Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்!!!

தனுஷின் சினிமா வாழ்க்கையில் ‘வேலையில்லா பட்டதாரி’ முக்கியமான ஒரு படமாகும். வரலாறு சுட்டிக்காட்ட காத்திருக்கும் படம். தனுஷின் 25வது படம். வெளிவந்த படங்களின் வரிசையில் அனிருத்துக்கு இது 5வது படம். இந்த படத்தினை மிகவும் எதிர்பார்க்க இரண்டு காரணங்கள் உண்டு. அதில் முதலில் இது தனுஷின் 25வது படம் அடுத்து ‘3’ படத்தின் இசை, பின்னணி இசை என்பவற்றின் வெற்றிக்கு பின்னர் தனுஷ், அனிருத் சேரும் அடுத்த படம். இவை மட்டும்தான் படத்துக்கு பலம் என்று சொல்ல முடியாது நிறைய இருக்கு பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். இந்த படத்துக்கு முன்னர் தனுஷுக்கு ஆஸ்த்தான ஒளியமைப்பாளர் வேல்ராஜ் தான் இந்த படத்தின் இயக்குநர். எனக்கு தெரிந்து எந்த சட்டை போட்டானும், எந்த கோணத்திலும் தனுஷை அழகாக காட்ட கூடியவர்களில் வேல்ராஜும் ஒருவர், அப்படி இருக்கையில் அவர் இயக்கும் படத்தில் தனுஷின் காட்சியமைப்பு மற்றும் பாடல்கள் என்பவற்றில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது. ‘யோவ்... பில்டப்பு போது மேட்டருக்கு வா...’ன்னு எவரோ ஒருவர் தூரத்தில் கத்தும் குரல் கேட்கின்றது. ரைட்டு விமர்சனத்துக்கு போவமா!!!

தொட்டு பாத்தா... இல்ல உத்து பாத்தாலே சாக்கடிக்கும்...!!!


படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் பாதையை குழப்பம் இல்லாமல் தெளிவாக சொல்லி விட்டார் இயக்குநர். ஆரம்பமே ‘தண்டசோறு...’ என்று ஆரம்பிக்கின்றது. படத்தில் தனுஷ் எஞ்சினியரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஒரு ஆள். இவனுக்கு எப்படி வாழ்க்கை மாறுகின்றது, காதல் எப்படி, வெற்றி எப்படி என்பதை சுவாரஸ்யமாக நக்கல், பஞ் டயலாக், ஜோக் என்று நல்ல படியாக நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிச்சு சிரிச்சு பார்க்க கூடிய ஒரு படத்தை கொடுத்த இயக்குநருக்கு பெரிய ஒரு கும்பீடு! இத சொல்லியே ஆகணும் ‘திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம் அடுத்து இப்ப வேலையில்லா பட்டதாரி...’ நக்கல் கலந்த பல பாவனைகளை காட்டும் தனுஷின் முகத்தையும் கண் அசைவுகளையும் சரிவர பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். முதல்பாதி முழுக்க தனுஷின் இந்த நக்கலான முகபாவனைகளை ரசிக்கலாம்! என்ன ஒரு கவலை தனுஷை எல்லா இயக்குநர்களாலும் இப்படி காட்ட முடியுமா தெரியவில்லை. அவரின் நாடித்துடிப்பு அறிந்தவர்களால் மட்டும் இப்படி எடுக்க முடியும் போல! படத்தில் வரிவரியாக சொல்ல கூடிய நிறைய டயலாக்குகள் இருக்கு எல்லாத்தையும் சொல்லி உச்சிகொட்ட ஆசைத்தான். விமர்சன பதிவுக்கு அவசியம் இல்லாமை கருதி விலக்கி விட்டேன்!


படத்துக்கு இருக்கும் பிளஸ்களில் அமலாபால் முக்கியம் இதுக்குமுதல் தப்பவிட்ட அழகை எல்லாம் இந்த படத்தில் கொண்டுவந்து சேர்த்தால் போல அவ்வளோ அழகு! அது என்னமோ சொல்லுவாங்களே அத்தாங்க ‘கெமிஸ்ரியோ... பயோலாயியோ... நல்லா ஒக்கவுட் ஆகி இருக்குங்க..’ வழமையை போல ஹீரோயின் பின்னால அலையுற ஹீரோவாக இல்லாமல் காதல் மலர்ந்தது எப்போது என்று தோண வைக்கும் அளவுக்கு அருமையாக இருந்தது! கல்யாணம் பண்ணத கூட படத்தின் கதையின் முக்கியத்துவம் கருதி காண்பிக்காமல் விட்டது சிறப்பு. படத்தில் தனுஷ் டயலாக் சொல்லனும் என்று சொன்னது போல தெரியவே இல்லை சும்மா சாதாரணமாக கதைத்தது போல இருந்தது. அருமையான டயலாக் டெலிவரி அதை எல்லாம் விட திரும்ப திருப்ப சொல்லனும் என்று தோணும் அவரது பிளசன்ற் முகம் சூப்பர்..சூப்பர். அடுத்த பிளஸ் சரண்யா சொல்லவே வேணாம் பிளாப் ஆன படங்களில் கூட அருமையான நடிப்பை காட்டும் ஒரு நல்ல நடிகை. எனக்கு தெரிந்து ஒரு சிலர் தக்கவைத்த இடத்தை அடுத்த சந்ததியாக வருவோரால் நிரப்ப முடிவதில்லை/நிரப்புவதில்லை தவறி விடுகின்றார்கள் ஆனால் மனோரம்மா ஆச்சி விட்ட இடத்தை முழுமையாக நிரப்புவதற்க்கு ஒரு நடிக்கை சரண்யா மேடம்! இனிமே எவனாவது படத்தில அம்மா கேரக்டர் இருந்தா முதல்ல ‘சரண்யா’ கால்சீட்டை வாங்கீடுங்கப்பா!


படத்துக்கு அடுத்த பிளஸ் இருப்பதிலேயே பெரிய பிளஸ், நல்ல ஒரு தமிழ் சினிமாவுக்கான ஆரம்பமாக எனக்கு தோணுவது, நல்ல ஒரு எடுத்துக்காட்டு நல்ல கதை, நல்ல கதாப்பாத்திரம் அறிந்து தனது நடிப்பை முழுமையாக போட்ட ‘சமுத்திரகனி’ என்னமா நடித்திருக்காபிலே... வேலையே செய்யாமல் இருக்கும் ஒரு பிள்ளைக்கு அப்பான்னா எப்படி இருப்பாரோ அப்படியே நடித்தாரு இல்லை இல்லை வாழ்திருக்காரு. அதிலயும் தனுஷ் அமலாபாலுக்காக ஐ போன் வாங்கிக்கொடுக்க வேலைக்கு போய் சம்பளம் வாங்கீட்டு வந்து 50,000 ரூபாயில் 10,000ரூபாவை அம்மாவுக்கு கொடுத்துட்டு மிச்சகாசை மகன் செலவழித்துவிட்டான் என்று நினைத்து பக்குவமாக பேசும் கனி சார் நடிப்பில இருந்து என் அப்பா எல்லாம் கத்துகனும். அதிலும் அப்பாவை எதிர்த்து பேசியதுக்காக சரண்யா தனுஷை அடிக்கும் போது ஒன்றுமே சொல்லாமல் மெளனித்து போகும் அப்பாவாக கனி. அந்த இடம் சும்மா செம டச்சு பாஸ். சரண்யா இறந்த போது ஒரு கணவனாக அவர் குமுறும் குமுறல் கத்தீட்டு இருந்த பசங்க எல்லாம் தலயில கைய வச்சுட்டாங்க.. கண்ணோரமா கண்ணீர் ரெடின்னுதான் சொல்லனும்! அழுதவங்களும் இருக்காங்க! ஒட்டு மொத்தமும் சரியாள அளவில் சேர்க்கப்பெற்ற நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிவான ஒரு தனுஷ் படம்!


அடுத்து படத்தின் இசை, பாடல். இதில என்ன சொல்ல இருக்கு குட்டி ரகுமானும் அடுத்த ரஜினியும் (எனக்கு எந்த படத்தில் பல இடங்களில் தலைவர் வந்து வந்து போறாரு...) போல இருந்தீச்சு. படத்தின் கதைக்கு ஏற்றால் போல ஒரு தரமான பின்னணி இசை.. படம் முழுக்க இளைஞ்ஞர்களை மையப்படுத்தியே இருப்பதால் படத்துக்கு துள்ளலான இசையுடன் படத்தின் சிட்டிவேசன் மாறாதது போல அனிருத்தின் இசை பாராட்டியே ஆகனும்! அடுத்து ‘கத்தி’ சும்மா கிழி கிழின்னு கிழிச்சுபுடனும்..! அனிருத் கஸ்டப்பட்டு போட்ட பாடல்கள், இசை எல்லாவற்றிலும் தனுஷ் இஸ்டப்பட்டு முகபாவனை கொடுத்திருப்பார். அதிலும் ஓப்பனிங்’வாட்ட கருவாட்..., மொட்டமாடியில் குடித்து விட்டு பாடும் பாட்டு காண்டில நா...’ எல்லாம் அனிருத் பாசைல சொல்லனும்னா சும்மா தெறிக்க விட்டிருக்காங்க. படத்துக்கு அடுத்த பிளஸ் தம்பி கேரக்டர் மற்றும் வில்லன் (தட் அம்முல் பேபி) படத்துக்கு வில்லன் என்று இல்லாமல் போட்டியாளராக காட்டி இருப்பது நல்ல ஒரு முயற்சி ஆனால் வழமையாக வில்லன் செய்வதையே அவரும் செய்வதால் இந்த இடத்தில் மட்டும் இயக்குநருக்கு ஒரு பனார். தம்பி கேரக்டர் கூடவே நமக்கெல்லா கூட பிறந்தது போலவே இருக்கு. பல இடங்களில் நானும் ஒரு அண்ணன் என்பதை இட்டு பெருமிதப்பட்டேன்.(அதுகும் உழைத்த காசை, ஐ போன் வாங்க வைத்திருந்த காசை தம்பிக்கு கொடுத்துவிட்டு வீராப்பாக எதையோ சாதித்தது போல நடக்கும் தனுஷ் ஒரு கணம் ரஜினி தான்...)


படத்தின் முடிவில் வரும் அந்த வாசகத்துக்காகவே எஞ்சினியறிங் பசங்க கொண்டாடுவங்க. ‘இந்த படம் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு சமர்பணம்’ கொய்யால அங்க நின்னானுயா நம்ம பய தனுஷ்...! உங்களுக்கு புரிந்திருக்கு அத்தோட கஸ்டம், என்ன பண்ண இன்னும் நம்ம சமுதாயம் நம்மள வீஐபீ என்று தானே சொல்லுது! இந்த சிக்ஸ் பேக் சொல்லியே ஆகனும்! பழய பொல்லாதவன் தனுஷ் தான்! சும்மா சிக்குன்னு வச்சிருக்காரு சிக்ஸ் பேக்க! அடுத்த படத்திலையும் இதையே காட்டி நீங்களும் சூர்யா போல ஆகீடாதீங்க பாஸ். இடக்கிட காட்டுங்க அப்பதான் நமக்கும் போரடிக்காமல் இருக்கும்! சாரி ஒன்ன சொல்ல மறந்துட்டேன் அந்த பைக்கு கடசி வரைக்கும் கட்டின பொண்டாட்டி, பெத்த பிள்ள போலவே கூடவே வச்சிருக்காரு படத்தில் பைக்கும் ஒரு கெரக்டர்தான். அதுகும் தனுஷ் ஜெய்ச அப்புறமும் கட்டட திறப்பு விழாக்கு அதே பைக்கில போகும் சீன் செம! அதை விட அமலாபாலை பிக்கப் பண்ண வண்டி ஸ்டாட் ஆகாமல் இருக்கும் போது வண்டியுடன் பேசும் காட்சி ஒருகணம் கூபீர் சிரிப்பு மூமென்ற். ஒட்டு மொத்தமாக குடும்பத்தோட போய் எல்லோரும் சிரிச்சு சிரிச்சு பார்க்கவல்ல ஒரு படம். வழமையான சினிமாத்தனங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாதது போல முதற்பாதியை சரண்யாவும் இரண்டாவதுபாதியை சமுத்திரகனியும் நகர்த்தியிருப்பது படத்துக்கு மேலும் சிறப்பு! ஆக மொத்தம் கொடுத்த 120 (300) ரூபாய் வெர்த்து நம்பி போகலாம்! படம் சூப்பரு, பாட்டு சூப்பரு, அமலாபால் சூப்பரோ சூப்பரு, அந்த மத்த பொண்ணும் சூப்பரு, டயலாக்கு எல்லாம் சூப்பரு...!!!

படத்தின் நச்சுன்னு பஞ்சு நாலு, சும்மா ரெண்டு ஜோக்கு..!!! (நன்றி சி.பி.செந்தில்குமார்)

 • வேலைக்கு போகலைன்னா நீங்க பேர் வெச்சு வளர்த்த நாய் கூடஉங்களை மதிக்காது
 • பக் வீட் ல சாதா பிகர் இருந்தாலே சும்மா இருக்க மாட்டோம்.சினிமா நடிகை மாதிரி பிகர் இருந்தா?

 • இது போதும் னு தோணிடுச்சுன்னா வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப்போகவே முடியாது
 • இந்த ப்ளானை தப்பா போட்டுக்குடு சாரி சார்.இஞ்சினியர் னா தப்பா கட்டக்கூடாதுனு தானே படிக்கிறோம் ?
 • பேர் வைக்கறதுல கூட பார பட்சம்.அவனுக்கு ஹீரோ பேரு .கார்த்திக்.எனக்கு வில்லன் பேரு .ரகுவரன்
 • அம்மா அடிப்பது எவ்ளவ் சந்தோஷம் னு அம்மா இல்லாதவங்க கிட்டே கேள்
 • வண்டி இவ்ளவ் சின்னதா இருக்கே.டபுள்ஸ் இழுக்குமா? லாரியை க்கூட டோ பண்ணி இழுத்திருக்கு
 • கவர்மென்ட் பிராஜக்ட்னாலே மெட்டீரியல்ஸ் எல்லாம் கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும்.அட்ஜஸ் இட் ஸாரி.இது பலர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்
 • விவேக் = இது தான் வீடா? வாட்? இது தான் உங்க வீடா?னு கேட்டேன். கேரி பேக் ல குடி இருக்கே போல
 • விவேக் = இப்ப நாம எதுக்காக வாக்கிங் போறோம் ? தனுஷ் = சார்.நாம வண்டில போய்க்கிட்டு இருக்கோம். விவேக்=ஓ.இதான் வண்டியா?
 • 25% DISCONUNT OK? 75%? உங்களுக்கும் வேனாம்.எனக்கும் வேணாம் விவேக் =வேற யாருக்காவது தரப்போறீங்க்ளா?

‘வேலையில்லா பட்டதாரி - நேரடி வெற்றி...!!!’

Post Comment

No comments:

Post a Comment