Tuesday, October 21, 2014

கத்தி - சினிமா விமர்சனம்!!!

பொதுவாக ஆக்‌ஷன் ஹீரோக்களின் படமாக இருந்தால் மக்களுக்காக போராட வேண்டும், அநியாயம் செய்யும் வில்லனை ஓட ஓட துரத்த வேண்டும் அல்லது அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இப்படியான கதையாக இருந்தால்தான் ஆக்‌ஷன் காட்சிகளின் மூலம் ஹீரோயிசத்தை உயர்த்திக்காட்டி ஹீரோவுக்கு மாஸ் இமேஜை உருவாக்க முடியும் அல்லது இருக்கும் மாஸ் இமேஜை தக்க வைத்துக்கொள்ள முடியும்! மிகவும் அருமையான ஒரு கூட்டனி விஜய் - முருகதாஸ், இதற்கு முதல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ‘துப்பாக்கி’ என்ற படத்தை கொடுத்த வெற்றிக்கூட்டனி கொடுக்கும் அடுத்த படம்தான் ‘கத்தி’! படம் தொடர்பான எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை! ‘துப்பாக்கி’ படத்தில் எப்படி தீவிரவாதிகளை அழித்து மக்களை காப்பாற்றும் இராணுவ வீரராக விஜய் நடித்து வெற்றி படம் ஒன்றை கொடுத்தாரோ, அதே போல ஒரு கதையை உள்ளடக்கிய படமே ‘கத்தி’!

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட First Look!!!

Post Comment

Thursday, August 21, 2014

‘கஞ்சா’வில் இருந்து உச்சக்கட்ட போதையை பெறுவது எப்படி?

‘புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்’ (இப்படி எல்லாம் போட்டுத்தான் புகைத்தல், குடி, போதை தொடர்பான பதிவுகளை எழுத வேண்டும் என்று கட்டளை போடப்பட்டிருப்பதாக கேள்வி!!!) உங்களை மட்டும் பாதிக்காமல் உங்களை சூழ இருப்பவர்களையும் பாதிக்கும். அதனால் புகைக்க விரும்புவோர் புகைப்பழக்கம் இருப்பவர்களுடன் மட்டும் சேர்ந்து புகைக்கவும்! இந்த பதிவை வாசிக்கும் போது உங்களை மோட்டிவேட் செய்வது போல இருந்தால் பதிவை தொடர்ந்து வாசிக்க வேண்டாம். இந்த பதிவு ஒரு தகவல் கோர்ப்புக்காக எழுதப்பட்டது. யாரும் இதனை வாசித்த பின்னர் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு இனியாச்சும் தலைப்புக்குள் செல்வோமா? இந்த பதிவு நியமாகவே போதை அதிகமானது! விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும் அல்லது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் வாசிக்கவும்!

Post Comment

Thursday, August 14, 2014

அஞ்சான் - சினிமா விமர்சனம்!!!

அஞ்சானின் வெற்றி சூர்யாவுக்கு எவ்வளவு  முக்கியமோ அதை விட லிங்குசாமிக்கு முக்கியமானதாகும். 2010ஆம் ஆண்டுக்கு (பையாவுக்கு) பிறகு லிங்குசாமிக்கு சரியான வெற்றி கிடைக்கப்பெறவில்லை, அதை தொடர்ந்து இயக்கும் சந்தர்ப்பங்களும் சரி வர அமையப்பெறவில்லை. 2014ஆம் ஆண்டில் சூர்யாவிடம் 3 கதைகளை சொல்லி அதில் ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்த பின்னரே படம் ஆரம்பமானது. ஆக லிங்குசாமியின் நிலை கூரிய கத்தியின் அலகில் நடைக்கும் பயணம் போன்றது. அடுத்து சூர்யா 2010ஆம் ஆண்டுக்கு (சிங்கம்-1) பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் வெளிவரவில்லை.2013ஆம் ஆண்டு சிங்கம்-02 மூலம் மீண்டும் உச்சம்தொட்டார். அதனால்தானோ மிகவும் யோசித்து நல்ல இயக்குநராக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் செலுத்தி அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆக மொத்தத்தில் இந்த படம் சூர்யாவுக்கு சிங்கம்-02 ஐ தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நோக்குடனான படமாகவும், லிங்குசாமிக்கு தொடர்ந்து சினிமாவில் நல்லதொரு இயக்குநராக நிலைத்து நிற்றகவேண்டும் என்ற கனவுடனான படமாகவும் அமையப்பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது! சரி இந்த இன்றோ போது இனி படம் கொடுக்கிற காசுக்கு வெர்த்தா இல்லையா? என்று பார்ப்பம்!

இவங்களை போலவே படமும் ஸ்டைலிஸ் ஆக இருக்கு!

Post Comment

Wednesday, August 13, 2014

மீண்டும் ஆசை நாயகனாக ரசிகர் முன் தோன்றுவாரா அஜித்!!!

நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற வரிசையில் இருந்து இன்று விமோட்ஷனம் பெற்ற பதிவாகும். நான் ஒரு அஜித் ரசிகன் என்பதை நான் சுட்டிக்காட்டித்தான் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இல்லை ஏன் என்றால் எனது பதிவுகளையோ அல்லது டுவிட்டரையோ தொடர்பவர்களுக்கு அது நன்றாக தெரியும். இருந்தும் எனது ஆதங்கங்களை முன் வைக்க வேண்டும் அது மட்டும் அல்லாது அனேகமான அஜித் ரசிகர்களின் சொல்ல முடியாமல் இருக்கும் ஆதங்கங்களை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவுனை எழுத முன் வந்தேன். இந்த பதிவை வாசித்த பின்பு என்னை திட்டுபவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்தே இந்த பதிவினை எழுத ஆரம்பித்தேன் ஆதலால் இந்த பதிவு தொடர்பாக வரும் விமர்சனங்களுக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்! கருத்துரைக்க விருப்புவோர் கருத்துரைக்கலாம் பதிலுரைக்க நான் தயாரான நிலையிலேயே இந்த பதிவினை எழுதுகின்றேன்! சரி பதிவுக்குள் போவோம்!

பழசுதான் ஆனால் வித்தியாசம் காட்டும் கதாப்பாத்திரங்கள்!!!

Post Comment

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்!!!

தனுஷின் சினிமா வாழ்க்கையில் ‘வேலையில்லா பட்டதாரி’ முக்கியமான ஒரு படமாகும். வரலாறு சுட்டிக்காட்ட காத்திருக்கும் படம். தனுஷின் 25வது படம். வெளிவந்த படங்களின் வரிசையில் அனிருத்துக்கு இது 5வது படம். இந்த படத்தினை மிகவும் எதிர்பார்க்க இரண்டு காரணங்கள் உண்டு. அதில் முதலில் இது தனுஷின் 25வது படம் அடுத்து ‘3’ படத்தின் இசை, பின்னணி இசை என்பவற்றின் வெற்றிக்கு பின்னர் தனுஷ், அனிருத் சேரும் அடுத்த படம். இவை மட்டும்தான் படத்துக்கு பலம் என்று சொல்ல முடியாது நிறைய இருக்கு பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். இந்த படத்துக்கு முன்னர் தனுஷுக்கு ஆஸ்த்தான ஒளியமைப்பாளர் வேல்ராஜ் தான் இந்த படத்தின் இயக்குநர். எனக்கு தெரிந்து எந்த சட்டை போட்டானும், எந்த கோணத்திலும் தனுஷை அழகாக காட்ட கூடியவர்களில் வேல்ராஜும் ஒருவர், அப்படி இருக்கையில் அவர் இயக்கும் படத்தில் தனுஷின் காட்சியமைப்பு மற்றும் பாடல்கள் என்பவற்றில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது. ‘யோவ்... பில்டப்பு போது மேட்டருக்கு வா...’ன்னு எவரோ ஒருவர் தூரத்தில் கத்தும் குரல் கேட்கின்றது. ரைட்டு விமர்சனத்துக்கு போவமா!!!

தொட்டு பாத்தா... இல்ல உத்து பாத்தாலே சாக்கடிக்கும்...!!!

Post Comment

Saturday, July 12, 2014

ஈழத்தின் சிறந்த ஒளிப்பதிவாளன் இளமுருகன் பாலமுரளி !!!

இந்த பதிவு முழுக்க முழுக்க எனது சுயவிருப்பத்தின் பேரில் எழுதப்பட்டதே! இந்த பதிவிலே எனக்கு பிடித்த குறும்பட, முழு நீளப்பட ஒளிஓவியன் பாலா மற்றும் இயக்குநர் மதி.சுதா அண்ணா இருவரையும் சேர்த்து பதிவிடலாம் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் மதி அண்ணா பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் இந்த பதிவுல் மதி அண்ணாவையும் இணைத்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெருவிக்கின்றேன்! இதனை தொடர்ந்து வரும் அடுத்த பதிவு மதி.சுதா அண்ணாவின் கலைப்பயணத்தை தாங்கியதாக வரும்! சரி எனது வலைப்பூவிற்கே உரித்தான பாணியின் பதிவினை தொடங்குவோம்!Post Comment

Friday, April 4, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்!!!

படத்தில யாரு யாரு நடித்திருக்காங்க என்று பார்த்தீங்க என்றால்... என்று ஆரம்பித்து நானும் ‘மான் கராத்தே’ போல மொக்க போட விரும்பவில்லை! படம் வெளியாவதற்க்கு முன்னர் படத்துக்கு ஏகோபித்த ஓகோபித்த வரவேற்ப்பு இருந்தது அது படம் வந்த பின்னர் இன்னும் அதிகமானது. அதற்கு பெரிய காரணம் தொடர்ந்து வெற்றியான இளைஞர்களுக்கு பிடித்தமான இசையில் பாடல்களை போடும் அனிருத் அதை அடுத்து நெய்ல ஊற வைத்த பால்கோவா போல இருக்கும் பளபளக்கும் பப்பாளி ஹன்சிகா! இது எல்லாம் போதாததுக்கு முருகதாஸின் கதை. காமடி கலக்கல் ஹீரோ(அப்டீன்னுதான் டீ.வி ல சொல்லிக்குறாங்க..) சிவகார்த்திகேயன். ஆக படம் வெளிவர முன்னர் இருந்தே படத்துக்கான வரவேற்ப்பு அதிகமாக இருந்தது.

Post Comment

Thursday, January 9, 2014

வீரம் - திரைவிமர்சனம்!!!

தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்க வல்ல படத்தை கொடுத்த ‘வியஜா பிரொடக்‌ஷன்’ வெருமனையே 50 செக்கன்களில் தக்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜீ.ஆர் இன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘வியஜா பிரொடக்‌ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் எழுத்தோட்டம் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!!

Post Comment