்தல் வெற்றி - ஒரு சிறப்பு அலசல்!!!

குத்துவிளக்கு!!!

நடிகர்களோ நடிகைகளோ அரசியலுக்கு வருவது என்பது இந்தியாவை பொறுத்த மட்டில் சர்வ சாதாரணமான விடயம் தான். ஏன் உலக அளவில் கூட இதுதான் உண்மை. ஆனால் இந்தியாவில் மட்டும் அரசியலுக்கு வரும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ’கொத்து புரோட்டா’ போடப்படுகின்றார்கள். சமூக வலைத்தள போராளிகளிடம் இருந்து தமிழகத்தை மூன்றாவது தடவையாக ஆட்சி செய்யும் ”ஜே” முதல் சல்லித்தனமான அரசியலை காட்டும் ரோஜா, குஸ்பூ வரை யாருமே தப்பிக்கவில்லை. இருந்தும் ’ரம்யா’ அத்தான்பா நம்ம சிம்பு கூட குத்து படத்தில் செம குத்துப்போட்ட நடிகைதான் இப்போது சமூக வலைத்தள போராளிகளிடம் சிக்கி ’நூடில்ஸ்’ ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்த சமூக வலைத்தள போராளிகள் இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? என்ன தப்பு தான் குத்து ரம்யா செய்தார்? பார்ப்போமா?

Post Comment

Thursday, August 15, 2013

அடோஃப் ஹிட்லரின் மரணமும் மர்மமும்...!!!

தன் மக்களுக்காக போராடினால் தீவிரவாதியா? சர்வாதிகாரியா?
(இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!!பாகம்-01 இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02 இந்த பதிவுகளை வாசிப்பதற்கு இங்கே சொட்டுங்கள்) இந்த பதிவுகளில் சிறப்பித்த பிரபலங்களில் ஒருவராக ஹிட்லர் இருந்தார். அந்த பதிவில் ஹிட்லர் பற்றி பதிவிட்டவற்றை கொஞ்சம் விளக்கமாக மீண்டும் பதிவிடும் படி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்த பதிவை விளக்கமாக பதிவிட முயற்சிக்கின்றேன்.

Post Comment

Thursday, August 8, 2013

தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல - புலம்பும் உண்மையான பெற்றோர்...!!!

எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்!!!

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன். “என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை. திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.

Post Comment

Wednesday, August 7, 2013

தலைவா - முதல் விமர்சனம் - பிரீமியர் ஷோ!!!!

பார்க்க போனவங்க சாகும் நேரம்...!!!

ஒரு காலத்தில் தெலுங்கு படங்களை குறி வைத்து ரீ-மேக் என்கிற பேரில் COPY பண்ணி வந்த இளைய தளபதி விஜய் இப்போது தனது ரிரெண்டை மாத்தி தமிழ் படங்களையே நேரடியாக உள்ட்டா பண்ணி படமாக்கி இருக்கிறார் என்பது ‘தலைவா’ படம் பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது. நல்ல கதைகளை மறுத்து விட்டு பிறகு தான் மறுத்த படங்கள் மெகா ஹிட் ஆகும் போது மொக்கையாகிக்கொள்வதே வழக்கமான விஜய் இந்த முறை தனது அரசியல் கனவை நிஜத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்த உடனே படத்திலாவது அதை பூர்த்தி செய்துகொள்வோம் என்று கிளம்பி இருக்கின்றார் என்பது மட்டும் படத்தை பார்க்கும் போது நன்றாக தெரிகின்றது. “நாலு அல்லக்கைகள் தலைவா...தலைவான்னு கத்தினா தவக்கல எல்லாம் தலைவா ஆகிடுமா?” என்று எங்க ஊரில் தேர்தலின் போது ரோட்டு ரோட்டாக செய்த பிரச்சாரம் தான் நியாபகம் வருகின்றது. இந்த வாசகம் நிட்சயமாக விஜய்க்கு ’தலைவா’ படத்தில் பொருந்தும்.!!! ஏன்யா...ஏன் படத்துக்கு வைத்த டைட்டிலை நாம மறந்திடுவம் என்று படம் பூராக கோசம் போட்டு காதைக்கிழித்துப்புட்டீங்களே...!!!

Post Comment

Sunday, August 4, 2013

சேரனின் மகளில் காதல் விவகாரம் - நடந்தது என்ன?

ஒரு தகப்பன் செய்யாததை தான் செய்ததாக சொல்லுகின்றார் சேரன். குற்றச்சாட்டுக்களை சந்துரு மீது அடுக்கிகொண்டே பொகின்றார். அதில் அதிகம் நம்பும் படியாகவே உள்ளது. சினிமாவிலும் சரி, சாதாரண வாழ்க்கையிலும் சரி சேரன் அமைதியாகவே இருப்பார். அவருக்கா இந்த நிலமை என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனை உருவெடுத்துள்ளது. பிரபலங்களின் பிரச்சனை என்றால் சும்மாவா? சரி என்ன என்ன நடந்தது என்று பார்ப்போம்...!!!


ஒரு வெண் புறா...!!!

Post Comment