Friday, October 11, 2013

நய்யாண்டி - சினிமா விமர்சனம்!!!

இந்த படத்துக்கு ’நய்யாண்டி’ என்று பேர் வைத்ததுக்கு பதிலாக ‘கல்யாணத்துக்கு பொண்ணு தேவை’ என்று வைத்திருக்கலாம்... யோ..டிரெக்ரரு உமக்கு கருனையே இல்லையா? ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் இயக்கிய படம்... இது கூட பரவாயில்லை... தேசிய விருது வென்ற நடிகரும் சேரும் போது படம் எப்படி இருக்கும்? இப்படியான ஒரு நினைப்பில தான்யா படம் பார்க்க போனன். ஏண்டா வந்தா ஏண்டா வந்தா?? என்று கேட்டு வாயிலயே குபிகீர் குபிகீர் என்று குத்தி குத்து கேட்டாங்கையா? என்ன படம் என்ன படம்!!! ஒரு இடத்தில் கூட தேசிய விருது வாங்கிய இயக்குனர் படம் போல இல்லையே... அப்ப இவர் பேர்ல யாரோ இயக்கிபுட்டாங்க என்று சோல்லுறீங்களா? இருக்கும் இருக்கும்... நஸ்ரியா தொப்புளுக்கே டூப்பு போடும் போது இயக்குனருக்கு டூப்பு போட மாட்டாங்களா என்ன!!!சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்தது போலவே இருக்கு... இல்ல சிவகார்த்திகேயனை நினைத்து எழுதின கதையோ தெரீல்ல... 100 வருட இந்திய சினிமாவில் இல்லாத அளவுக்கு புதுமையான கதை!!! அது என்னன்னா!!!

 நண்பர்களை பார்க்க ஹீரோ ஊருக்கு போறாரு, அங்க போய் சும்மா இருக்காரா நம்ம வடிவேலு காணவில்லை என்று கம்பிலைட் கொடுத்த கிணறை போல ஒரு பெரிய கிணறை ஓடி வந்து ஓரே பாய்ச்சலில் கடக்கிறார்.(இந்த சீன் லயே தெரியும் படம் எப்டி பாய்ந்து பாய்ந்து ஓட போகுதுன்னு) ஹீரோ எப்படி நண்பர்களை பார்க்க வாறாரோ.. அதே போல நம்ம நஸ்ரியா பொண்ணும் தன்னுடைய பாட்டியை பார்க்க வார சாட்டாக ஊர் திருவிழாக்கு வர்றா! திருவிழாவில் நஸ்ரியாவை தேடும் ஹீரோக்கு ஒரே சாக்கு அது என்னான்னா ஹீரோயின்னே நேர வந்து ஹீரோ கிட்ட பேசுது.. (அட என்ன ஒரு டுவிஸ்டுன்னு!!!) அந்த பொண்ணு ஓடிவந்து... வந்து... வந்து தென்னை மரத்த தொட்டுபுட்டு ஹீரோ கிட்ட கதை கதையா சொல்லுது... ஹீரோ அதை கேட்காமல் சிங்கிளா டான்ஸ் ஆடுறாரு... அந்த பொண்ணை எப்படியாவது லவ் பண்ண வைக்கிறன் என்று சபதம் கொண்ட நம்ம ஹீரோக்கு பர பரன்னு ஆகீட்டு போல கீழ இருந்து கள்ளு குடித்தா கிக்கு ஏறாதுன்னு பனை மரத்திலையே ஏறி... வௌவ்வால் போல தொங்கீட்டு நின்னு கள்ளு குடிப்பார்.. குடித்துட்டு இறங்காமல் ‘இந்த மரத்தில இருந்து அந்த மரத்துக்கு தாவினால் என் காதல் சக்ஸஸ்...’ என்று சொல்லி தியட்டரில் இருந்த எல்லோருக்கும் விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் இடைவேளைக்கு முன் வரும் காட்சியை நியாபகப்படுத்துறார். சொன்னதோட விடாமல் குரங்கு கூட அப்படி தாவாதுங்க... இங்க இருந்து அங்க தாவுறது அங்க இருந்து இங்க தாவுறதுன்னு குரங்காவே மாறிபுட்டாரு தனுஷ்..!! இவர் பனை பரத்தையே இந்த தாவு தாவுறாரே... இவரை லவ் பண்ணா என்னை எப்படி எல்லாம் தாவுவாரு என்று நினைத்த ஹீரோயின் பொண்ணுக்கு உடன காதல் டபுக்குளீர்ன்னு வந்துடுது. அதை பார்த்துட்டு இருந்த எங்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துபுடுது...


முக்கியமான ஒரு ஆளை சொல்ல மறந்து போச்சு அதுதான் வில்லன் இவரு எப்படி நஸ்ரியா கிட்ட அறிமுகம் ஆகிறார் என்றால் ரயில் போய் கொண்டு இருக்கும் போது சன்னல் வழியாக வெளியே இருக்கும் தூண்களை பத்து வரை எண்ணுது பொண்ணு.. ஏன் எண்ணுதுன்னு கேட்குறீங்களா பத்து எண்ணுறதுக்கு முன்னம் ரயில் நின்னா தான் பாட்டி ஊருக்கு போவன்... நிக்கலைன்னா போக மாட்டன்... (என்ன ஒரு கதையில் திருப்பம்..!!!) அதே போல ரயிலும் நிக்குது. அப்ப நஸ்ரியா ‘ஐ..ஐ... நான் நினைத்தது போல ரயில் நின்னுட்டு..’ என்று ஆனந்தத்தில் துள்ளி குதிக்கும் போது அவர் துள்ளலில் விழுந்த ஆள்தான் வில்லன். ஆளை பார்பதுக்கு அப்டியே சாருகானின் மாமா பையன் போல இருப்பாபில! சரி இனி பனை மரத்துக்கு போவம் (சீ...சீ கதையை விட்ட இடத்துக்கு போவம்...!!!) திருவிழா முடிய ஹீரோயின் அப்பா கூட ஊருக்கு போகுது... அப்பா என்ன பண்ணி புட்டாடாருன்னா 100 வருட சினிமாவில் வராதது போல பொண்ணுக்கு தெரியாமல் கல்யாணத்து ஏற்பாடு செய்து புட்டாரு... இப்ப இந்த பொண்ணை பார்க்க வந்தவரு யாருன்னு தெரியுமா அவர்தான் அந்த ரயில்ல பார்த்த அந்த வில்லன்... (சப்பா..படம் பூரா ஒரே டுவிஸ்டுன்னு நீங்க நினைக்குறீங்களா!!!) நிச்சயதார்த்தம் முடிந்ததும். நம்ம ஹீரோ ஹீரோயின்ன பார்க்க வாராரு வந்தா இங்க நிச்சயதார்த்தம் முடிந்து போச்சு.. பொண்ணு ஓ..ன்னு அழுவுது... இனி என்ன பண்ண முடியும் 100 வருட சினிமாவில் இல்லாதது போல ஹீரோ பொண்ணை கல்யாணம் செய்து கொண்டு ஊர விட்டே ஓடி புடுறாது.


தனுஷ்க்கு ரெண்டு அண்ணா... ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆகவில்லை. இவங்க வீட்டுக்கு கணக்கு எழுதும் பொண்ணாக தனுஷ் நஸ்ரியாவை அனுப்பி வைக்கின்றார். கல்யாணம் ஆகாத அந்த ரெண்டு அண்ணாக்களும் கணக்கு எழுந்த வந்த நஸ் ஐ கிஸ் அடிக்க அத்தாங்க சைட்டு அடிக்குறாங்க. அண்ணாக்கள் சைட் அடிக்க கேப்பில் ஹீரோ நஸ் ஐ பிரெக்னெண்ட் ஆக்கி புடுறாரு.(அந்த பிள்ளையே சின்ன குழந்தை போல இருக்கு அந்த பிள்ளைக்கு பிள்ளையான்னு நினைக்காதீங்க இதுதான் கதையில் முக்கிய திருப்பம்!) ரெண்டு குழந்தைகளையும் வில்லன் கிட்ட இருந்து ஹீரோ எப்படி காப்பற்றுகின்றார். அம்மா, அப்பாவை எப்படி சமாளித்து நஸ் ஐ உத்தியோக பூர்வ மருமகளாக ஏற்றுக்கொள்ள வைக்கின்றார். இம்பூட்டும் தானுங்க படம்.! படத்தில மட்டும் பரோட்டா சூரி இல்லைன்னு வச்சுகோங்களேன் பல உசுரு போய் இருக்கும் தியட்டரில்... அதுக்காக ஜோக்குக்காக எல்லாம் போய் படம் பாருங்க என்று சொல்லும் அளவுக்கு கூட ஜோக் இல்லை...!!! பரோட்டா சூரியின் தெரிவுகள் என்று ஜோக்கு டீவீடி ல வரும் அப்ப அதை பாருங்க.. தயவு செய்து படம் பார்க்க போய்டாதீங்க போய்டு வந்தா ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டீங்க!!!

“நையாண்டி மொத்தத்தில் பல்லு விழுந்த பொக்கை கிழவி”

Post Comment

No comments:

Post a Comment