Saturday, July 12, 2014

ஈழத்தின் சிறந்த ஒளிப்பதிவாளன் இளமுருகன் பாலமுரளி !!!

இந்த பதிவு முழுக்க முழுக்க எனது சுயவிருப்பத்தின் பேரில் எழுதப்பட்டதே! இந்த பதிவிலே எனக்கு பிடித்த குறும்பட, முழு நீளப்பட ஒளிஓவியன் பாலா மற்றும் இயக்குநர் மதி.சுதா அண்ணா இருவரையும் சேர்த்து பதிவிடலாம் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் மதி அண்ணா பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் இந்த பதிவுல் மதி அண்ணாவையும் இணைத்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெருவிக்கின்றேன்! இதனை தொடர்ந்து வரும் அடுத்த பதிவு மதி.சுதா அண்ணாவின் கலைப்பயணத்தை தாங்கியதாக வரும்! சரி எனது வலைப்பூவிற்கே உரித்தான பாணியின் பதிவினை தொடங்குவோம்!

இளமுருகன் பாலமுரளி ( Balamurali Ellamurugan (Taye Bala) )தற்போது ஈழத்திலே இருக்ககூடிய மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவருக்கு கமராவில் மட்டுமல்லாது ‘டிறம்ஸ்’ இசைப்பதிலும் விருப்பம் அதிகம். ஒரு காலத்தில் தன்னை ‘பாலா’ என அழைக்க வேண்டாம் ‘TAYE BALA' என அழைக்கும் படி கூறுவார். அப்போதும் சரி இப்போதும் சரி ஏன் அப்படி சொன்னார் என்று தெரியாது. இந்த பதிவி கீழ் அவர் இது தொடர்பான விளக்கத்தை கொடுப்பார் என எதிர் பார்க்கின்றேன். பாலா எந்த ஒரு கருத்தாடல் என்றாலும் அதனை கையாளும் விதமே தனி! சமூக வலைத்தளங்களில் இவர் கீச்சுவது குறைவு ஆனால் இவர் கீச்சினால் அன்று வாசிப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான். எம் நண்பர்களிடையே ‘நான் இப்படித்தான் வரபோகின்றேன்’ என்று அப்போதே ஒரு தீர்க்கமான முடிவினை செய்து அதுக்கான முன்னேற்றங்களை செய்தார். அன்று எங்களுக்கு பாலா கமரா பற்றி கதைக்கும் போது தான் ஒளிப்பதிவாளனாக வரப்போவதாக சொல்லும் போதும் தமாஷாக இருக்கும். ஆனால் இப்போது பெருமையாக உள்ளது எங்களுடன், என்னுடன் படித்த ஒருவன் இன்று ஈழத்தில் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவனாக இருக்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது!இவரது கலைப்பயணம் ’முடிவல்ல ஆரம்பம்’ என்ற குறும் படத்திலே ஆரம்பமானது அப்போது குறும் படத்தினை விளையாட்டாகத்தான் எடுத்தார்கள் ஆனா அதில் பாலாவின் பங்களிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது. அன்று ஆரம்பித்த பயணம் முடிவே இல்லாமல் தொடர்ந்துகொண்டு உள்ளது. அதனை தொடர்ந்து ‘எல்-எக்ஸ்த்ரிமோ’ என்ற 2012இல் வெளிவந்த உலக அழிவு சம்பந்தமான ஒரு குறும் படத்துக்கு ஒளி கொடுத்திருந்தார், இந்த குறும் படம் வெளிவந்த காலத்தில் பாலாவின் வேலை நேர்த்திக்காகவும் அந்த படம் அதிகளவு எம் மக்களிடையே பேசப்பட்டது. அந்த ‘டாகிமெண்டரி’ படத்தை இயக்கிய மாதவனே பின்னர் ‘என்னாச்சு’ என்ற படத்தை எடுத்து ஈழத்து குறும் படத்தில் ‘டிவிஸ்ட்டு’ திருப்பங்களை கையாளுவது எப்படி என பாடமே எடுத்திருப்பார். தொடர்ந்து ‘கராளம், போலி, என்னாச்சு, தழும்பு, நான்-நீ-அவர்கள், சூனிய வளையம் போன்ற குறும் படங்களுக்கு ஒளிப்பதிவாளனாக பணீயாற்றினார். இது மட்டும் இல்லாமல் இப்போது ஈழத்தில் இருந்து வெளிவரும் அநேக பாடல்களுக்கு ஒளி கொடுப்பதும் இவரே. அதிகம் கொடுப்பது என்பது வெற்றியல்ல அவை எல்லாம் தரமானதாக உள்ளதே என்பதே வெற்றி. அவை அனைத்தும் தரமானதாக உள்ளது என்பதே உண்மை. ‘காரளம் மற்றும் சூனிய வளையம்’ இரண்டும் ஒரே இயக்குநரால் கையாளப்பட்ட படங்கள். மகிழ் அண்ணா ஒரு வித்தியாசமான சிந்தனை உள்ள ஒரு இயக்குநர். ‘சூனிய வளையம்’ பற்றிய எனது ஆதங்கத்தை இந்த இடத்தில் கூறி விடலாம் என நினைக்கின்றேன்.மகிழ் அண்ணாவின் படைப்பில் பாலா பணியாற்றிய இரண்டாவது படம். மிகவும் வித்தியாசமான கதை. காதல், குறும்பு, ஜொள்ளு விடும் படங்களை அதிகம் பார்த்தவர்களுக்கு வித்தியாசமான படத்தை பார்க்கும் போது விக்கல் வரத்தான் செய்யும். அதுக்காக அவர் தனது பாணியினை மாற்றி வித்தியாசங்களை விரும்புவோருக்கு ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார் என நம்புகின்றேன். அவர் அப்படியான பாணியில் எடுக்கும் படங்களை கை விடாமல் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்! நல்ல ஒரு தகவலை சொன்ன ஒரு படம், பார்வையாளர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம். என்ன ஒரு கவலை படத்தினை விளங்கி விமர்சித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் படம் பற்றிய போதிய விளக்கம் இல்லாமல் விமர்சித்தமை கலைஞ்ஞனுக்கு சங்கடத்தையே கொடுத்திருக்கும்! குறிப்பாக ‘காரளம்’ குறும்படம்தான் பாலாவிற்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது. ‘சூனிய வளையம்’ ‘காரளம்’ இரண்டு படங்களும் ஈழத்தி குறும் படங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய படங்கள். சூனிய வளையம் படத்தில் தவறுகளுக்கு சம்பந்தமானவன் பிடிபட்டு இருக்கும் போது அவனை காட்டும் கோணம் மிகவும் தத்துரூபமானது! ‘அக்கியூஸ்ட்’ தலையை கவிழ்த்த படியே பதில் சொல்ல அவரையும் கேள்வி கேட்பவரையும் தனித்தனியாக காட்டும் தருணம் உச்சக்கட்டம்!
ஆரம்ப காலத்தில் இருந்து பாலாவுக்கு கமரா என்றால் மிகவும் பிடிக்கும், கமரா மட்டும் இல்லை ’பிராடோ’ வாகனமும் அதிகம் பிடிக்கும். 2020க்கு முன்னர் தான் அந்த வாகனத்தை வாங்குவேன் என 2009இல் நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது சொன்னார். கட்டாயமாக அதற்க்குமான முயற்சிகளில் இறங்கிருப்பார் என நம்புகின்றேன். அதிக கனவுகளை சுமந்து கொண்டிந்த பாலாவுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு பயனுடைய ஒரு நட்பாக Thirhiharan Amuthalingam அண்ணாவின் நட்பு கிடைக்கப்பெற்றது. இவர் எல்லோருக்கும் மூத்த, கமரா சம்பந்தமாக போதியளவு விளக்கம் உடையவர். இவருக்கு உதவியாளராக இருந்து கமரா தொடர்பாக தனக்கு விளக்கம் இல்லாதவற்றை முறையாக பயின்று கொண்டார் பாலா. அண்ணனும் ஒரு கலைஞ்ஞனை வளர்த்துவிட வேண்டும் என்பதற்காக எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பாலாவை அழைத்துக்கொண்டு சென்வார். பாலாவும் என்ன வேலை இருந்தாலும் கமரா என்று வந்துவிட்டால் வேலைகளை கிடப்பிலே போட்டுவிட்டு கமராக்கு பின்னால் போய்விடுவார். கமராவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்றே சொல்ல வேண்டும். அது மட்டும் இல்லை இவருக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றான் அந்த விடயத்தை அறிந்துகொள்வதின் என்றுமே பின் நிற்பதில்லை. முதல் குறும் படம் எங்களின் நட்பு வட்டாரத்துக்குள்ளே இருந்தே எடுக்கப்பட்டது. அப்போதும் சரி இப்போதும் சரி எமக்கு அதிகம் தெரிந்த ஒளிப்பதிவாளன் பாலாதான்! அதனால்தான் இந்த பதிவை எழுதுகின்றேன் என்று யாரும் நினைத்தால் உங்கள் முட்டாள் தனத்துக்கா கடவுளிடம் மண்டாடுகின்றேன்!‘போலி’ குறும் படத்தின் எனக்கும் அதிகம் பிடித்த இயக்குநர் மற்றும் நடிகருமான மதி அண்ணாவினை மிகவும் அருமையாக காட்டியிருப்பார் பாலா! அதுகும் மிகவும் சன நெரிசலான யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியில் மதி அண்ணாவினை தவிர பாலாவினால் அந்த கோணத்தில் வைக்கப்பட்ட காட்சிக்கு உயிர் கொடுத்திருக்க முடியும் என்றால் விடையளிப்பது சந்தேகமே! பாலாவினால் வைக்கப்படும் கமரா கோணங்களுக்கு பெரும்பாலும் நடிப்பவர்களால் போதியளவு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. இருந்தும் அவரது படைப்புக்கள் பேசப்படுகின்றது அதிக அதிகமாக!!! அந்த படத்தின் முடிவில் வரும் அனைத்து காட்சிகளுமே மிகவும் தத்துரூபமானது. குறும் படம் எடுக்கும் வல்லமை இருந்தால் ‘புகை’படம் எடுக்கும் திறமையும் இருக்கும் தானே! ஆனால் இவருக்கு ‘புகை’படம் எடுப்பது என்றால் அவ்வளவு விருப்பம். அதுகும் 'வன ‘புகை’ப்படம்’ எடுப்பதில் இவருக்கு இருக்கும் சந்தோஷமே தனி! மேலே உள்ள படம் கூட அவர் எடுத்ததுதான். இனி வரும் காலங்களின் எடுக்கவிருக்கும் குறும் மற்றும் முழு நீள ஈழத்து படங்கள் அனைத்தும் முன்னது போல வெற்றி பெற வாழ்த்துக்கள்!இந்திய தமிழ் சினிமாவிற்க்கு ஒரு ‘சந்தோஷ் சிவன்’ போல ஈழத்துக்கு ஒரு ஒரேயொரு ‘பாலா’

Post Comment

No comments:

Post a Comment