Friday, April 4, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்!!!

படத்தில யாரு யாரு நடித்திருக்காங்க என்று பார்த்தீங்க என்றால்... என்று ஆரம்பித்து நானும் ‘மான் கராத்தே’ போல மொக்க போட விரும்பவில்லை! படம் வெளியாவதற்க்கு முன்னர் படத்துக்கு ஏகோபித்த ஓகோபித்த வரவேற்ப்பு இருந்தது அது படம் வந்த பின்னர் இன்னும் அதிகமானது. அதற்கு பெரிய காரணம் தொடர்ந்து வெற்றியான இளைஞர்களுக்கு பிடித்தமான இசையில் பாடல்களை போடும் அனிருத் அதை அடுத்து நெய்ல ஊற வைத்த பால்கோவா போல இருக்கும் பளபளக்கும் பப்பாளி ஹன்சிகா! இது எல்லாம் போதாததுக்கு முருகதாஸின் கதை. காமடி கலக்கல் ஹீரோ(அப்டீன்னுதான் டீ.வி ல சொல்லிக்குறாங்க..) சிவகார்த்திகேயன். ஆக படம் வெளிவர முன்னர் இருந்தே படத்துக்கான வரவேற்ப்பு அதிகமாக இருந்தது.படத்தில் விமர்சிக்க உருப்படியாக இருப்பது இன்னான்னா பாடல்கள் அதுகும் ஆடியோவாக கேட்க நல்லா இருக்கு வீடியோவோட சேர்த்து பார்க்கும் போது இன்னும் நல்லா இருக்கு முதற்பாதியில் பாடல்கள் அடுத்து அடுத்து சன் மியூசிக்கில் பக் டூ பக் சாங்ஸ் போடுவது போல இருந்தாலும் பாடல்கள் படமாக்கப்பட்ட வித்தத்தில் படம் பார்ப்பவர்களை தம் அடிக்க போக விடாமல் அரங்கினுள்ளேயே வைத்திருக்கின்றது. எல்லா பாடலிலும் சிவாவும் ஹன்சிகாவும் சூப்பராக பளிச்சென்று இருக்கின்றார்கள். அனிருத் கஷ்டம் வீண் போகவில்லை என்று சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். வெறுமனையே படத்தை விடாமல் பாடல்களை மட்டும் விட்டிருந்தால் ‘வை திஸ்...’ பாடலுக்கு கிட்ட கிட்ட வந்திருக்கும். கதையுள்ள படம் அதுகும் முருகதாஸ் கதை என்று பில்டப்ப கொடுத்து ரசிகர்களை பப்படம் ஆக்கிபுட்டாங்க!

படத்தின் சாதாரணமாக நம்ம பசங்க என்ன பண்ணுவாங்களோ அப்படியே ஒண்ணு விடாமல் பண்ணும் ஹீரோ தான் சிவா. அத்தாங்க நல்லா ஜீப்பரான பொண்ணை பார்த்தால் அவங்க பின்னாலையே போல் ஜொள்ளு விடுவது, மூடி இருக்கும் டாஸ் மார்க்கை தட்டி சரக்கு வாங்கி அடிப்பது. செம ஜாலியாக ஓர் சுற்றும் கேரெக்டர்தான் ஹீரோ. இவருக்கு ஹன்சிகாவ பார்த்த உடனையே லவ்வு... கேட்டுகோங்க மக்களே தமிழ் சினிமாவில புதுசா காதல சொல்லி இருக்காங்க இது முருகதாஸ் கதை... இப்படி இடைக்கிடை சொன்னால்தான் மறக்காமல் இருக்கும்! இவரு ஹன்சிகாவிடம் அறிமுகம் ஆகும் போது தான் பெரிய பாக்சர்..போல அறிமுகம் ஆவார். ஆனால் சிவாக்கு பாக்சிங் ஒரு விளையாட்டு என்று கூட தெரியாது. ஆனால் இவர்தான் டைட்டில் வின்னர்.... செம காமடி செம காம்டி அப்பூடிக்கா ஓரமா போய் அழுதுட்டு வாங்க!!! நானும் படம் ஆரம்பிக்கும் போது ஏதும் சாமிப்படத்துக்கு வந்துட்டமோன்னு நினைத்தன்!!


படம் ஆரம்பிக்கும் போதே நீண்ட காடு அந்த காட்டில நீண்ட வெள்ளை தலைமுடியுடன் ஒரு சித்தார் அவர் தண்ணீருக்கு அடியில் தியானத்தின் இருக்கின்றார். இவர் தியானத்தில் இருப்பதை ஒரு பொண்ணு பார்க்கின்றார். உடனையே நீங்க அந்த சித்தர் நித்தியாந்தா அந்த பொண்ணு ரஞ்சிதா தானேன்னு கேட்கப்படாது... அது எல்லாம் முடிந்து போன மேட்டர்.. இது புது ரீலு எங்கையும் ஓடாத ரீலு... நான் படத்த சொன்ன பாஸ்...!!! இவரு உண்மையிலேயே சித்தரா இவருக்கு என்ன என்ன எல்லாம் தெரியும் என்று சோதித்து பார்க்கின்றார்கள் அந்த பொண்ணுடன் வந்த நண்பர்கள். அதில் வரும் ஆயுத பூயைக்கு அடுத்த நால் வரும் தினதந்தி பேப்பரை தருமாரு ஒரு வேண்டுதல்... ஜப்பா ராசா உனக்கு வேண்டுறதுக்கு பேப்பர்தான் கிடைத்துதா ஒரு ஐஸ்வரியா சரி அவங்களுக்குதான் கல்யாணம் ஆச்சே ஒரு தீபிகா படுகோண் எதுனாச்சும் கேட்டிருக்கப்படாதா!!! அவரின் வேண்டுதலுக்கு அமைய சித்தரும் அந்த பேப்பரை தனது வித்தையால்??? வர வைக்கின்றார்.

இந்த பேப்பரில் அச்சிட்ட எல்லாம் இனி வரும் காலங்களில் நடைபெறும். அதாவது சித்தரை சந்தித்தவர்கள் வேலை செய்யும் காம்பெனி மீண்டும் திறக்கப்பட்டது என்று ஒரு செய்தி பத்திரிகையில் போடப்பட்டிருக்கும். அதே போல அவர்களின் கம்பெனி மீண்டும் ஆரம்பிக்கபடுகின்றது. அதே போல தான் பாக்சிங் காம்பெடிஷனில் 2 கோடி பரிசை பீட்டர் என்ற ஒருவர் வெற்றி பெறுகின்றார் என்று போடப்பட்டிருக்கும். அந்த பீட்டரை தேடி கண்டு பிடித்து அவருக்கு ஸ்பான்சர் பண்ணுவது போல பண்ணினால் அவர்களுக்கு அந்த பணம் கிடைக்கும் என்று பீட்டரை தேடுறாங்க... அந்த பீட்டருதான் நம்மா குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்... இத நான் சொல்லல படத்தில சிவாவே சொல்லி இருக்காரு... சிவாக்கோ பாக்சிங் ஒரு விளையாட்டுன்னு தெரியாது... ஆனால் இவருதான் வின்னர்... ஜோசித்து பாருங்க மக்களே படம் பார்த்த நம்ம நிலமை எப்படி இருந்திருக்கும்...!!!


ஒரு பீட்டர் பத்தாதுன்னு நல்லா சண்டை போட தெரிந்த இன்னொரு ஆளு பேரும் பீட்டருதான்... சப்பா இப்பவே கண்ண கட்டுதே...!!! இவரை பார்த்தா மைக் டைசனுக்கு டூப்பு போடுற ஆள் போல இருக்காரு ஆனால் இவரை வின் பண்ணி சிவா டைட்டில் வின்னர் ஆகுறாரு. இத நான் சொல்ல கதை...கதை முருகதாஸ்...முருகதாஸ்!!! எப்படியோ மூச்சு புடிச்சு சிவா போட்ட லீக் மேச் சண்டை எல்லாத்தையும் சகித்துக்கொண்டு பைனல்ஸ்க்கு வந்தாச்சூ... இப்ப கதைப்படி ஒரு டுவிஸ்ட்டு அத்தான்பா... சிவா லீக் மேச்சில தாவி தாவி போட்ட சண்டையில இவருக்கு மான் கராத்தே பீட்டருன்னு பேர வைத்துபுட்டாங்க... சப்பாட ஒரு மாதிரி படத்தோட டைட்டில படத்தில ஒருக்க என்றாலும் சொல்லியாச்சு... மனதிருப்தியில் டாரைக்டர்...!!! சிவா என்ன பண்ணுறாரு சண்டைக்கார பீட்டரை சந்தித்து இந்த மேச்சை என்னக்கு விட்டுதருமாரும் மேற்கொண்டு இனிதான் போட்டியின் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் காலில் விழுந்து விழுந்து புரண்டு புரண்டு ஜோதிகா போல கொடுத்த காசுக்கு அதிகமாக... பீல் பண்ணூறார்.


கடைசியில் போட்டிக்கு ஒரு மணித்தியாளத்துக்கு முன்னர் கடுமையான பயிற்சியால் சண்டைக்கார பீட்டரை காமடி பீட்டர்... வெற்றி பெற்றார். இதை பார்த்த பார்வையாளர்கள் வாந்தி பீதியால் திரையரங்கை விட்டு ஓட்டம்.!!! சப்பா இது உலகமகா நடிப்புடா சாமி!!! ஒரு மணித்தியாளத்தில பாக்சிங் ஆ... டே.. என்னாட தமிழ் சினிமா உலக தரத்துக்கு போய்ட்டு இருக்கா இல்ல உள்ட்டா தரத்துக்கு போய்ட்டு இருக்கா... படத்தின் கதைக்காகதான் நாங்கள் பெரிய ஹீரோயின்னை தெரிவு செய்தோம். ஆமாம் ஆமாம் இந்த கதைக்கு மட்டும் ஹன்சிகா இல்லாமல் இருந்திருக்கணும்... தியட்டர்ல ஈ தான் ஓட்டி இருக்கணும்!!! ஏதோ அந்த பொண்ணு இடுப்ப @#*$% என்று கொஞ்சம் அப்படி இப்படி காட்டினதால படம் கொஞ்சம் எஸ்கேப்பு!!! இது எல்லாம் கூட ப்மன்னித்துடலாங்க... அந்த பிரொபெசனல் பைட்டரை மூஞ்சீலயே குத்தி சாவடி அடிப்பார் பாருங்க சிவா...!!! சும்மா தீப்பொறி பறக்கும்!!! என்ன ஆக்‌ஷனு... ஷா ஷா...!!!


இனி வரும் காலத்தில் விஜய் டீவியில் நிகழ்சிகள் :- எங்க வீட்டு பிள்ளை சிவா அவர்களுக்கு முத்தம் கொடுக்க விரும்பும் பெண்கள் டோக்கண் எடுத்து லைனில் வந்து முத்தம் கொடுக்கவும் நிகழ்சியை வழங்குவது உங்கள் டீடீ. ஆக காசு போட்டதும் கதை சொன்னதும் ஒரு ஆள் என்றதால ஓக்கே..!!! ஆனா படம் பார்த்தது நாமதானே பாஸ்...!!! ஏண்டா நாம உனக்கு என்னடா பண்ணம்! அனிருத் முயூசிக் போட்டிருக்காபிலே சிவா நடித்திருக்காபிலே நல்ல காமடியாக இருக்கும் என்று வந்தது எங்க தப்பா!!! அவன் அவனுக்கு என்ன என்ன வருமோ அவன் அவன் அத அத பண்ணுங்கடா... சிவா அண்ணே உங்களுக்கு காமடி வருதா அத மட்டும் பாலோ பண்ணுங்க சும்ம வெரட்டியா பண்ணூறன் என்று எதுனாச்சையும் பண்ணி படம் பார்க்க போன அப்பாவி பசங்கள சாவடிக்காதீங்க!!! இத்தோடா விமர்சனம் ஓவர்...!!! சிவாவின் அடுத்த படம் ‘டானா’ அதில போலீஸ் ஆக நடிக்கின்றார்... அப்ப இப்பூட்டு காலமாக சிரிப்பு போலீஸாக இருந்த நம்ம வடிவேலு பட்டம் சிவாவினால் பறிக்கப்பட்டது!!!.....!!!

“உசர உசர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா??? எகிறீ எகிறீ அடித்தாலும் சிவகார்த்திகேயனினால் பாக்சர் ஆக முடியுமா???”

Post Comment

1 comment:

  1. my reivew http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post.html

    ReplyDelete