Thursday, August 14, 2014

அஞ்சான் - சினிமா விமர்சனம்!!!

அஞ்சானின் வெற்றி சூர்யாவுக்கு எவ்வளவு  முக்கியமோ அதை விட லிங்குசாமிக்கு முக்கியமானதாகும். 2010ஆம் ஆண்டுக்கு (பையாவுக்கு) பிறகு லிங்குசாமிக்கு சரியான வெற்றி கிடைக்கப்பெறவில்லை, அதை தொடர்ந்து இயக்கும் சந்தர்ப்பங்களும் சரி வர அமையப்பெறவில்லை. 2014ஆம் ஆண்டில் சூர்யாவிடம் 3 கதைகளை சொல்லி அதில் ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்த பின்னரே படம் ஆரம்பமானது. ஆக லிங்குசாமியின் நிலை கூரிய கத்தியின் அலகில் நடைக்கும் பயணம் போன்றது. அடுத்து சூர்யா 2010ஆம் ஆண்டுக்கு (சிங்கம்-1) பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் வெளிவரவில்லை.2013ஆம் ஆண்டு சிங்கம்-02 மூலம் மீண்டும் உச்சம்தொட்டார். அதனால்தானோ மிகவும் யோசித்து நல்ல இயக்குநராக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் செலுத்தி அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆக மொத்தத்தில் இந்த படம் சூர்யாவுக்கு சிங்கம்-02 ஐ தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நோக்குடனான படமாகவும், லிங்குசாமிக்கு தொடர்ந்து சினிமாவில் நல்லதொரு இயக்குநராக நிலைத்து நிற்றகவேண்டும் என்ற கனவுடனான படமாகவும் அமையப்பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது! சரி இந்த இன்றோ போது இனி படம் கொடுக்கிற காசுக்கு வெர்த்தா இல்லையா? என்று பார்ப்பம்!

இவங்களை போலவே படமும் ஸ்டைலிஸ் ஆக இருக்கு!

சூர்யா தன்னால் எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றார் படத்துக்காக அதுக்காகவாவது படம் நல்லா இருக்கு என்று சொல்லனும் போலத்தான் இருக்கு ஆனால் என்ன பண்ண? ஸ்டைலான சூர்யா? நல்ல ஒரு தாடி, ஊர்ல எல்லா பயலையும் கெட்டப் மாத்த வைத்த தலைமுடி ஸ்டைல் ஆனால் இது எல்லாம் என்னத்துக்காக என்பது படத்தின் கதையை பொறுத்தவரைக்கும் புஸ்வானம்தான். என் நண்பன் சொன்னான் மச்சான் லிங்குசாமி விடுற பில்டப்புக்கு பாரன் படம் புஸ் ஆகும் என்று! அவன் நாக்கு கருநாக்கு போல இருக்கே! சரி வந்ததுதான் வந்துட்டீங்க அப்படியே விமர்சனத்தையும் வாசித்துட்டு போங்க!

இந்த எபெக்ட்டுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!!!


வித்தியாசமான ஸ்டைலிஸ் படம் எடுக்கனும் என்ற ஆசையில் எதையோ மிஸ் பண்ணீட்டாங்க என்ற பீலிங் இருக்குது! படத்துக்கு பெரிய பின்னடைவு படம் சரியான மெதுவாக நகர்வதே, ஹரியோட படங்களை பாருங்க படத்தில கதை இருக்கோ இல்லையோ படம் போற வேகத்துக்கு படத்தில இருக்கிற பிழைகள் கண்டுபிடிக்க முடியாது! ஆனால் இந்த படத்தையும் அப்படி எடுத்திருந்தால் படம் செமையாக இருந்திருக்கும்! அது மட்டும் இல்லை ராஜூ பாய் கெரெக்டர் நல்ல முறையிலான வடிவமைப்பு அவ்வளவும்தான் சொல்லலாம், மத்தப்படி நாயகன் படத்தில இருந்து போக்கிரி படம் வரைக்கும் டயலாக்குகளின் சாயல்கள் நிறையவே இருக்கு! படத்தில் நிறைய இடங்களில் வரும் காட்சிகள் எங்கையோ பார்த்தது போலவே இருக்கு! அதுகும் குறிப்பாக கதை, டயால்க் டெலிவரி எல்லாம் அஜித் சாயல் அதிகம் இருப்பதாகவே தெரிகின்றது! என்ன பண்ண ஒருத்தரை போல எழு பேர் சிந்திப்பாங்களோ என்னவோ! நமக்கு எதுக்குபா வம்பு?

இந்த பொண்ணு இருந்ததால ஏதோ ஓக்கே!!!

இந்த படத்தை பார்க்கனும் என்றால் சில சில விசயங்களுக்காக பார்க்கலாம் அது சூர்யா, அதை எல்லாம் விட கனக்க பேருக்கு பிடிக்கவில்லை சந்தோஷ் சிவனே சொதப்பீட்டாபிலே என்று எல்லாம் சொன்னாங்க ஆனால் எனக்கு செமையாக இருந்தது ஒளிப்பதிவு, அதுகும் ஒரு பறவையை காட்டி அது இரையை கவ்விக்கொண்டு போகும் காட்டி செம!!! இடையில் கொஞ்சம் வந்து கொடுத்த காசை காப்பாத்தீடலாம் என்று மனத்துக்கு தைரியம் கொடுக்கும் சூரி, கேங்ஸ்டர் கதை என்றாலே சும்ம பிச்சு உதறும் யுவன் சும்மா எமன் போல பக்கிறவுண் முயூசிக் போட்டிருக்காரு. அப்பப்பா பாட்டுக்களில் மட்டும்தான் அப்பப்ப இளையராஜாவும் ரகுமானும் வந்து வந்து போறாங்க! இந்த பீலிங்கு எனக்கு மட்டும்தானா இல்லை இந்த படத்தொட பாட்டை கேட்டகின்ற எல்லோருக்கும் இருக்கின்றதா என்று தெரியலையே மக்கா!?! இதை கட்டாயாம் சொல்லியே ஆகானும் ஏன்னா இவ அப்படி ஒரு அழகு! சும்மா சொல்ல கூடாதுங்க ரசகுல்லா போல இருக்கா! பார்க்கும் போது நவரசமும் வழிகின்றது! நான் ரசத்த.. ரசத்த சொன்னேன்! வேற யாரும் இல்லீங்க நம்ம சமத்து சமந்தா தான்!

தேங்ஸ் சூரி அண்ணே!!!

சமந்தாவும், சூரியும் இல்லீன்னா சப்பா அந்த நிலப்பாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை! சத்தியமா படத்தோட கதை என்ன என்று எல்லாம் கேட்டுடாதீங்க! தெரிந்தால் சொல்லுவன் தானே பாஸ்!!! உங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு டுவிஸ்ட்டே அதுதான் படத்தில கதை இருக்குதா? இருந்தால் அது என்னவாக இருக்கும்? மத்தபடி படத்தில எந்த டுவிஸ்டும் இல்லை. அடுத்து அடுத்து என்ன என்ன நடக்க போகின்றது என்பது வரைக்கும் எல்.கே.ஜி பையன் கூட கண்டுபிடிக்க கூடிய நிலமையில் மிகவும் எளிமையாக ஒரு கதையை கொடுத்துள்ளார் லிங்குசாமி! அடபோப்பா... சும்மா... சொல்லுறதெல்லாம் சொல்லீட்டு இப்ப வாழ்த்துறீயான்னு யார்டயோ மைண்ட் வாய்ஸ் கேட்குதே! நான் என்னப்பா பண்ண படத்தோட எபெக்டு...!!! ஆனால் பிரியா இருந்தால் அடுத்ததாக என்ன பண்ணலாம், நேரம் போகமாட்டேங்குதே என்று நீங்கள் யோசித்தால் மட்டும் பார்க்கலாம் ‘அஞ்சான்’. மத்தப்படி சூர்யா ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்! எல்லா சூர்யா ரசிகர்களும் பார்க்கனும் பார்த்தால்தான் உங்களுக்கே தெரியும் சொதப்பிபுட்டாங்களேன்னு!

இந்த பாட்டும் செம!!! காட்சியமைப்பும் செம!!!

ஆடியோ வந்ததில இருந்து இந்த பாட்ட போட்டு போட்டு தேய்ச்சாச்சூ. பிடிக்கும் அவ்வளோ பிடிக்கும் நான் பாட்ட சொன்னேன்பா! இந்த பாட்டை கேட்கும் போது எனக்கு ‘நான் சீனியில் செய்த கடல்...’ குரு பட பாடல் வந்து வந்துட்டு போச்சுப்பா! ஆனால் படத்தில செமையாக இருக்கு அதுகும் இந்த பாட்டு வைக்கப்பட்டிருக்கும் இடம் செம! அதிலையும் இந்த பொண்ணு கொடுத்த காசை விட கொஞ்சம் கூட ஜோதிகாவை போல அதிகமாவே உழைத்துக்கொடுத்திருக்கு! இந்த படத்துக்கு இருக்கும் பிளஸ்களில் இதுகும் ஒன்று! முக்கியமாக அந்த ஒத்த காலில் சலங்கை ஒலி கமல் போல போடும் ஒரு ஸ்டெப்ஸ் அதுக்காக என்றாலும் போய் பாருங்கப்பா படத்த! இப்ப வரைக்கும் தெரியலை படத்தை நல்லா ஸ்டையிலா தான் எடுத்திருக்காங்க கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு ஆனால் கதை என்ன? ஏன் படம் எனக்கு நெருக்கமாகவில்லை? கொடுத்த காசுக்கு ஏதோன்னு பத்தலை என்ற பீலிங்கை ஏன் கொடுத்தது? லிங்குசாமியோட லிங்க் கொடுங்கப்பா கேட்டு தெரிஞ்சுக்கனும்!?!

இந்த போஸ்க்கு ஒன்னும் கொறச்சல் இல்லை!!!

படத்தோட பலம் சந்தோஷ் எப்பிடீப்பா எந்த படத்தில வந்து சிக்கினீங்க? இவரு மட்டும் இல்லீன்னா அஞ்சானை காப்பாத்தவே முடியாமல் போய் இருக்கும்! சில சில இடங்களின் சமந்தாவை இதுக்கு முன்னதாக இப்படி பார்த்ததே இல்லை என்ற பீலிங்கை கொண்டுவார அளவுக்கு இருந்தது இவரின் ஒளிப்பதிவு! சண்டை காட்சிகளின் அந்த மங்கலான ஒளியில் ஒரு வித்தியாசம் காட்டி இருப்பார். பாடல்கள் அனைத்தும் சூப்பர், அந்த அளவுக்கு கஷ்டப்பட்ட லிங்குசாமி படத்தோட கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், சில சில டயலாக்குகள், எந்த சீனாக இருந்தாலும் சமந்தா என்பன செமையாக இருக்கின்றது! படம் அவரேஜ் ஆ இல்லை பிலோ அவரேஜ் ஆ என்று எல்லாம் சொல்ல நான் பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க படம் பார்த்தன் படம் எனக்கு பிடித்திருந்தால், கடன் வாங்கீட்டு போய் கொடுத்த காசுக்கு வெர்த்தாக இருக்கு என்றாலும் சரி இல்லைன்னாலும் சரி படத்தை பற்றி சொல்ல எனக்கு உரிமை இருக்கு! என் பணம் என் உரிமை!

சப்பா முடீல்ல! ஆள விடுங்கடா சாமி!!!

விஜயுடன் நடிக்கும் ஹீரோயினுடன் அதே காலப்பகுதியில் வேறு முன்னணி நடிகர்கள் ஏதாவது படம் நடித்தால் அநேகமா மற்ற நடிகரின் படங்கள் தோல்வியுறுவதாக ஒரு நம்பிக்கை இருக்கு... ஆழ்வார்-போக்கிரி.... சிவகாசி-மஜா..... துப்பாக்கி-மாற்றான்.. இப்போது அஞ்சான்-கத்தி! என்ன மாயமோ மந்திரமோ! நான் படம் பார்க்க போனது சமந்தா, சந்தோஷ் சிவனுக்காக ரெண்டு பேரும் நல்லா பண்ணி இருக்காங்க அதுகும் சமந்தா வேர்க் ஓவர்டியூட்டி! படம் சாதாரண ஆடியன்ஸ் ஒரு தடவை பார்க்கலாம் குடிம்பத்தோட பார்க்கலாமான்னு கேட்டீங்கன்னா....!!! ம்ம்ம்... பார்க்கலாம்! மத்தப்படி சூர்யா ரசிகர்கள் எத்தன தடவை வேனும் என்றாலும் பார்க்கலாம்! என்ன ஒரே ஒரு குறை படத்தில படத்தோட கதை என்னன்னு மட்டும் சொல்லி இருக்கலாம்! படத்தோட கதையை டுவிஸ்ட்டாக வைத்த லிங்குசாமிக்கு பெரிய ஒரு ஓஓஓ போடனும்! என்ன கதையை டிக்கட்டுக்கு பின்னுக்காவது டைப் பண்ணி கொடுத்திருக்கலாம்! வந்த வேலை முடிந்து வரட்டாப்பா! அடுத்த படத்தில சந்திப்பம்! எல்லாம் சொல்லியாச்சுதானே! எல்லாம் சொல்லியாச்சு!!!


“அஞ்சான் நல்லா போய் இருக்க வேண்டிய படம்; என்ன பண்ண கதை என்னன்னு தெரியாததால படம் போகலை ஆனால் விஜய் அவார்ட் கட்டாயம் கிடைக்கும்”

Post Comment

3 comments:

 1. Haha :D Vijay awards kandipa Katthi n Anjaan Ku dhan.. Nalla per eduka Pala naal agum.. ketta per eduka oru naal podhum... so Vijay awards mela irundha nambika suthama pochu.. Like Simbhu told its Mahendran Awards.. :D

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக அப்படி சொல்லலை எது எப்படியோ சூர்யாக்கு விஜய் அவார்ட் கொடுத்து கனக்க காலம் ஆச்சு சோ எப்படியும் இந்த தடவை அஞ்சானுக்கு கொடுப்பாங்க!!!

   Delete
 2. samantha acting is good.... then santhosh sivan camera is excellent... totally anjaan is flop....

  ReplyDelete