Monday, November 11, 2013

அஜித், விஜயை தொடர்ந்து கார்த்தியை தாக்கும் மீடியாக்கள்!!!

இதனால தான் நான் எதுகுமே பேசுவதில்லை!!!

இன்று தமிழ் சினிமாவே தூக்கி கொண்டாடும் ஒருகால ’அல்டிமேட் ஸ்டார்’ இப்போதைய ‘தல’ அஜித்குமார் மற்றும் இளைய தளபதி விஜய் இந்த இரண்டு துருவங்களை பின்னியே இன்றைய தமிழ் சினிமா தனது வெகுவான வருவாயை சம்பாதித்து வருகின்றது. ஆனால் ஒரு காலம் இவ்விருவரும் பத்திரிகையாளர்களால் காய்ச்சி கழுவி ஊத்தப்பட்டதை யாராலும் மறந்திருக்க முடியாது! வெளிப்படையான பேச்சின் மூலம் அஜித் பேசுவதை பத்திரிகைகள் விற்றுப்போக வேண்டும் என்று அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று உரு மாற்றிஅஜித்தை சிக்கலில் மாட்ட வைத்தனர். ஒரு காலம் இவர் வெளிப்படையாக பேசுவதனால் இவரை கேலி, கிண்டல் செய்த அதே திரையுலகம் தான் இப்போது அதே வெளிப்படையான பேச்சுக்காக அஜித்தை புகழ்ந்து தள்ளுகின்றது. இந்த புகழுக்கு ஏதோ ஒரு காரணமாக பத்திரிகையும் தொலைக்காட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் அஜித் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு பேட்டி கொடுப்பதை விட்டுவிட்டார் போலும்! அஜித்தை பார்க்க வேண்டுமானால் திரையரங்கிற்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலமையை உருவாக்கினார். இப்போது அஜித்தை தங்கள் தொலைக்காட்சியில் காட்டினால் தங்கள் தொலைக்காட்சியின் டீ.ஆர்.பி எகிறும் என்றும் அஜித் பற்றிய செய்திகளை அதிகம் பகிர்ந்தால் தங்கள் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படும் என்று அஜித் பற்றிய செய்திகளுக்காக அலைகின்றது சுயநலம் கொண்ட மானம் கெட்ட மீடியாக்கள். பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அஜித்தை படாது பாடுபடுத்தும் போது சிக்கலே இல்லாமல் முதலிடம் காணும் சந்தோஷத்தில் இருந்தார் இளைய தளபதி! ஆனால் ஈற்றில் அவரையும் விட்டு வைக்கவில்லை!!!என் நெஞ்சில் குடியிருக்கும் கோடானா கோடி...!!!

குறிப்பாக விஜய் ஒரு போது மேடையில் பேசும் போதும் கார சாரமாக பேசுவது இல்லை. ‘என் நெஞ்சில் குடியிருக்கும்...’ என்று ஆரம்பித்தால் தேன் வடிய அன்பாக பேசும் இவரை எப்படி மீடியா கேலி செய்ய முடியும் என்று நீங்க நினைப்பது நியாயம்தான்! ஆனால் அன்பான விஜய் கூட ஒரு இடத்தில் கோபப்பட்டு வீணாக மாட்டிக்கொண்டார். தொடர்ந்து தோல்விகளால் நொந்து போன போது ‘வில்லு’ படத்திற்கான ஒரு பிரெஸ் மீற் வைக்கப்பட்டது இதன் போது விஜய் பத்திரிகையாளர்களை ‘ஏய் பேசீட்டு இருக்கன் இல்லே...சைலன்ஸ்...’ என்று கத்தினார்.(அந்த காணொளியை காண இங்கே சொட்டுங்கள்) அங்கிருந்து ஆரம்பித்தது. இன்று வரை ஏதோ ஒரு பத்திரிகையோ ஏதோ ஒரு தொலைக்காட்சியோ விஜய் ஐ வம்புக்கு இழுத்த வண்ணமே உள்ளது! அஜித்தை வம்புக்கு இழுத்து ஒரு முடிவு கண்ட பின்னர் விஜய் தானாக மாட்டிக்கொண்டார். அண்மையில் G T.V வெளியிட்ட ஒரு காணொளியால் விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களே மனம் நொருங்கி போய் உள்ளனர். G T.V விஜயை ஒரு வில்லன் போலவும் தனது ரசிகர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நடிகர் போல சித்தரித்திருப்பது மிகவும் கவலைக்கிடமான ஒன்றாகும். அதுமட்டும் இல்லை இந்த தகவல் விஜய்யின் முன்னேற்றத்திற்க்கு எந்த அளவில் பாதிப்பாக இருக்கும் என்று தெரியவில்லை! அப்படி ஒரு நல்ல மனிதனுக்கு இப்படியொரு சோதனையா? எல்லாம் அரசியல் நகர்வுகளாக இருக்கும் என்று மனதை அமைதிப்படுத்திக்கொள்ளத்தான் முடியும். அந்த காணொளியை காண்பதற்க்கு இங்கே சொட்டுங்கள்!!! இந்த காணொளி உணமையோ இல்லையோ இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் அப்செற் ஆகினார்கள் என்பதே நியம்! இந்த காணொளியை எப்படியாவது யூரியூப்பில் இருந்து எடுத்தே ஆக வேண்டும்!!!

நாம எப்பவுமே பிரெண்ஸ் ஆனா நம்ம FANS!!!

என்னடா ‘கார்த்தி’ பற்றி தலைப்பை போட்டுபுட்டு அஜித், விஜய் பற்றி சொல்லுறானே என்று காண்டாகாதீங்க பாஸ்... நாம மேட்டர் இல்லாமல் சொல்லுவமா!!! நல்ல ஒரு கலைக்குடும்பத்தி இருந்து வந்தவர். ஆரம்பத்தின் நடித்த ஐந்து படங்களும் செம ஹிட்டு. போக போக என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. தொடர்ந்து தோல்விகள்தான். அதிலும் குறிப்பாக சகுனியின் ஆரம்பித்தது இந்த சோகம் கடைசியாக வந்த அழகுராஜா வரை தொடர்கின்றது. இந்த தோல்விக்கு நல்ல கதைகளை தெரிவு செய்யாமை மற்றும் கதை, இயக்கம் என்பனவற்றில் தலையிடுவது போன்றவை பெரும்பான்மை வகித்தாலும் மீடியாவும், பிரெஸும் முக்கிய காரணமாகும். அதாகப்பட்டது என்னவென்றால் கார்த்தி தெலுங்கு மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் ’தமிழ் ரசிகர்களா விட தெலுங்கு ரசிகர்களுக்குத்தான் ரசிப்பு தன்மை அதிகமுன்னு...’ என்று சொல்லி வீணாக மாட்டிக்கொண்டார். இன்று வரை கார்த்தியின் படம் வரும் போது ‘தெலுங்கு’ ஹீரோ நடிக்கும் படம் என்று கலாய்க்கப்படுவது சகயமாகிவிட்டது. படம் ஹிட் ஆகும் போதே இந்த மீடியாக்கள் சும்மா இருப்பதில்லை. தொடர்ந்து பிளாப் ஆனால் சொல்லவா வேண்டும். ”கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா” போலதான். ஆசைக்கு கழுவி ஊத்துகின்றார்கள்! ரெண்டு படம் தொடர்ந்து ஊத்திக்கிடாலே கதை முடிஞ்சு போச்சுன்னு கை கழுவி விட்டுட்டு போற இந்த காலத்திலும் ரசிகர்கள் கார்த்தியை மலை போல நம்புகின்றார்கள் அதனை வீண் அடிக்காமல் இனியாவது பொறுப்பாக நல்ல கதையுள்ள படங்களில் நடித்து ஹிட்களை கொடுக்க வேண்டும்!!! அது மட்டும் இல்லாமல் இப்போது கார்த்தி பற்றி இன்னொரு பீதியை கிளப்பும் தகவலும் வந்துள்ளது! அது என்ன வென்றார்......

நல்ல நடிகர் என்ன ஆச்சு திடீரெண்டு இவருக்கு!!!

# முதல் படம் ’பருத்திவீரன்’ இதை இயக்கினார் ’அமீர்’ அதன் பின்னர் அமீர் இயக்கிய படம் ‘ஆதிபகவன்’ பேர்ல மட்டும்தான் பகவான். ஆனால் வசூலில் பிச்சைக்காரன் ஆகியது!

# அடுத்த படம் ’செல்வரகவன்’ இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ அதன் பின்னர் செல்வா இயக்கிய படம் "மயக்கம் என்ன" தியட்டருக்கு போன எல்லோரும் கோமா!!!

# அடுத்த படம் ‘லிங்குசாமி’ இயக்கிய ‘பையா’ அதன் பின்பு லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ சொல்லவே வேணாம். கொலையா கொண்ணுறிச்சு!!!

# அடுத்த படம் ’சுசீந்திரன்’ இயக்கிய "நான் மாகான் அல்ல" அதன் பின்னர் சுசீந்திரன் இயக்கிய படம் ’ராஜபாட்டை’ விக்ரம் அடித்த அடில தியட்டர் ஸ்கிறீன் எல்லாம் கிழிஞ்சு போச்சு!!!

# அடுத்த படம் ‘சிவா’ இயக்கிய ’சிறுத்தை’ அதன் பின்னர் சிவா இயக்கிய படம் "தறுவு" என்ற தெலுங்கு படம். தெலுங்கிலேயே பிளாப் ஆன படம்னா பார்த்துகொள்ளுங்கலேன்!!!

# அதன் பின்பு ‘சகுனி’ எடுத்த ’சங்கர் தயாள்’அடுத்ததா ’அலெக்ஸ் பாண்டியன்’ எடுத்த ’சுராஜ்’ ரெண்டு பேரும் என்ன ஆனாங்கனே தெரியல!!!

# கடைசியா தொடர்ந்து மூணு ஹிட்டு கொடுத்த ‘ராஜேஷ்’ கடைசியில் அவரை ஊரே காமிடி பண்ணும் படியா ஆகிரிச்சு!!! அதுக்கு காரணம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாவாவ்...வாவ்... என்யாய்!!!

இயக்குநர்களின் இந்த நிலைக்கு காரணம் காத்தியின் ராசிதான் என்று கோடம்பாக்கமே பேசினாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் என்றால் கார்த்தி ஒரு நல்ல நடிகர். அவரின் முதல் படத்தை பாருங்கள் யாராலும் சொல்ல முடியாது அது அவரின் முதல் படம் என்று அவ்வளோ அழகாக நடித்திருப்பார். நன்றாக நடனம் ஆடுவார், ஆக்‌ஷன் இல் புகுந்து விளையாடுவார், இது எல்லாவற்றையும் விட நன்றாக காமடி பண்ணுவார். ஆனால் இப்போது எல்லா திறமைகளையும் மாய்த்துவிட்டு எதை தேடி போகின்றார் என்று புரியவில்லை. தேவையில்லாமல் கதையின் தலையிடாமல், ஹீரோயின் தெரிவில் வீணாக தலையிடாமல் தள்ளியே இருந்தால் வெற்றிகளை அள்ளி குவிக்க கூடிய நல்ல ஒரு நடிகர். காலங்கள் எப்போதுமே ஏறுமுகம் காட்டுவதில்லை. இந்த முகம் வெகு விரைவில் மாறும் அதன் பின்பு ‘பருத்திவீரன்’ போல நல்ல படங்களை தந்து தொடர்ந்து ஹிட் ஆகா எமது வாழ்த்துக்கள்!!!

“கார்த்தி மறுபடியும் நீ பருத்திவீரனாக வரனும் விருதுகளை வாங்கணும்!!!”

Post Comment

6 comments:

 1. ஞானவேல்ராஜாவ போட்டு தள்ளுனா எல்லாம் சரியாகும்.......

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க மாஸ்டர்...!!! இருந்தாலும் கார்த்தியின் தலையீடுகளும் அதிகமாம்!!! அப்புறம் எப்படி ஹிட் ஆகும்!!! முதல்ல ரெண்டு மூணூ ஹிட்டுக்கள் கொடுக்கும் வரைக்கும் அடக்கி வாசிக்க வேண்டியது! அபுறம் சனியனை தூக்கி பெனியனில போட்டுக்க வேண்டியது!!!

   Delete
 2. இவனுக்கு இது தேவைதான் .

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... ஒரு வையில் பார்த்தால் நீங்க சொல்வதும் சரிதான்!!!

   Delete
 3. இவனுக்கு இது தேவைதான்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... ஒரு வையில் பார்த்தால் நீங்க சொல்வதும் சரிதான்!!!

   Delete