Wednesday, August 13, 2014

மீண்டும் ஆசை நாயகனாக ரசிகர் முன் தோன்றுவாரா அஜித்!!!

நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற வரிசையில் இருந்து இன்று விமோட்ஷனம் பெற்ற பதிவாகும். நான் ஒரு அஜித் ரசிகன் என்பதை நான் சுட்டிக்காட்டித்தான் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இல்லை ஏன் என்றால் எனது பதிவுகளையோ அல்லது டுவிட்டரையோ தொடர்பவர்களுக்கு அது நன்றாக தெரியும். இருந்தும் எனது ஆதங்கங்களை முன் வைக்க வேண்டும் அது மட்டும் அல்லாது அனேகமான அஜித் ரசிகர்களின் சொல்ல முடியாமல் இருக்கும் ஆதங்கங்களை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவுனை எழுத முன் வந்தேன். இந்த பதிவை வாசித்த பின்பு என்னை திட்டுபவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்தே இந்த பதிவினை எழுத ஆரம்பித்தேன் ஆதலால் இந்த பதிவு தொடர்பாக வரும் விமர்சனங்களுக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்! கருத்துரைக்க விருப்புவோர் கருத்துரைக்கலாம் பதிலுரைக்க நான் தயாரான நிலையிலேயே இந்த பதிவினை எழுதுகின்றேன்! சரி பதிவுக்குள் போவோம்!

பழசுதான் ஆனால் வித்தியாசம் காட்டும் கதாப்பாத்திரங்கள்!!!

என்னடா ‘சிட்டிசன்’ படத்த போட்டு பதிவை தொடங்குறானே என்று யோசிக்காதீங்க. மேட்டரே அதிலதானே இருக்கு! அண்மையான காலங்களில் அஜித் எப்படியான ஒரு தோற்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார் என்று சால்ட் ஆண்ட் பெப்பர் தலை முடி தோற்றத்துடன் நடிக்க ஆரம்பித்து சிவாவின் கண்களுக்கு எட்டாமல் பெப்பர் தலை முடியுடன் மட்டும் பிற்பாதியில் வலம் வந்த ‘வீரம்’ அஜிதை மறக்க முடியவில்லை! அதுகும் படத்தின் இரண்டாம் பாதியில் தாடியில்லாமல் வரும் அஜிதை தமன்னா டாவடிப்பது சினிமாவில் மட்டும்தான் நடக்கும் மெடிக்கல் மிராக்கிள் என்ற நினைப்புக்குள் எங்களை தள்ளி விடுகின்றது. இப்படியான நிலமைக்கு இயக்குநரான சிவாவை மட்டும் குற்றம் கூற முடியாது ஏன் என்றால் மற்றவர்களை விட அஜித்தின் ஒவ்வொறு ரசிகனுக்கும் அஜிதை பற்றி தீவிரமாக தெரியும். ‘வீரம்’ படத்தின் தலைமுடி ஸ்டைலுக்கு அஜித்தும் ஒரு காரணம் தான். தனது வயதை காட்டியே இனி படம் நடிப்பேன் என்று ஆரம்பித்திருபார். இயக்குநரும் என்ன பண்ண வந்த வாய்ப்பை தவறவிடாமல் படத்தை பண்ணிவிட வேண்டும் என்று எடுத்து முடித்தார்கள்.

கண்டுக்க ஆட்களே இல்லையா?

நடக்க போறது நல்லா நடக்கனும் என்றால் பழச அப்ப அப்ப நினைச்சு பார்க்கனும்டா!!! என்று வரலாறு படத்தில தல தான் சொல்லி இருக்காரு. தலைக்கு டைய் அடிக்காமல்தான் நடிப்பேன் என்றால் என்ன நியாயம்? டைய் அடிக்காமல் நடித்தால் படம் ஓடுமா ஓடாதா என்ற கவலை அஜித்துக்கும் இல்லை அஜிதை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கும் இல்லை ஏன் சொல்லப்போனால் பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கும் இல்லை. ஏன் என்ரால் அஜித் ஒரு வெற்றிக்குதிரை எப்படி என்றாலும் வெற்றி பெறும் போட்டதை விட அள்ளித்தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்னும் சொல்லனும் என்றால் அஜித்துக்கு தனது ரசிகர்களை பற்றி எங்களை பற்றி நங்கு தெரியும் எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத விட்டு விலகாத ரசிகர்கள் என்று அதனால்தானோ அஜித் தனது இஸ்டத்துக்கு நடிக்கின்றார்.(இப்படி நான் கூறியதுக்கு ‘தல எப்படி வந்தாலும் நான் பார்ப்பண்டா நீ யாருடா சொல்லுறதுக்கு..?’ என்று தல ரசிகர்கள் கேட்கலாம்) இப்படியான ஒரு நம்பிக்கைக்குள்தான் அஜித் என்ற ஒரு உன்னத நடிகன் தனது நடிப்புக்களை மூட்டை கண்டி வைத்து விட்டு சர்வசாதாரணமாக நடிக்கின்றார்.

உனது வித்தியாசங்கள் எல்லாம் எங்கு போனது???

டைய் அடிக்காமல் நடிப்பது மட்டும் இல்லை, ஒரு படத்தில் ஒரு கரெக்டர் ஹிட் ஆனால் அதே கரெக்டரின் சாயலில் தொடர்ந்து படம் பண்ணுவது விஸ்னுவர்தன் பில்லாவில் கோட் போட்டு லாங் சாட் வைத்து அஜிதை நடக்க வைத்து எந்த டயலாக்கும் இல்லாமல் மாஸ் காட்டியிருப்பார் ஸ்டைலில்! இதலையே பில்லாவை தொடர்ந்து வந்த படங்களில் அடிக்கடி பயன்படுத்தியிருப்பார். ( ‘அது அஜித் பண்ணது இல்லை இயக்குநர்கள் பண்ணது என்று யாரும் சொன்னால் நான் ஊமை ஆகிவிட்டேன் என்று சொல்லி விடுவதை தவிர வேறு வழி இல்லை, அஜித்தில் தலையீடு இல்லாமல் அந்த காத்தில் இருந்து இந்தக்காலம் வரை எந்த படமும் உருவானதாக சரித்திரம் இல்லை அப்படி இருக்கும் போது தல ஏன் இப்படி ஒன்றையே பின் பற்ற வேண்டும்!) இல்லாதவன் இயலாதவன் தான் (நான் யாரையும் இயலாதவர் என்று இந்த இடத்தில் குத்திக்காட்டவில்லை!) கோட்டோடு முடிந்ததா பிரச்சனை இல்லை! இயக்குநர் தயாரிப்பாளர் வரைக்கும் தொடர்கின்றது! ஒவ்வொரு இடத்திலும் அஜித்தை விட எங்களை போன்ற அவரின் விசிறிகள்தான் அதிகம் கேள்வி, கிண்டல்களுக்கு ஆளாகின்றோம்! இது அஜித் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை! ஏன் என்றால் நாங்கள்தான் அஜித்தை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததே இல்லையே. எப்படி என்றாலும் எந்த நிலைமையிலும் தூங்கி பிடித்து துக்கி வைத்தே பழக்கப்பட்டு விட்டோம்!

இதை தான் மாத்தனும் என்று சொல்லுறன்!!!

இது மட்டும் இல்லை தேவையில்லாமல் பாவம் பார்ப்பது இது அஜித்துக்கும் அநேகமான 1ம் நம்பரில் பிறந்தவர்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை! ஒரு காலகட்டத்தில் ‘கில்லி’ என்று ஒரு வெற்றிப்படம் வந்த போது அஜித் என்ற ஒரு நடிகனை சினிமாவை விட்டு தூக்கி எறிவேன் என்று சொன்ன ஒரு தயாரிப்பாளருக்குதான் ‘ஆரம்பம்’ இன்னமும் பெயரிடப்படாத ‘தல55’ கொடுக்கப்பட்டது! அது மட்டும் இல்லாமல் சினிமா உலகமே மறந்து போன அந்த தயாரிப்பாளரின் முகத்தை விஜை டீவி வழங்கிய விருதின் மூலம் மேடையேற்றி அவரை பேச வைத்தது அஜித் கொடுத்த வாய்ப்புதான்! இது எல்லாம் நல்லதுதான் ஆனால் இப்படி அஜித் தனது இஸ்டத்துக்கு தயாரிப்பாளர்களை மாற்றுவதனால் அஜித் இழந்த நல்ல படங்கள் எத்தனையே முதலில் கவுதம் மேனன் எடுக்க ஆரம்பித்த படம், பாலாவின் ‘நந்தா’ கே.ஸ்.ரவிக்குமாரின் கனவுப்படமான ‘காங்கேயன்’ இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது! இதனால் அஜித்தை விட ரசிகர்களாகிய நாங்களே அதிகம் பதில் கூற வேண்டிய நிலமையில் இருந்தோம், இருக்கின்றோம், இருப்போம்!!! பாவம் பார்க்க வேண்டும் தான். அஜித் பாவம் பார்த்த யாருமே பிற்காலத்தில் அஜித்தை நினைத்து கூட பார்ப்பதில்லை இதற்க்கு நல்லதொரு உதாரணம் நிக் ஆட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி! ஒரு காலத்தில் அஜித் படங்களுக்கு ஆஸ்த்தான தயாரிப்பாளர். இன்று என்ன ஆச்சு! அஜித் படம் சரியாக போகலை என்ற உடனை அஜித்தை மறந்து விட்டார். அஜித்தாக முன்னேறிய பின் அஜித் என்ற வெற்றிக்குதிரை எல்லோருக்கும் தேவைப்படுகின்றது!

ஒரு படத்துக்கு பல கெட்டப் போட்ட கெட்டப் மன்னன்!!!

வெற்றவுடன் ஓடி வந்த விஜய் டீவி தொடக்கம் நிக் ஆட்ஸ் சக்கரவர்த்தி வரைக்கும் தோல்வியில் இருக்கும் போது நிக்கவில்லை! கேள்விகளுக்கு பதில் கூறவில்லை, எந்த ஒரு கடினமான, மனக்கசப்பான வார்த்தைகளையும் சமாளிக்கவோ, கேட்கவோ இல்லை! ஆனால் ஒவ்வொரு ரசிகனும் கேட்டோம், தாங்கினோ, சமாளித்தோம்! இன்று எங்கள் ஆதர்ஸ்ஷ நாயகன் மறு படியும் பழைய வித்தியாசமான நடிப்பை படத்துக்கு படம் காட்டும் நடிகனாக மாற வேண்டும் என்று சொல்லும், வேண்டும் முழு உரிமையும் எங்களுக்குத்தான் முதலில் உண்டு! ஒரு விஸ்னுவர்தன் போல, ஒரு வெங்கட்பிரபு போல வித்தியாசமான, நல்ல கதையுள்ளைளமையான புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்! முக்கியமாக பாவப்படாமல் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்! பீட்சா, ஜிகர்தண்டா எடுத்த கார்த்திக் சுராஜ், நளன், மிஷ்கின் போன்ற வித்தியாசமானவர்களின் படங்களை கொடுக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு விஸ்னு,சிவா என்று ஒரே வட்டத்துக்குள் சுழர்ண்டு கொண்டிருப்பதில் எந்த வித்தியாசத்தையும் பெற்று விட முடியாது! வித்தியாசம் காட்ட கூடிய கமல்,விக்ரம்,சூர்யா போன்ற எல்லோரும் தங்களது பாதைகளை சரி வர உணர்ந்து அவர்கள் வித்தியாசம் காட்டும் போது ஒரு காலத்தில் கெட்டப் மன்னன் என்ற பேர் பெற்ற நம்ம ‘தல’ இப்போது இப்படி செய்வது மிகவும் மனதுக்கு நெருடலாக உள்ளது!!!

இத்தான் நா.. இத்தான் என் வாழ்க்கை...!!!

தன்னை பார்க்க வேண்டும் என்றால் தியட்டரில் மட்டும்தான் பார்க்க முடியும் என்று இருக்கும் தந்திரம் எல்லாம் ஓக்கே தான். அதுக்கு விளம்பரங்களில் நடிக்காமல், அடிக்கடி நிகழ்ச்சிகளுக்கு போகாமல் இருக்கலாம் அதுக்காக எதுக்குமே போகாமல் ஒதுங்கியே இருப்பது எந்த வகையில் நியாயம்? யாருக்காகவும் விஜய் அவாட் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம். 500ரூபாயோ 100ரூபாயோ நம்ம ‘தல’ வர மாட்டார் என்று தெரிந்தும் நிகழ்ச்சிக்கு போய் இரவு 1 மணிக்கு கொடுக்கப்படும் அஜித் சார்பான விருதுக்கு கத்தி, கூச்சலிட்டு தங்களது நாயகனின் மாஸ் ஐ காட்டும் அந்த எந்த எதிர்பார்ப்பும் அறியாத சாதாரண ரசிகர்களுக்காக என்றாலும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு போகலாம்! அஜித் வராமலே எத்தை பேர் அஜித் பேரை சொல்லி சொல்லி காட்டும் போது இதை எல்லாம் அஜித் கூட பார்க்கும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுத்தால் என்ன? என்ற கேள்வி வர காரணம்! எத்தனை நடிகர்கள், எத்தனை நடிகைகள் எத்தனை தரம் அஜித் பேரை 2014ஆம் ஆண்டு விஜய் அவாட்டில் மட்டும் சொல்லியிருப்பார்கள். இப்படி ஒதுங்கி இருந்து எங்களை கவலைப்படுத்துவது ஏன்? ‘சுறா’ படம் வந்த போது இதே போலதான் விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி விஜய் நடிக்கும் படங்களின் பாணியை மாற்றி வித்தியாசமாக கதைகளை தெரிவு செய்ய வைத்து பாதாளம் நோக்கிய சரிவில் இருந்து மீண்டார்கள். எங்களுக்கோ இப்போதைக்கு எந்த வீழ்ச்சியும் இல்லை ஆனால் இன்னும் மாற வேண்டும். இருக்கும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் அதுக்கு ரசிகர்களாகிய நாங்கள் எங்களது எதிர்ப்பை காட்டியே ஆக வேண்டும்!

சிவா கைல சிக்கீடாத!!!

இந்த பதிவை எழுதுவதற்கு தூண்டுதலாக நண்பர்கள் மட்டும் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அஜித்தும் ஒரு தூண்டுதல்தான் நீண்ட நாட்களாக அவரது ரசிகர்கள் அவதானித்துக்கொண்டிருக்கும் போதே இப்படியான தவறுகளுக்கு இடம் கொடுத்தது. இப்போதும் இதை மாற்றாது இருப்பது. அதை எல்லாம் விட முக்கியமானது நம்ம ‘தல’ சமூக வலைத்தளங்களில் பிரபலமான பேஸ்புக், டுவிட்டர் என்பவற்றில் தனது பேரில் இல்லாமல் வேறு பேரில் இருப்பதுதான். இதை நான் சொல்லவில்லை ‘வீரம்’ படத்தில் சூட்டிங்கின் போது அஜித் அடிக்கடி பேஸ்புக் அபிடேட் செய்வார் என்று சிவாவே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார். இதை எத்தனை பேர் அவதானித்தீர்கள் என்று தெரியாது? இப்படியான ஒரு மனநிலையில் தான் எல்லா ரசிகர்களும் அஜித்தை விட்டுக்கொடுக்காது எந்த நிலமையிலும் முன்னிலைப்படுத்தி வைத்திருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்து தனது பாதையை மாற்றி இன்னும் முன்னோக்கி போக வேண்டும்! எந்த ஒரு இடத்திலும் அஜித் சிலிம் ஆக வேண்டும், வயிறு இல்லாமல் படம் நடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் அஜித் கதை, இயக்குநர் என்பவற்றை நன்றாக வெளிக்காட்ட வேண்டும்.

படத்துக்கு மட்டும் கெட்டப், மேக்கப் போட்டாலே போதும்!!!

ரஜினியை எடுத்துக்கொண்டால் தேவையான நிகழ்ச்சிகளுக்கு போவார், விளம்பரம் நடிப்பதில்லை! வெளியே செல்லும் போது சாதாரணமாக தனது வயதுக்கு ஏற்றால் போல போவார், ஆனால் படம் என்று வந்து விட்டால் கட்டாயமாக மேக்கப் போட்டு வயதை காட்டாமல் கதைக்கு ஏற்ப வலம் வருவார். இதைத்தான் நான் ரசிகனாக அஜித்திடமும் இருந்து எதிர்பார்க்கின்றேன். வெளியில் போகும் போது எப்படியும் போகட்டும் ஆனால் படங்களில் வரும் போது டைய் அடித்து கதைக்கு ஏற்றால் போல வந்தாலே போதும். எனக்கு தெரிந்து சினிமா உலகில் அரசியலை நன்கு பிரியோகப்படுத்து ஒரு நாயகனாக ரஜினிக்கு பிறகு அஜித்தை பார்க்கின்றேன். இந்த விடயத்திலும் அஜித் தன்னை கொஞ்சம் எங்களுக்காக தனது ரசிகர்களுக்காக மாற்றீக்கொண்டால் எவ்வளவு நன்ராக இருக்கும்! இந்த பதிவு தொடர்பாக எத்தனை பேர் தங்களது உணமையான உள்ளகிடக்கைகளை வெளியே சொல்வார்கள் என்று தெரியாது! ஆனால் எனது மற்றும் எனது நண்பர்களின் நிலைப்பாடு இதுவே! இப்போது கூட இப்படி எல்லாம் பதிவிட்டு விட்டேனே என்று கவலையாக உள்லது ஆனால் இப்படியே போனா இதுக்கு ஒரு முடிவு வராது ‘தல’க்கு தெரியப்படுத்த வேண்டும் அதற்க்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கின்றேன்! இந்த பதிவில் நான் வேறு யாரை பற்றீயும் எதுகும் தவறாக கதைக்கவில்லை மாறாத விளக்கம் இல்லாமல் பிழையாக கருத்திடும் வாசகர்களுக்கு பதில் கொடுக்க கம்பனி காத்துக்கொண்டிருக்கின்றது!

சிம்மாசனம் ஆள நீ வரனும்... எங்களுக்கு பழசு புதுசா வேணும்!!!

இந்த பதிவில் என்னை அறிந்து நான் எந்த பிழையும் விடவில்லை, அப்படி விட்டிருந்தால் பொறுத்துக்கொள்ளவும், பொறுமை காக்க முடியாவிடின் கமெண்ட் செய்யவும். உங்களுடன் சேர்ந்து நானும் என்னை திட்டி தீர்த்துவிடுகின்றேன்..!!! இந்த கணம் கூட அஜித்தை விட்டுக்கொடுக்காமல்தான் பதிவை எழுதி முடித்தேன். முக்கியமாக அஜித்தை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் தான் எழுதினேன்!

டைய் அடிக்காமல் உண்மையாக வயதில் தான் நடிப்பேன், கோட்டு போட்டு லாங் சாட் வைத்து நடந்து வருவது, ஹிட் ஆன ஒரு கரெக்டரின் ஸ்டையிலை அடுத்த அடுத்த படத்தில் பயன்படுத்துவது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘தல’ தலை காட்டாமல் இருப்பது, கதைக்கு அவசியம் இல்லாமல் பாவம் பார்த்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இதை எல்லாம் ‘தல’ உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு காலகட்டத்துக்கு பிறகு முழுமையான ரஜினி ஆனாலே போதும்! எனது/எங்களது நீண்ட நாள் ஆசை நியமாகும்! ‘தல’ பிளீஸ் ‘தல’ கொஞ்சமாவது பிளீஸ்!!! எங்களுக்காக பிளீஸ்!!!

“வித்தியாசமான கெட்டப்பில் ‘தல’ வரணும், தமிழ் சினிமாவை அதகளப்படுத்தணும்...!!! அதை ரசிகர்களாகியா நாங்கள் கொண்டாடனும்!”

Post Comment

2 comments:

  1. இந்த பதிவை பல அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்தாகவே எடுத்து கொள்ளலாம் . அஜித்தின் பல செயல்கள் அவர் ரசிகர்களுக்கு பிடிக்க விடினும் மற்றைய ரசிகர்களின் முன் தலயை விட்டு கொடுக்க விரும்பாததால் வெளியில் சொல்வதை தவிர்கிறார்கள் . அதை இங்கே பதிவு செய்ததற்கு ஒரு அசி ரசிகனாக நன்றியை சொல்லிகிறேன் . அஜித் தயாரிப்பாளர்கள் மேல் வைத்திருக்கும் பரிவு ஏன் தன் ரசிகர்களின் ஆசையை பூர்தி செய்வதில் இருக்க கூடாது என்பதுதான் எங்களின் ஆதங்கம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! ஆனால் இது எல்லாம் அஜித் எப்ப உணர்ந்து எப்ப???

      Delete