Wednesday, October 30, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்!!!

படம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு, உலக சினிமாவுக்கு நிகராகா இருக்குன்னு சும்மா பீலா விட இயக்குநரும் விரும்பவில்லை நம்ம ‘தல’யும் விரும்பவில்லை! அப்படி இருக்கையில் விமர்சனத்தில் மட்டும் ஏன் கெத்து காட்ட வேண்டும்? படத்தில் ரசிக்க கூடியவற்றையும் படத்தில் நடித்தவர்களில் கெரெக்டர் பத்தியும் ஆர்பாட்டம் இல்லாமல் சொல்லுவோம். அதுக்காக ‘ஆரம்பத்தின் கதை இதுதான்’ என்று எல்லாம் சொல்ல முடியாது! பில்லா-2007க்கு பிறகு விஸ்னுவும் அஜித்குமாரும் கை கோர்க்கும் இரண்டாவது படம் தான் ‘ஆரம்பம்’ படத்திற்கான தலைப்பு வைப்பதிலேயே எவ்வளோ தாமதம்! படமாவது சொன்னது போல தீபாவளிக்கு வருமா? என்று நினைத்ததுண்டு ஆனால் படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டது! அதுகும் சும்மா வரவில்லை அதிரடியாக ஆரம்பித்திருக்கின்றது ‘ஆரம்பம்’ படம் தனது ஹிட்டை!!! படத்தின் இவங்க இவங்க நடித்திருக்காங்க...!!! அவங்க பேர் பட்டியல் எல்லாத்தையும் போட்டு பதிவை இழுத்தடிக்க விருப்பமில்லை! வந்த விடயத்தை சுருங்க சொல்லி விட்டு போவோம்! சரி இனி தலயின் ’ஆரம்பம்’ விமர்சனம் ஸ்டாட்டு!!!

சைலெற்றாக ஹிட்டுக்கொடுக்கனும்!!!


அண்மையின் வந்த அஜித் படங்களில் வழமையை போல அஜிதே மையமாக இருப்பார் அவரை பற்றியே கதையின் நகர்வு இருக்கும். அதே போலத்தான் ‘ஆரம்பம்’ படமும்! இந்த முறை கொஞ்சம் கிக்கான, ஸ்டைலான ஒரு பவர்ஃப்ல் கதாப்பாத்திரத்தின் அஜித் வருகின்றார். இரண்டு விதமான அஜிதை படத்தில் காணலாம். முதல் பாதி கெட்டவனாகவும் இரண்டாம் பாதி நல்லவனாகவும் வருவார். இரண்டாம் பாதியின் வரும் கதையின் அடிப்படையின் படத்தை பார்த்தால் பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கும் ஆனால் படத்தில் ஒரு நல்ல மெசெஞ் இருக்கு! பல வருடங்களுக்கு பின்பு அஜித் ஒரு மெசெஞ் சொல்லும் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

வரே...வாவ்!!!

ஆர்யாவும், தப்சீயும் படத்துக்கு இன்னொரு பெரும் பங்கு. சொல்லப்போனால் தப்சீ படத்திற்க்கு பாதகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த பாதகத்தை ஆர்யா தனது குரும்பாலும் சீரியஸ் நடிப்பாலும் சமாளித்து கதையில் ஆர்யா+தப்சீயின் பங்குகளை சமாளித்தார். நயந்தாராவை சொல்லவே வேண்டாம் பில்லா-2007இல் பார்த்தது போல இல்லாவிட்டாலும் இதிலும் கொஞ்சம் இருக்கின்றது! படத்துக்கு அஜித் எவ்வளோ முக்கியமோ அதே போல அஜித்துக்கு நயன் முக்கியம். என்பது போலவே கதை நகர்கின்றது! என்னா ஆர்யாவின் யுனிவெசிட்டி வாழ்க்கையை காட்டும் போதுதான் கொஞ்சம் போர் ஆக இருக்கின்றது. இதை இன்னும் கவனம் செலுத்தி விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம்! பிற்பாதி வேகமாக இருப்பதால் இந்த குறை படம் முடிவில் பெரிதாக தெரியவில்லை!!!

யுவனின் இசையை சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் படத்துடன் பார்க்கும் போது நல்லாகத்தான் இருக்கின்றது. அட..அட... ஆரம்பமே... ஓபினிங் சாங் ஆகவும், என் பியூசு போச்சே... ஆர்யா+தப்சீக்கானா காதல் பாட்டாக இரண்டாவதாகவும், ஹோலி சாங் ஆக மெல்ல வெடிக்குது... பாடல் மூன்றாவதாகவும், ஸ்ரைலிஸ் தமிழச்சீ... கடைசி பாடலாகவும்.. அமைக்கப்பட்டுள்ளது. இதின் ஹெரே ராமா... பாடல் படத்தின் வேகத்துக்கு பாதிப்பாக இருக்கும் என்பதால் தூக்கப்பட்டதாம்!!! இதில் ஹோலி பாடலும், ஸ்ரைலிஸ் தமிழச்சி பாடலும் சூப்பர். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துக்கு ஓப்பினிங் சாங் இருப்பதால் அட..அட... ஆரம்பமேயும் கலக்கலாக இருக்கும்! குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பின்னனி இசை இல்லை ஆனால் படத்துடன் பார்க்கும் போது யுவனை வாழ்த்தாமல் இருக்க முடியாது. என்ன தொடர்ந்து அஜித் படத்துக்கு இசை அமைத்து யுவன் டயட் ஆகீட்டார் போல...!!!

அஜித் இல்லையேல் ஆரம்பம் இல்லை!!!

படத்தின் அஜித் வெருமனையே 2 நிமிடங்கள் டுக்கட்டி பைக்கில் வரும் காட்சி, போட் சீன் மற்றும் பொலீஸ் ஜீப்பில் இருந்து குதிக்கும் காட்சி போன்றாவையால் தியட்டர்கள் அதிரும் என்பது உறுதி. படத்தின் நிறைய டுவிஸ்டுக்கள் இருக்கு அதை எல்லாம் சொல்லனும் என்றூதான் ஆசை ஆனால் சொன்னால் ‘தல’ ரசிகர்கள் குழம்பி விடுவார்கள்! மொத்தத்தில் மீண்டும் ஒரு முறை பலர் செர்ந்து குழுவாக நடித்து முடித்த படத்தை அஜித் மட்டும் ஹிட் என்ற வெற்றியை நோக்கி தூக்கி செல்கின்றார். இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. அஜிதை மையமாக வைத்தே கதை நகர்கின்ரது. கதையின் எந்தவொரு இடத்தை பார்த்தாலும் அஜிதோ அல்லது அஜித்தின் கரெக்டரின் பெயரோ இல்லாமல் படம் நகராது மற்றயது இந்த படத்துக்கு வரும் முழு கூட்டமும் அஜிதை மட்டுமே எதிர்பார்த்து வருகின்றது. அதாகப்பட்டது அஜித் அந்த பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார். அஜிதிற்கா படத்தை அஜித் ரசிகர்கள் எத்தனை தடவை பார்த்தானும் சலிக்காது. சினிமா/வேறு ஹீரோக்களின் ரசிகர்களாயின் கொடுத்த காசுக்கு மதிப்பாக படம் கலகலப்பாக பார்க்கலாம்!!! இந்த படம் ஒட்டு மொத்தமாக இந்த தீபாவளியை என்யாய் பண்ணுவதற்காகவே வெளிவந்திருக்கின்றது! இந்த தீபாவளி நிட்சயம் ‘தல’ தீபாவளிதானுங்கோ!!! வெறுப்பதற்க்கு எதுவும் இல்லை என்றாலும், பிடிப்பதற்க்கு ’தல’யை தவிர வேறொன்றும் இல்லை!!! தல மட்டும் மாஸ்!!! இதுக்கு பேர்தான் தல தீபாவளின்றது!!!
எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!


படத்தின் அஜித் மாஸ் இல்ல... அஜித்தால் ‘ஆரம்பம்’தான் மாஸ்!!!

Post Comment

19 comments:

 1. vimarsanam nalla iruku.. ungalodathutan muthal vimarsanam padichen. padam sunday anaikku parkkalam iruken..

  ReplyDelete
  Replies
  1. படத்தை எண்னைக்கு என்றாலும் பாருங்க ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்க போங்க! விஷ்னு படம், யுவன் முயூசிக்கு என்று எல்லாம் நினைத்து போகாதீங்க!! பார்த்துட்டு சொல்லுங்க சகோ!!!

   Delete
 2. இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உரித்தாகட்டும் சகோதரா!!!

   Delete
 3. முக நூல் மூலமாக உங்கள் தளத்திற்கு வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

  'தல' தீபாவளி தான்... ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...!!! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

   Delete
 4. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும்!!!

   Delete
 5. நீங்க ஒரு தீவிர தல ரசிகன். நீங்களே “எதிர்பார்க்காம போங்க” என்று சொல்லுறதை பார்த்தா படம் ஊத்திக்கிச்சுபோலதான் இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. என்னை நன்கு தெரிந்த மிஸ்டர்.அனோனிமஸ் அவர்களே நான் எழுதுவதுதான் படம் ஆகாது!!! நான் நிறைய எதிர்பார்த்து போனேன்.. அதாவது விஸ்னு படம், பில்லா-2007 எடுத்த இயக்குநர், யுவனின் பின்னனி இசை என்று பலதை நம்பினேன் ஆனால் இவ் இருவரும் பெரிதும் சுதப்பியது! கவலைதான் அதனால்தான் எதிர்பார்க்காமல் போக சொன்னேன்!!! மற்றப்படி படம் ஊத்திகிச்சு என்று இல்லை சகோதரா!!! எப்படியோ நீங்க படம் பார்க்க தானே போறீங்க அப்ப சொல்லுங்களேன்!!!

   Delete
 6. கோசுபா அண்ணா.. விமர்சனம் சூப்பர்.. :)

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி பேர சொல்லுங்கப்பா அப்பதான் எனக்கு பேர் நியாபகம் இருக்கும்!!! மிக்க நன்றி சகோதரா!!!

   Delete
 7. Really nice review. .Thanks. .
  Happy thala diwali..

  ReplyDelete
  Replies
  1. யா... யா... யா... பில்லா-2 விமர்சனத்தோட திருந்தீட்டம்!!! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

   Delete
 8. Replies
  1. நண்பா உனது பின்னூட்டலுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்... ஆனால் நீ என்ன ‘சிறப்பு’ என்று முடித்துவிட்டாய்!!!

   Delete