Sunday, August 4, 2013

சேரனின் மகளில் காதல் விவகாரம் - நடந்தது என்ன?

ஒரு தகப்பன் செய்யாததை தான் செய்ததாக சொல்லுகின்றார் சேரன். குற்றச்சாட்டுக்களை சந்துரு மீது அடுக்கிகொண்டே பொகின்றார். அதில் அதிகம் நம்பும் படியாகவே உள்ளது. சினிமாவிலும் சரி, சாதாரண வாழ்க்கையிலும் சரி சேரன் அமைதியாகவே இருப்பார். அவருக்கா இந்த நிலமை என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனை உருவெடுத்துள்ளது. பிரபலங்களின் பிரச்சனை என்றால் சும்மாவா? சரி என்ன என்ன நடந்தது என்று பார்ப்போம்...!!!


ஒரு வெண் புறா...!!!


சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது, அவன் நல்லவன் கிடையாது, ஒரு அப்பாவாக எப்படி என் மகளை ஒரு ஒரு கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று டைரக்டர் சேரன் சென்னையில் செய்தியாளர்களிடம் தனது மனைவியுடன் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். டைரக்டர் சேரனின் இரண்டாவாது மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபமாகியுள்ளது. தன் அப்பா மீதே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சேரன் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு சேரன் பேட்டியளித்தார். அப்போது அவருடன் அவரது மனைவி செல்வராணியும் உடன் வந்திருந்தார்.

சேரன் பேசுகையில், என் மனைவியை இதுவரை வெளி உலகுக்கு நான் அறிமுகப்படுத்தியதில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பணக்காரன் அல்ல. மகளை தோழியாக பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். நானும் அப்படித்தான் வளர்த்தேன். காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பவன் கிடையாது. நானும் காதல் திருமணம் செய்தவன் தான். என் மகளுக்கு காதல் வந்தபோது, ஆரம்பத்தில் நான் எதிர்க்கவில்லை. படிப்பு முடியட்டும் பிறகு திருமணம் பற்றி பேசலாம் என்றேன். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. சந்துரு குடும்பத்தினரை சந்தித்தேன். ஆனால் குடும்பத்தில் உள்ள சூழல் ஒரே குழப்பமாக இருந்தது. சந்துருவிடம் மாதம் 10லிருந்து 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும்படி உன்னை வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறி காட்டு. 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்கினறேன். அதுவரை நீங்கள் இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.

எல்லாம் கலி காலம்!!!

ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான்.

என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம். என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். அவனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உள்ளது. சமீபத்தில் கூட தி.நகர் காவல் நிலையத்தில் இரண்டு பெண்கள் சந்துரு மீது புகார் கொடுத்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை கோர்ட்டில் நான் சமர்பிக்க தயார். மேலும் என் பெண்ணிடம் உன் அப்பாவிடம் சொல்லி என்னை அவரது படத்தில் ஹீரோவாக போடச் சொல்லு என்று மிரட்டியுள்ளான். சினிமாவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் என்று எனக்கு தெரியும். சினிமாவுக்காக எவ்வளவு பேர் தவம் கிடக்கின்றனர் என்பது எனக்கு தெரியும். நானும் தவம் கிடந்து தான் இந்த சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அவனோ அடுத்தவர் உழைப்பில் முன்னேற நினைக்கிறான்.

நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்!!!

என் சொத்துக்களை அபகரிக்கவே என் பெண்ணை காதலிப்பதாக கூறி வருகிறான். அவனை நான் அடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறுவது உண்மை கிடையாது. அவனால் என் பெண் தான் மெண்டலியாக பாதிக்கப்பட்டுள்ளாள். அதனால் அவளை 15நாள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்தோம். என் மகளை மயக்கி, எனக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளான். இப்படி அவனை பற்றி இவ்வளவு உண்மைகள் தெரிந்த பின்னர் ஒரு அப்பாவாக எப்படி என் மகளை அவனுக்கு கட்டிக்கொடுக்க முடியும் என்று அழுதபடி பேட்டி கொடுத்தார். அருகில் அவரது மனைவியும் அழுதபடி இருந்தார்.

நல்லா கோத்து விடுறாங்க பாஸ்...!!!

எது எப்படியோ; இப்படியான ஒரு அயோக்கியத்தனமான ஒரு ஆணை எந்த தகப்பனும் தன் மகளுக்கு மணம்முடிக்க சம்மதிக்க மாட்டார். இருதியில் தீர்ப்பாகப்போவது என்னவோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில இது முடியுற பிரச்சனை போல தெரியவில்லை. எந்த அப்பாதான் இப்படியான ஒருவரை மகளுக்கு திருமணம் செய்து வைப்பார். எது எப்படியோ இந்த பிரச்சனையில் இருந்து சேரன் மீண்டு வந்தால் அதுவே போதும்...!!!


“சினிமா வாழ்க்கையா? மகளில் காதலா?”

Post Comment

No comments:

Post a Comment