Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு 6வது படம் ஆகும். ஹீரோ ஆக கலக்கும் 5வது படம் இதுதான். இதனை தொடர்ந்து ‘மான் கராத்தே’ படத்திலும் ஒப்பந்தமாகி, நடிக்கவும் தொடங்கி விட்டார். மிக மெதுவாகவும், உறுதியாகவும் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். நடிக்கும் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்று கொடுக்கின்றது என்று தெரிந்தும் அவசரம் இல்லாமல் ஆறுதலாக ஒவ்வொரு படங்களும் முடிந்த பின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி ‘கால் சீட்’ பிரச்சனைக்குள் சிக்கிக்கொள்ளாமல் நடிக்கின்றார். என்ன தான் ‘கால் சீட்’ சிக்கலில் சிக்காமல் அவதானமாக இருந்தாலும் கிசு..கிசு என்ற வலையில் சிக்காமல் தப்ப முடியாது. ஆனால் கிசு கிசு என்று எழுதப்படும் விடையங்கள் அனேகமாக உண்மையாகத்தான் இருக்கும் ஆனால் என்ன கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்படும். அதே போலத்தான் சிவகார்த்திகேயனும் கிசு கிசுவில் சிக்கியுள்ளார். சரி சுற்றி வளைக்காமல் நேரடியாக கிசு கிசுக்கு செல்வோம்!

இப்டி..இப்டி நடந்தா அவீங்க அப்டி..அப்டி கிசுகிசுப்பாங்கதானே!!!


ஆரம்பத்தில் நானும் இப்படி கிசுகிசு எழுதுபவர்களுக்கு மனசாட்சி இல்லையான்னு எல்லாம் யோசித்திருக்கேன்! (அப்படி எல்லாம் கோபமாக பார்க்க கூடாது...நான் என்ன சொன்னன்... என்ன சொன்னன்...அவ்வ்..அவ்வ்... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு!!!)ஆனால் போக போக கொஞ்சம் கொஞ்சம் உண்மை இந்த விடயத்தில் இருப்பது தெரிந்தது. ஒரே ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த அதுகும் ஜோடியாக இல்லை “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த பிந்து மாதவிக்கும் சிவாவுக்கும் எப்படி அப்படீன்னு நினைச்சன்.. ஆனால் இப்போது சம்பந்தமே இல்லாமல் ஏன் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” இல் பிந்து மாதவி நடிக்கணும். இந்த வாய்ப்பை யார் பெற்றுக்கொடுத்தது? விஜய் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சியில் பிந்துமாதவி ஏன் வரணும்! அதுகும் மற்ற தொலைக்காட்சிகளில் தலை காட்டாமல் விஜய் தொலைக்காட்சிக்கு மட்டும் ஏன் சிவா கூட வரணும்? என்று எல்லாம் யோசிக்க தோணும் ஆனால்... எது எப்படியோ! இந்த வதந்தியை கேட்டு சிவாகார்த்திகேயனின் மனைவி விவாகரத்து வரைக்கும் போய் விட்டதாக கூறப்பட்டது எல்லாம் கொஞ்சம் ஓவர்.! இருந்தாலும் இந்த மேட்டரை சமாளித்த சிவாவின் திறமையே திறமைதான். சரி.. (ஏதோ ரெண்டோட நிறுத்திகிட்டா சந்தோசம் தானுங்க சிவா!!!) இனி “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” விமர்சனத்தை பார்ப்பமா!!!

அடிங்க பாஸ் இந்த சங்கத்துக்கு ஒரு விசில்...!!!

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஸ்ரீ திவ்யா மற்றும் பிந்து மாதவி நாயகிகளாக நடிக்க வழக்கம் போல ஹீரோக்கு துணையாக ‘பரோட்டா’ சூரி மற்றும் இவரை சொல்ல மறந்துட்டன்... அவருதானுங்க உசரமான மனுஷன் ‘சத்தியராஜ்’ போன்றோர் சேர்ந்து உருவாக்கி இருக்கும் சங்கம் தான் இந்த “ வருத்தப்படாத வாலிபர் சங்கம்” ஆகும். இதே போல இந்த சங்கத்துக்கு டி.இமான் சவுண்டு கொடுத்திருக்கின்றார். PONRAM இந்த சங்கத்தின் இயக்கத்துக்கு கதை, வசனம் எல்லாம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் இந்த சங்கத்தை இயக்கும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். வழமையை போல சிவகார்திகேயன் படத்தில் இருக்கும் அத்தனை அம்சமும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கும், எல்லா வயதினரும் சிவா படத்தை விரும்பி பார்பார்கள். இப்படியானது பொதுவான விமர்சனம்! படத்தின் விமர்சனம் என்ன சொல்லுதுன்னா!!!இயக்கம்/இயக்குநர் - பொன்ராம் இந்த படத்தை இநக்கியுள்ளார். கதையிலும் பெரும் பங்கி இவருக்கு இருக்கின்றது. பழகிப்போன கதைக்கு அங்க இங்கன்னு கொஞ்சம் சாயம் பூசி சரி செய்த படம்தான் இந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. ஆனால் படத்தின் கதையினை யோசிக்க விடாமல் அடுத்து அடுத்து பரோட்டா சூரியின் நகைச்சுவையுடன் படத்தை அலுக்காமல் கொண்டு சென்றதுக்கு முதலில் பாராட்ட வேண்டும். என்னதான் இருந்தாலும் படத்தில் கொஞ்சம் தொய்வுகள் தெரியத்தான் செய்கின்றது. படத்தின் நேரத்தை இன்னும் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருந்தால் படம் இன்னும் நல்லாக இருந்திருக்கும். (இயக்குநர் பங்கு சூப்பர் என்று சொல்ல முடியாது.. ஆனால் படம் நிட்சயம் பேர் வாங்கும்!!!)

நடிகர்கள் - படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சம அளவு பங்கு ‘பரோட்டா’ சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் படத்தினை முழுமையாக சுமக்கின்றார்கள். சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒரு காதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகினால் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து விடுகின்றார் போல... உண்மையிலுமே ‘சிவனாண்டி’யாக படம் முழுவதும் செம கெத்தாக வலம் வருகின்றார். என்னதான் இருந்தாலும் சத்யராஜ் ஐ அவ்ளோ தலை முடியுடன் பார்க்கும் போது கொஞ்சம் ஜர்க் ஆகத்தான் செய்கின்றது. (மொத்தத்தில் நடிகர்களின் பங்கு சிறப்பு.. கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சூப்பர்...!!!)

மொத்தத்தில் ஸ்ரீ திவ்யா இன்னொரு ஸ்ரீ தேவிதான்!!!

நடிகைகள் - முன்னம் சொன்னது போல படத்தில் இரண்டு ஹீரோயின்கள். பிந்து மாதவி தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும் என்று இல்லை. படத்தில் ஸ்ரீ திவ்யா சூப்பர். ஒரு கிராமத்து பொண்ணாக படம் முழுக்க மிகவும் அழகாக வலம் வருகின்றார். பெரிதாக நடிப்பை வெளிக்காட்ட இந்த படத்தில் ஹீரோயின்க்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை செமையாக ரசிக்கும் படி நடித்துள்ளார். காதல் காட்சிகளின் ஸ்ரீயின் கண்கள் அலை பாயும் அழகே அழகுதா! (மொத்தத்தில் ஸ்ரீ திவ்யா இன்னொரு ஸ்ரீ தேவிதான்!!!)

பாடல்கள்/இசை - ஏற்கனவே ஹிட் ஆன பாடல்கள்தான். காட்சிகளுடன் பார்க்கும் போது இன்னமும் சூப்பராக இருக்கின்றது. டி.இமான் இப்ப எல்லாம் சூப்பராக பின்னுராப்பிலே!!! அதிலும் ‘ஊதா கலரு ரிப்பன்...’ ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ பாடல்கள் தியட்டரை விசில் சத்தத்தால் நிறைக்கின்றது. சிவாஅவின் நடனமும் கூடவே சூரியின் ரகளையும் சொல்லி அடங்காத சேட்டைகள்தான். இரண்டு மெலடி பாடல்களும் நினைத்தது போலவே தென்னை, புல்லு, காடு, ரோடு என்று வளைத்து வளைத்து எடுத்திருக்கின்றார்கள். பாடல்களை தனியாக கேட்கும் போது.. இனிமைதான். (மெலடி பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குநர்...!!!)

சங்கம் செயற்பட ஆரம்பிச்சுறிச்சூ!!!

கதை/திரைக்கதை - கதை என்று எதுகும் புதிதாக சொல்ல இல்லை. ஊரில் பரம்பரை பணக்காரர் தான் ‘சிவனாண்டி’ என்கின்ற சத்யராஜ். சிலுக்குவார்பட்டியில் வாலிபர் சங்கம் வைத்திருப்பவர்தான் ‘போஸ்பாண்டி’ என்கின்ற சிவகார்திகேயன். ஊரில் ஒரு சின்ன வாய் தகறாரில் தனது மூன்று பொண்ணுகளில் யாராதுவது ஓடிப்போய் கல்யாணம் செய்தால் தான் தனது காதை அறுத்துக்கொள்வதாக சபதம் செய்கின்ரார் சிவனாண்டி. இரண்டு பொண்ணுகளுக்கு அவசர அவசரமாக படிக்கும் வயதிலேயே கல்யாணம் செய்து வைத்து விட்டார். கடசி பொண்ணுதான் ஸ்ரீ திவ்யா. இந்த பொண்ணுக்கும் சிவகார்திகேயனுக்கும் எப்படி காதல் மலர்ந்தது. எப்படி சிவனாண்டியை மீறி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதுதான் படம். ஆனால் படம் முடியும் போது இயக்குநர் ஒரு டுவிஸ்டு வைத்தார் பாடுங்க சப்பா... அதுதானுங்க டுவிஸ்டு..!!! (மொத்தத்தில் படம் சலசலப்பில்லாத கலகலப்பு நிறைந்த படம்... ஒன்று அல்லது இரண்டு தரம் திரையரங்கில் பார்கலாம்... வீட்டில் டீவீடி எடுத்து அலுக்காமல் பார்க்கலாம்!!!

போஸ்பாண்டியன் அண்ணனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” சலசலப்பில்லாத கலகலப்பு ஹிட்டுதான்!!!

Post Comment

No comments:

Post a Comment