Saturday, August 24, 2013

குத்து ரம்யாவின் தேர்தல் வெற்றி - ஒரு சிறப்பு அலசல்!!!

குத்துவிளக்கு!!!

நடிகர்களோ நடிகைகளோ அரசியலுக்கு வருவது என்பது இந்தியாவை பொறுத்த மட்டில் சர்வ சாதாரணமான விடயம் தான். ஏன் உலக அளவில் கூட இதுதான் உண்மை. ஆனால் இந்தியாவில் மட்டும் அரசியலுக்கு வரும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ’கொத்து புரோட்டா’ போடப்படுகின்றார்கள். சமூக வலைத்தள போராளிகளிடம் இருந்து தமிழகத்தை மூன்றாவது தடவையாக ஆட்சி செய்யும் ”ஜே” முதல் சல்லித்தனமான அரசியலை காட்டும் ரோஜா, குஸ்பூ வரை யாருமே தப்பிக்கவில்லை. இருந்தும் ’ரம்யா’ அத்தான்பா நம்ம சிம்பு கூட குத்து படத்தில் செம குத்துப்போட்ட நடிகைதான் இப்போது சமூக வலைத்தள போராளிகளிடம் சிக்கி ’நூடில்ஸ்’ ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்த சமூக வலைத்தள போராளிகள் இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? என்ன தப்பு தான் குத்து ரம்யா செய்தார்? பார்ப்போமா?


சும்மா சிக்குன்னு இருந்தா வாங்க நீங்களும் கர்நாடக MP தானுங்கோ!!!

ரம்யா சினிமாவில் காலடி :-  2003ஆம் ஆண்டு கர்நாடக மொழியில் ‘அபி’ என்ற படத்தில் திரைக்கு அறிமுக ஆன நடிகைதான் இப்போது அரசியல் பிரபலம்! மொத்தமாக 45 படங்களில் நடித்துள்ளார். வெறுமனையே ஐந்தே ஐந்து தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார். இரண்டு தெலுங்கு படங்களிலும் முகம் காட்டியுள்ளார். (விளங்குது...முகம் மட்டுமா அவ காட்டினா என்றூ நீங்க பெரு மூச்சூ விடுவது...!!!) மீதி38 படங்களும் சொந்த மொழியில் அரசியலுக்காக ஆரம்ப காலம் முதலே நடிக்கப்பட்டவை போலும்! எத்தனை ஹிட் எத்தனை பிளாப்புன்னு கணக்கு பார்க்க முடியாது! ஏன்னா எல்லா படத்திலும் வஞ்சனை இல்லாமல் நடித்து இருப்பார்.(ம்கும்... நடித்தா!!!) என்ன ஆச்சரியம் என்றால்; என்ன தான் அரசியலுக்கு வந்தாலும் தன்னை இந்த நிலமைக்கு உயர்த்தி விட்ட சினிமா ரசிகர்களுக்கு சாக்கு கொடுக்காமல் இன்னும் 4 கர்நாடக படத்தில் ஒப்பந்தம் ஆகி நடித்தும் கொடுக்கின்றாராம்!

அட..அட.. ஆட்சி அமைக்கனும்னா...!!!

ரம்யா அரசியலில் காலடி :-  தமிழில் குத்து படத்தில் நடித்த ரம்யா இப்போது கன்னடத்தில் நம்பர் ஒன் நடிகை. அங்கு அவர் பெயர் திவ்யா ஸ்பந்தனா. காவிரி பிரச்னைக்காக இங்கு நடிகர்கள் திரண்டு போராட்டம் நடத்தியபோது, குத்து ரம்யா கர்நாடாகவுக்கு ஆதரவாக பெங்களூரில் வீராவேசமாக பேசினார். பொலிட்டிக்கல் பார்வை அவர் மீது விழுந்தது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும்போதே காங்கிரசில் சேர்ந்தார்.(ஐயோ என்ன அப்படி திட்டாதீங்க... தமிழில் நம்பர் ஒன் நடிகையாக எப்ப அவ இருந்தான்னு தானே கேட்குறீங்க!! இது வாஸ்தவமான கேள்விதான்!!!கர்நாடகாவில் மாண்டியா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ரம்யா போட்டியிட டிக்கெட் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் 6 மாதம்தான் பதவியில் இருக்க முடியும் என்றாலும் தனது அரசியல் பயணத்தின் முதல் படிக்கட்டு இது என்று சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு. பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சியாக பேட்டி அளித்து விட்டு வீட்டுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நான் அப்டியே சாக் ஆகீட்டேன்!!!

அவரது 77 வயது வளர்ப்பு தந்தை ஆர்.டி.நாராயணா நெஞ்சு வலியால் துடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பதறி அடித்து கதறியபடி மருத்துவமனைக்கு ஓடினார் ரம்யா.(மக்கள்ஸ் இது நடிப்பு இல்ல நிச பாசம்ஸ்...!!!) சரியாக 5.45 மணிக்கு தந்தை காலமானார். தன் வெற்றியை காண தந்தை இல்லையே என்று அவர் கதறியது கல் நெஞ்சர்களையும் கலங்க வைத்தது. தற்போது ரம்யாவுக்கு ஏற்பட்டுள்ள அனுதாப அலை வெற்றியை உறுதி செய்யப்போகின்றது என்று கணக்குப்போட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கணக்கு தப்பாகுமா? நாடாளுமன்ற தேர்தலில் எதிர்த்து போட்டி இட்ட ஆளை 47662 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்காக பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? என்ன தான் 6 மாதம்தான் MP ஆக இருக்க முடியும் என்றாலும் கிடைத்த வெற்றி அரசியல் வெற்றி..சும்மாவா! வெற்றி பெற்ற குத்து ரம்யாக்கு வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்வோம். தமிழிலும் இடைக்கிடையில் முகம் காட்டினால் இன்னும் சந்தோசம்தான்!

ஒவ்வொரு குத்தும்(நான் டான்ஸ் ஐ சொன்னன்) ஆயிரம் ஓட்டு!!!

நடிகை ரம்யாவை சமூக வலைத்தளங்களில் ஓடி..ஓடி காக்கும் சமூக வலைத்தள போராளிகளின் கருத்துக்கள் பின்வருமாறு....!!!

///நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறித்து சில நண்பர்களின் பதிவு அருவருக்கத்தக்கதாக இருக்கிறது./// அருவருக்க தக்கதுன்னா நீ ரம்யா நடித்த படம் எதுகுமே பார்க்க வில்லையோ? நல்லா இருக்குயா உங்க நியாயம்! 
 • எல்லா நடிகைகளும் தேர்தலில் வெற்றி பெறுவது ஏதோ அவர்கள் திரைப்படங்களில் காட்டும் கவர்ச்சி மற்றும் உடல் மொழியால் தான் போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் வலிந்து உருவாக்க நினைக்கிறார்கள்.(ஆமா ஆமா ஏன்னா எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு! ஏண்டா ஏன்! ஏதாவது சொல்லீட கில்லீட போறன்!!!)
 • கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது "சாந்தி நகர்" தொகுதியில் மட்டுமன்றிப் பல்வேறு இடங்களில் தமிழ் மக்கள் வாழுமிடங்களில் பிரச்சாரம் செய்யும் போது தமிழில் பேசிய ஒரே கர்நாடக அரசியல்வாதி இவராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.(டேய் உங்களுக்கு தண்ணி தராதவங்கடா அவீங்க! அவீங்களுக்கு போய் இப்படி சப்போர்ட் பண்ரியே... அப் நோக்கும் ஏதும் ரம்யா கிட்ட சலுகை இருக்கோ!!!)
 • கடுமையான எதிர்ப்புகள் கன்னட அடிப்படைவாதிகளிடம் இருந்து எழுந்த போது கூட அசராமல் "அப்படித்தான் பேசுவேன், முடிந்ததைப் பார்" என்று சவால் விட்டவர்.(ஏன் அவ அப்படி சொல்ல மாட்டா அவக்காக உசுர கொடுக்க நீங்க இருக்கும் போது ஏண்டா சொல்ல மாட்டா! ரொம்ப கடுப்ஸ்)
நீங்க சொல்லுறத பார்த்தா! ரம்யா!!! ஓ மை காட்!!!

 • கர்நாடகா மற்றும் பெங்களுர் வளர்ச்சியில் தமிழர்களுக்கு இருக்கும் பங்கினை யாரும் மறுக்க முடியாது என்று வெளிப்படையாக தனது சமூக வலைத்தளங்களில் கூடப் பகிர்ந்து கொண்டவர்.(எங்க போய் தமிழ் பற்றை காட்டுரானுகன்னு பாரன்... சப்பா...உங்க தமிழ் பற்றுக்கு அளவு கணக்கு இல்லையா!)
 • எந்த அரசியல்வாதியும், தமிழ் அமைப்புகளும் கண்டு கொள்ளாத பெங்களுர் ஈஜிபுரா மக்களின் அவலத்துக்கு இன்று வரைக்கும் அரசியல் வழியிலான தொடர் ஆதரவை வழங்கி வருபவர் ரம்யா.(அடடேய்... அடடடேய் என்னமா உழைக்குறாங்க! இந்த மேட்டர் எல்லாம் ரம்யாக்கே தெரியாதுப்பா! இவனுகளா கட்டி விடுறது...!!!)
 • பெண்களின் அரசியல் பங்களிப்பு, சமூக விழிப்புணர்வு என்று பல்வேறு தளங்களில் மிகுந்த அக்கறையோடு பங்கேற்கும் ஒரு பெண், மிக எளிமையாக மக்களோடு கலந்து பழகும் பண்பாடு நிரம்பியவர், கடுமையான உழைப்பின் மூலமும், தனது திறமைகளின் மூலமும் பல்வேறு தளங்களில் இப்போது வெற்றி பெறுகிறார்.(டேய்...டேய் ஒரு வெற்றி தானேடா அதுக்கு எதுக்குடா இப்படி பீத்திக்குறீங்க! ஓவர் டைம் போட்டு உழைக்குறானுகளே பய புள்ளயள்...!!!)
 • என்னைப் பொருத்தவரை ரம்யாவின் வெற்றி தொடர்ந்து விடாமுயற்சியோடு வெற்றி பெறத் துடிக்கும் இளம்பெண்களின் வெற்றி.(கடசீல வைச்ச பாரு ஒரு டுவிஸ்ட்டு... நல்லா கோத்து விடுங்கடா... அபுறம் கண்ணாலம் கட்ட பொண்ணு இருக்காது...எல்லாம் சினிமா, அரசியல்னு கிளம்பீடும்...!)
இப்டீன்னா...வருங்கால பிரதமர் ரம்யா வாழ்கன்னு கோசம் போடத்தானே வேணும்!!!

 • நடிப்பு அவரது தொழில்; அவரது வாழ்க்கையின் கோணம் முற்றிலும் மாறுபட்டது. பெண்களை எப்போது மனித உயிர்களாய் ஆணுலகம் அங்கீகரிக்கும் என்று புரியவில்லை, களைப்பாகவும், அச்சமாகவும் இருக்கிறது.(நடிப்புத்தான் அவ தொழில்...நான் என்ன நடிப்பு இல்லை வேற ஏதும்ன்னா சொன்னான்! குஸ்பூக்கு அடுத்த படியாக பெண்ணியம் பேசும் கருத்து இதுதான்! என்னது களைப்பாகவா... விஜயகாந் போல களைப்பு என்ற கவலைன்னு சொல்ல நினைத்தாளோ!!!)
 • தந்தை பெயர் தெரியாதவள் என்று ரம்யாவை விமர்சனம் செய்த கர்நாடக அரசியல்வாதிகளை விட மோசமானது "குத்து" ரம்யா வெற்றி, "இடை"த் தேர்தலாய் இருக்குமோ? போன்ற நம்மவர்களின் விமர்சனங்கள்!(கூகுள்ல தேடினாலும் ரம்யா போல ஒரு குட்டு கேள் கிடைக்க மாட்டா! இப்பவே எனக்கு பர பரன்னு இருக்கே..எங்கட பன மரம்...இப்பவே ஏறனும்!!!)
நண்பர்களின் ஒரு சில ரசிக்கத்தக்க முகப்பொத்தக கிறுக்கல்கள்!!!
 1. சேலையை அ#@தால் ஆகலாம் MP ....... ஒரு கேவலமான அரசியல்.... குத்து ரம்யா ’மந்தியா’ தொகுதி காங்கிரஸ் MP ஆனார்.(கொஞ்சம் விரசமான பதிவுதான்! ஆனாலும் நிசம் நிறையவே இருக்கு கண்ணுகளா!!!)
 2. மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் "ஜெயலலிதா" கடந்த சட்டசபை தேர்தலில் 41848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.... அரசியல் அனுபவம் இல்லாத/மிகக்குறைந்த "குத்து ரம்யா" கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் 47662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.... குத்து ரம்யா ராக்ஸ்!!!(அப்ப இதில் இருந்து என்ன தெரியுது...ஜே ஐ விட ரம்யா மக்கள்ஸ்காக அதிகம் (???) மிச்சம் உங்கள் கற்பனைக்கு!!!)
சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது எதுக்காகவோ ஆனால் இப்ப அவை கீழ்த்தரமான அரசியலுக்கு அடிக்கோல் இடுகின்ற தளங்களாக மாற்றப்பட்டு வ்ருகின்றமை தெளிவாக காண முடிகின்றது! எல்லா இடங்களிலும் தான் இப்படி நடக்கின்றது. அரசியல் என்றால் அதுக்காக எதுகுமே செய்யலாம் தப்பில்லை போலும்! ஆனால் இந்த கால கட்டத்தில் அரசியலில் குதிக்கும் எந்த நபடும் தனக்கு ஒரு பெருவாரியான நன்மை இல்லமல் அரசியலை நாடுவதில்லை. எல்லாமே அரசியல் தான்! இவ்வளவு பொங்கி எழும் அளவு ரம்யா என்ன தான் பண்ணிப்புட்டா! பெண்ணியம் பேச வருகின்றார்களா இல்லை அரசியலான்னு தெரியலை! உறங்கிக்கொண்டு இருக்கும் காமராசரும், எம்.ஜி.ஆரும் மீண்டும் பிறந்தாலும் இனி உங்கள காப்பாற்ற முடியாதுடா!!!

“செம பிகரு... சூப்பர் பீசூ... ஆச்சுது இப்ப அரசியல்ல கேசூ...!!!”

Post Comment

No comments:

Post a Comment