Thursday, August 21, 2014

‘கஞ்சா’வில் இருந்து உச்சக்கட்ட போதையை பெறுவது எப்படி?

‘புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்’ (இப்படி எல்லாம் போட்டுத்தான் புகைத்தல், குடி, போதை தொடர்பான பதிவுகளை எழுத வேண்டும் என்று கட்டளை போடப்பட்டிருப்பதாக கேள்வி!!!) உங்களை மட்டும் பாதிக்காமல் உங்களை சூழ இருப்பவர்களையும் பாதிக்கும். அதனால் புகைக்க விரும்புவோர் புகைப்பழக்கம் இருப்பவர்களுடன் மட்டும் சேர்ந்து புகைக்கவும்! இந்த பதிவை வாசிக்கும் போது உங்களை மோட்டிவேட் செய்வது போல இருந்தால் பதிவை தொடர்ந்து வாசிக்க வேண்டாம். இந்த பதிவு ஒரு தகவல் கோர்ப்புக்காக எழுதப்பட்டது. யாரும் இதனை வாசித்த பின்னர் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு இனியாச்சும் தலைப்புக்குள் செல்வோமா? இந்த பதிவு நியமாகவே போதை அதிகமானது! விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும் அல்லது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் வாசிக்கவும்!இது பற்றி எல்லாம் பேசக்கூடாது என்று கட்டி வைக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் இருந்து கொண்டு இது பற்றி பதிவிடுவதனால் பதிவு சர்ச்சிக்கபடுகின்றதோ இல்லையோ நான் அதிகம் சர்ச்சிக்கப்படுவேன். ஆனால் இது தொடர்பாக ஒரு பதிவாவது பதிவேற்றியே ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. எப்படி எழுவது? எதிலிருந்து ஆரம்பிப்பது எப்படி முடிப்பது? ஆனால் எதை பற்றி எழுத போகின்றேன் என்பது மட்டும் தெளிவாக தெரியும்! இளைய தலைமுறையால் கொண்டாடப்படும் ஒரு வித்தியாசமான போதை! எல்லோருக்குள்ளும் ஒரு விதமான போதையை தேடிய தேடுதல் இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அந்த போதைக்கும் இந்த போதைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது! இது ஒரு வித்தியாசமான, புதுமையான, இனிமையான இளையராஜா பாட்டு போல மனதை இதமாக மாற்றும் போதை! ஆம் சொன்னால் என்ன? சொர்கத்தின் வாசல் இதில் தான் உள்ளது; சொர்க்கமும் இதனுள் தான் உள்ளது! அதன் பெயர் தான் ‘கஞ்சா’! இவ்வாறு சொன்னால் எல்லோருக்கும் தெரியும் ஆனால் ‘WEED' என்று சொன்னால் ஒரு சிலருக்குத்தான் தெரியும்! ஆனால் இதற்கு உலகளவில் ஒரு புதுமை பெயரும் உள்ளது! அதுதான் 'MARIJUANA' இப்படி சொன்னால் ஒரு சிலருக்குதான் தெரிய வாய்ப்பிருக்கின்றது! ஆரம்பத்தில் எனக்கு இந்த பெயர் தெரியாது இந்த பதிவுக்காக தகவல்களை சேகரிக்கும் போது தெரிந்து கொண்டேன்! (நம்ப வேண்டும்; நம்பிக்கைதானே வாழ்க்கை!!!)

            

‘கஞ்சா’ இதனை உள்ளெடுக்கும் முறையினை பொறுத்து அதனூடாக கிடைக்கும் போதையின் அளவும், வகையும் தீர்மானிக்கப்படும்! ‘கஞ்சா’ வாங்குவதில் இருக்கும் சிக்கலை போல காதலில் கூட சிக்கல் இருக்காது! அவ்வளவு சிக்கல், இடைஞ்சல் எல்லாவற்றையும் தாண்டினால்தான் ‘கஞ்சா’வை வாங்க வேண்டும்! ஒவ்வொரு இடத்தை பொறுத்து ‘கஞ்சா’ அழைக்கப்படும் பெயரும், அதற்கான விலையும் வேறுபடும். சாதாரணமாக பொட்டலம், சக்கை, பேரீச்சம் பழம், வண்டு என்று வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்படும். ஆனால் என்ன பெயரில் விற்கப்பட்டாலும் போதை ஒன்றே! அதில் எந்த மாற்றமும் இல்லை! சிகரட் புகைப்பதில் இருந்து, குடிப்பழக்கம் உட்பட வித்தியாசமான எத்தனை வகையான போதைகள் இருந்த போதும் இந்த போதை வித்தியாசமானது. பெண் தொடக்கம் மண் உள்ளடங்கலாக பொன் வரைக்கும் எல்லாம் போதைதானே! உலக புகைப்பட தினம் போல உலக ‘கஞ்சா’ புடைப்பிடிப்போர் தினம் என்றும் ஒரு நாள் உலக ‘கஞ்சா’ புகைப்போரால் கொண்டாடப்படுகின்றது! இது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாளை அவர்கள் தெரிவு செய்தமைக்கு ஒரு நக்கல், கேலியான காரணமும் உண்டு. அந்த தினம் சித்திரை மாதம் (ஏப்பிரல் மாதம்) 20ஆம் திகதி அதாவது நான்காம் மாதம் 20ஆம் திகதி 4.20 இந்த நாளை செல்லமாக 420 என்று அழைப்பார்கள் இனி இதில் என்ன நக்கல் இருக்கின்றது என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். உலகத்தில் அனேகமானவர்களுக்கு தெரிந்த ஒரு பாடகர் ‘கஞ்சா’ புகைப்போரின் ஆஸ்த்தான குரு என்றே வர்னிக்கலாம்! அவர் தான் ஜமைக்காவை சேர்ந்த இளமையிலேயே (36 வயதிலேயே) தனது ரசிகர்களை விட்டு பிரிந்த, 8 பிள்ளைகளுக்கு தகப்பனான ‘போப் மாலியா’!

    

‘கஞ்சா’வை எப்படி உபயோகிப்பது என்பதை பார்ப்போம்! நன்றாக காயாமால்(சருகு நிலையில் இல்லாமல்) இளமான பச்சை தன்மையுடன் இருக்கும் ‘கஞ்சா’வே மிகவும் நல்லது. முதலில் சிறு பைக்கற்றில் வரும் 20 தொடக்கம் 30 மில்லிகிராம் இருக்கும் ‘கஞ்சா’வை  அரைகுறையாக காய்ந்த இலைகள் தனியாக, சிறு சிறு தண்டுகள் தனியாக, விதைகள் எதாவது இருப்பின் அதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும்! (பிற்பாடு விதையை எடுத்து விதைத்து பார்த்து 5 வருடம் களி உண்பதுதான் உங்கள் விதி என்றான் யார்தான் என்ன செய்ய முடியும்?) வேறாக்கப்பட்டவற்றில் சிறு தண்டுகள், விதைகள் என்பவற்றை பயன்படுத்த முடியாது. 15 தொடக்கம் 25 மில்லிகிராம் அளவே இருக்கு அந்த இலைகள்தான் 5 - 8 மணித்தியாளங்கள் போதை தரப்போகின்றன என்பது குதிரைக்கு கொம்பு போன்றதாக எண்ணப்படும்! ஆனால் அதுதான் உண்மை! (போதையில் போது காணும் குதிரைக்கு எல்லாம் கொம்பும் இருக்கும் இறக்கைகளும் இருக்கும்! ஏன் என்றால் நீங்கள்தான் சொர்க்கத்தை நோக்கி போய்க்கொண்டு இருப்பீர்களே!!!) வேறாக்கப்பட்ட இலையை மிகவும் சிறிய சிறிய துண்டுகளாக கத்தரிக்க வேண்டும்! இதனை சாதாரண கத்திரிக்கோலாலும் வெட்ட முடியும் இல்லாவிடின் ‘கஞ்சா’வினை பொடி செய்வதற்க்கு என்றே தயாரிக்கப்பட்ட ஒரு வகையான அரைப்பான் ‘கிரைண்டர்’ மூலமும்  அரைக்கலாம்! எது எப்படியோ சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்க வேண்டும்! எவ்வளவு சிறிதாக துண்டுகள் இருக்கின்றதோ அவ்வளவு போதையை அதிகமாகவும் மெதுவாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் கொடுக்கும்!

 சுற்றும் முறை - 01


சிறிதாக வெட்டப்பட்ட துண்டுகளை நீளம் : அகலம் 3 : 2 இன்ச் என்ற வையில் வெட்டப்பட ருசு 'TISU' பேப்பரை; இந்த ருசு பேப்பரை எவ்வாறு பெற்றுக்கொள்வது சிகரட் பெட்டியினுள் இருக்கும் தங்க நிற தாளை கிழியாமல் உரித்து அந்த தங்க நிற தாளில் ஒட்டப்பட்டிருக்கும் வெண் நிற தாளை கிழியாமல் மிகவும் கவனமாக உரிக்க வேண்டும்! இது மிகவும் கடினமானது என்றால் சிறு வயதில் பட்டத்து ஒட்ட பயன்படுத்தும் வெண் நிற ருசு பேப்பரையே பயன்படுத்தலாம் ஆனால் வெள்ளை நிரத்தை தவிர வேறு நிறத்தை பயன்படுத்தும் போது புகைத்தலின் போது ஒரு வித சாய மணம் ஒன்று வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இல்லாவிடின் ‘கஞ்சா’ புகைப்பதற்க்கு பயன்படுத்து ‘ஓவோசி’ வகையை சார்ந்த தாள்களையும் பயன்படுத்தலாம்! எந்த வகையான தாளையும் பயன்படுத்தலாம் ஆனால் சுற்றும் போது கிழியாமல் சுற்ற வேண்டும்! வெட்டப்பட்ட தாளில் வெட்டப்பட்ட ‘கஞ்சா’ துண்டுகளை கொட்டி பரவ வேண்டும். பரவிப்பிய பின்னர் சாதாரணமாக ஒரு தாளை சுருட்டுவது போல சுருட்ட வேண்டும். (அவ்வளவும் தான் இனி என்ன? புகைக்க வேண்டியதுதான்! சிவனுக்கு ஹாய் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!!!) இப்படியான முறையில் மிகவும் வலுவான புகை உள்ளெடுக்கப்படுவதால் அதாவது ‘கஞ்சா’வை தவிர வேறு எதுகுமே கலக்கப்படாதா ‘ஜொவின்ற்’ ‘JOINT’ ஐ முதன் முதலில் உள்ளெடுக்கும் போது சற்று புரையேறூவது போல இருக்கும் ஆனால் அப்படி இல்லை அதிக புகை தொண்டை வழியாக போவதனால் அப்படியான ஒரு மனநிலையை உணர்வீர்கள்!

 சுற்றும் முறை - 02முதலில் முறையினை போலவே தான் ஆனால் இதனுள் ஒரு வித்தியாசம் அது என்னவென்றால் ஒரு ‘பட்’ சிகரெட்டில் இருக்குமல்லவா அப்படியான ஒரு ‘பட்’ இனை தாளுடன் பொருத்தி சேர்த்து சுற்ற வேண்டும். இது புகையை உள்ளெடுக்கும் போது ‘கஞ்சா’ துண்டுகளையும் உள்ளெடுப்பதை தவிர்க்கும்! பொருத்தப்பட்ட ‘பட்’டினை தாண்டி துகள்கள் செல்லாது. சிக்கல் இல்லாமல் இதம் பெறலாம். முறை - 1 & முறை - 2 இரண்டிலும் ‘கஞ்சா’ தவிர வேறு எதுகுமே சேர்க்காத துகள்களே பயன்படுத்தப்பட்டன! இந்த வகையிலான முறையில் புகைப்பதானது மிகவும் போதை தரக்கூடியது. அதே போல ஆபத்தனதும் கூட பழக்கம் இல்லாதவர்கள் அல்லது முதல் தடவை பயன் படுத்துவோர் இப்படியான முறையில் சுற்றப்பட்ட ‘ஜொவின்ற்’ ஐ உள்ளெடுப்பதை தவிர்ப்பது நல்லது! (பழக்கப்பட்டவர்களுக்கு சலக்கு சலக்கு சரிகச்சேல சலக்கு சலக்கு... அடடா வெக்கம் வந்தா விலக்கு விலக்கு..!!!)

 சுற்றும் முறை - 03சாதாரணமாக விற்கப்படும் ‘பட்’ உடன் கூடிய சிகரெட் இனை எடுத்து அதனுள் இருக்கும் புகையிலை மற்றும் அதன் கலவைகளை சிகரெட்டை கிழிக்காமல் மெதுவாக அந்த கலவையினை வெளியே எடுத்து கைவசம் இருக்கும் ‘கஞ்சா’வின் அளவிற்க்கு ஏற்ப (15 தொடக்கம் 25 மில்லிகிராமிற்க்கு அரைவாசி சிகரெட்டில் வரும் கலவையினை பயன்படுத்தலாம்) சிகரெட்டினுள் வரும் கலவையினை எடுத்து ‘கஞ்சா’ மற்றும் சிகரெட்டில் இருந்து பெறப்பட்ட கலவை என்பவற்றை ஒன்றாக சேர்த்து மிக நன்றாக சிறிதாக வெட்டி கிழிக்காமல் எடுக்கப்பட்ட சிகரெட்டினுள் மறுபடியும் போட வேண்டும். (இதென்னடா வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா போச்சு என்று நினைத்தான் போதை வராது!!!) இப்படி தயாரிக்கப்பட்ட ‘ஜொவின்ற்’ பார்க்கும் போது சிகரெட்டை போலவே இருக்கும் ஆனால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அது என்னவென்று! ஆதலால் சாதாரணமாக புகைப்பிடிக்கும் இடங்களில் புகைப்பிடிக்கலாம். குறிப்பாக ‘கஞ்சா’ புகையின் மணம் பரீட்சயம் இல்லாத புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம் புகைக்கும் இடத்தில் புகைப்பதால் சிக்கல் ஏற்படாது. இப்படியான முறையின் சுற்றப்பட்ட ‘ஜொவின்ற்’ ஐ முதல் தரம் புகைப்பவர்களும் புகைக்கலாம். சிக்கலே இல்லாமல் சிவலோகம் போகலாம்! இதலிருந்து வரும் போதையானது மற்ற சுற்றுக்களின் இருந்து பெறப்படும் போதையிலும் குரைவாகும். ஏன் என்றால் இந்த சுற்றுக்கு சிகரெட் தூள் கலக்கப்பட்டுள்ளது மற்றும் சிகரெட்டில் வரும் ‘பட்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக புகையினை எடுக்கும் போது ஒரு வடிகட்டல் செயற்பாட்டின் மூலமே பெறப்படும் ஆதலால்தான் பெறப்படும் போதை சற்று குறைவாகும்! ஆனால் முதலில் புகைப்பவர்களுக்கு இதமான இன்மமும், மனமான மகிழ்ச்சியும் தரும்!

   

இந்த முறைகளே அதிகம் பழக்கப்பட்ட சுற்றும் முறைகள் ஆகும். இதை விட உலகளாவிய நிலையில் பல வேறுபட்ட சுற்றும் முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. அதாவது ‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யா பயன்படுத்தும் ஒரு குழல் போன்ற ஒன்றின் மூலம் தான் ஆதிகாலத்தில் உள்ளெடுக்கப்பட்டது. இதை விட சுற்றப்பட்ட நான்கு ‘ஜொவின்ற்’களை ஒன்றுடன் ஒன்று இணைத்து புகைக்கும் ‘டாடா’ வகை புகைத்தலும் பிரபலமான புகைக்கும் முறையே! அதை எல்லாம் விட வளைய வளைய புகைகளை உருவாக்கும் ‘டிவிஸ்ட்டு’ வையிலான சுற்றல் என்பனவும் மிகவும் பிரபலமானது. இந்தவகையில் சுற்றுவது மிகவும் கடினம், கடினம் என்பதையும் தாண்டி நேரம் அதிகளவில் செலவாகும்! ஆனால் எவ்வளவு பொறுமையாக சுற்றுக்களை செய்ய முடிகின்ரதோ அந்த அளவுக்கு போதை அதிக அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும்! இதனை விட எல்லாம் முக்கியமான விடயம் என்னவென்றால் சுற்றும் முறைகளில் இப்படி பல முறைகள் இருக்கின்ர போது உள்ளெடுக்கு முறையில் மட்டும் வகைகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிடுவார்களா? ‘கஞ்சா’வின் போதை சுற்றும், உள்ளெடுக்கும் முறைகளிலும் முக்கியமாக பதட்டமில்லாமால் புகைக்கும் போதும் போதையை பெற்றுக்கொள்ளப்படும் அளவு எல்லையில்லாமல் இருக்கும்!

       

மிதமான குளிரான பகுதிகளில் வளரும் இந்த செடி உலகிலேயே மூன்று வகைகளில் தான் இருக்கின்றது. கனாபிசு சற்றைவா (Cannabis sativa), கனாபிசு இன்டிகா(Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis) என்ற வகைகளாகும். இந்த செடிகள் அதிகமாக மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளில் விளைகின்றது. இந்த செடியினால் கிடைக்கப்பெறும் போதை மற்றும் விற்பதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபம் இந்த இரண்டையும் கருதி இவை செயற்கையான முறைகளிலும் மேல உள்ள படத்திலுள்ளது பொன்று பயிரிட்டு வளர்க்கப்படுகின்ரது. இதனை 6 பருவங்களாக வளர்ப்பார்கள் இந்த 6 பருவங்களிலும் ஒரே அளவான குளிரையே அதாவது இதமான, மிதமான குளிரையே பாய்ச்ச வேண்டும். காலநிலையில் பெரிதும் தங்கியுள்ளது ‘கஞ்சா’வின் விளைச்சல். செடியில் அதிகளவு விதைகளை கொண்ட செடி நல்ல போதை மிக்கதாகவும் விதகளின் எண்ணிக்கை குறைவான செடி உறங்குகாலத்தில் விதைக்கப்பட்ட செடியாகவும் அதாவது போதையினை பெரிதாக கொடுக்காத செடியாகவும் இருக்கும். எது எப்படியோ ‘கஞ்சா’வினை பயிரிட்டு அறுவடை செய்து பைக்கற்களில் அடைத்து கொள்வனவு செய்வோரிடம் அதனை மொத்தமாக விற்று அவை கை மாறி நுகர்வோரிடம் வந்து சேர்வதற்க்குள் எத்தனை பில்லா, எத்தனை டான்களை கடந்து வருகின்றது. மிகவும் ரிஸ்க்கான வேலைகளில் இதுகும் ஒன்று!


நல்ல வகையான விளைச்சல் தந்த செடியினை அறுவடை செய்து காய வைப்பது என்பது ஒரு கலையே! விளைச்சலை எல்லோராலும் செய்யமுடியும் ஆனால் பதப்படுத்துதல் என்பது மிகவும் கடினம், பதப்படுத்துதலின் போது எப்படி மிதமான குளிரில் வளர்க்கப்பட்டதோ அதே போல அளவான சூட்டிலேயே இதனை காய வைக்க வேண்டும். ஒரே நேரத்தின் புகையிலை காய வைப்பது போல வெய்யிலில் காய வைக்க முடியாது. புகை காட்டி சூடேற்றி காய வைக்க முடியாது. அளவான சூட்டினுள் வைத்து நீர் தெளித்து தெளித்து அளவாக பதப்படுத்த வேண்டும். முழுமையாக காய விடாது. அளவான பதத்தின் போது பதப்படுத்தலை நிறுத்தி பொதி செய்ய வேண்டும். பொதி செய்யும் போது செடியின் தரம், மற்றும் போதை நிலை என்பவற்றை நுகர்வோர் தெரிந்து கொள்வதற்காக செடியில் இருக்கும் விதைகள் உருத்தப்படாமல் நிறைக்கு ஏற்ப வெட்டப்பட்டு பொதி செய்யப்படும். விதைகளை வைத்தே மணம் தீர்மானிக்கப்படுகின்ரது மணத்தினை வைத்தே செடியின் வளம் தீர்மானிக்கப்படுகின்றது. ஆக மொத்தத்தில் ‘கஞ்சா’ புகைப்பது என்பதும் அவ்வளவு இலகுவான விடயம் அல்ல அதை போன்ற போதை வேறு எதிலும் இல்லை! பட்டும் படாமலும் மெதுவாக காத்தோட்டமாக தூக்கிச்செல்லும் அடர்ந்த காடுகள் இருக்கும், நடிகைகளின் உலா கட்டாயம் இருக்கும், கண்ட நல்ல கனாக்கள் எல்லாம் கண்முன் வரும். பிரிந்த காதலி நினைவுக்கு வருவாள் பழைய கதைகள் எல்லாம் பேசுவாள் சுகம் தருவாள். போதை எல்லையில்லாதது. சொர்க்கத்தின் வாசல்படி இதிலிருந்துதான் தொடங்குகின்றது!

உள்ளெடுக்கும் முறை


புகைக்க தயாரான நிலையில் இருக்கும் ‘ஜொவின்ற்’ ஐ சாதாரணமாக சிகரெட் புகைப்பது போல உள்ளே புகையினை இழுத்து உடனடியாக வெளியே ஊதாது 3 - 5 செக்கன்கள் உள்ளேயே வைத்திருந்து பின்னர் வெளிவிடுதல் சாதாரணமாக உள்ளெடுக்கும் முறைகளில் அதிகளவு போதை தரும் முறை. இதை விட மிகவும் வித்தியாசமான முறை மேலே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு அமைப்பை உருவாக்கிய பின்னர் அதில் சுற்றப்பட்ட ‘ஜொவின்ற்’ ஐ பொருத்து முதலில் கூறியது போல புகைத்தல். இந்த அமைப்பை ஒழுங்கு செய்வது கொஞ்சம் சிரமம் ஆனால் செய்து விட்டால் காலா காலத்துக்கும் வைத்து பயன்படுத்தலாம் சுகம் பெறலாம். அடித்து ‘சைனீஸ்’ முறையிலான உள்ளெடுப்பு அதாவது இந்த முறையை செய்ய இரண்டு பேர் குறைந்தது தேவை ‘ஜொவின்ற்’ரின் தணல் உள்ள பக்கத்தை வாய்க்குள் எடுத்துக்கொண்டு வழமையாக வாய் வைத்து புகையை உள்ளெடுக்கும் பகுதியின் மூல மற்றவரின் வாய்க்குள் புகையை ஊதுதல். இது மிகவும் போதை தரக்கூடிய முறையாகும். இதே முறையில் ‘ராக்கெட்’ என்று சொல்லப்படும் முறையினையும் செய்யலாம் அது இரண்டு ‘ஜொவின்ற்’களை வாய்க்குள் வைத்து ஒரே சமயத்தில் மற்றவர் வாய்க்குள் ஊதுதல். (நாக்கில் சுடும், பயம் இருந்தால் சுகம் வராது!!!) ஒரு இழுப்புக்கே உலகம் சுற்றி வரும் இரண்டையும் வைத்து இழுத்தால் நவக்கிரகமும் சுற்றி வரும்! இடைக்கால கமலஹாசன் படத்தில் வரும் சில பல காட்சிகள் எல்லாம் இளையராஜா பின்னனி இசையுடன் நினைப்புக்கு வந்தால் அதுக்கு கம்பனி பொறுப்புகிடையாது!.


இதை எல்லாம் விட வித்தியாசமானதும் பலராலும் செய்ய முடியாததும், ப்ழக்கப்பட்டவர்களாலும் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் மட்டும் ஊதக்கூடிய முறைதான் இந்த முறை இந்த முறைக்கான பெயர் ‘பபிள் டாஷ்’ ஆகும். இதில் புகையை ஒருவர் உள்ளெடுத்து இப்படி குமிழிகள் போல வெளியே ஊத வேண்டும் அதனை சுற்றி இருப்பவர்கள் உடைக்காமல் வாயை குமிழியில் வைத்து பதட்டமடையாமல் முழுமையாக உள்ளெடுக்க வேண்டும். இதனை போல வித்தியாசமான பல முறைகள் இருக்கின்றது. அதை எல்லாம் வரிசைப்படுத்த வேண்டும் என்றால் பதிவு நீண்டு விடும் வாசிக்கும் உங்களுக்கு விறுவிறுப்பு குறைந்து விடும். வித்தியாசமான சுவைகளிலும் இதனை புகைக்க முடியும் எந்த முறையில் சுற்றப்பட்ட ‘ஜொவின்ற்’ ஆக இருந்தாலும் அதன் வெளிப்புறத்தில் உங்களுக்கு என்ன சுவை வேண்டுமே அந்த சுவையினை பூசிய பின் புகைக்கலாம். அதாவது சாக்கிலேட் சுவை வேண்டும் என்றால் உருகிய சாக்கிலேட்டை ‘ஜொவின்ற்’ இன் வெளிப்புறத்தில் பூசிய பின் புகைத்தால் வித்தியாசமான வாசனையுடன் புகைக்க முடியும். சாக்கிலேட்டுக்கு பதிலாக எதனையும் பயன்படுத்தலாம். (என்ன எல்லாம் பண்ணுறானுங்க பாவீங்க என்று யாரோ நினைப்பது போலவே இருக்குதே!!!)


இதை எல்லாம் விட முக்கியமாக சாதாரண சிகரெட்டை விட ‘ஜொவின்ற்’ மிக விரைவாக எரிந்து முடிந்து விடும் ஆகவே புகைக்க ஆரம்பித்த உடன் ‘ஜொவின்ற்’ இன் வெளிப்பகுதியின் நீர் அல்லது சோடா சற்றி பூசி புகைத்தால் சற்று ஈரப்படுத்தப்பட்ட ‘ஜொவின்ற்’ எரிவது கொஞ்சம் தாமதமாகும் நீண்ட நேரம் புகைக்கலாம்! இது கொஞ்சம் சில்லறைத்தனமாகத்தான் இருக்கும் ஆனால் வளப்பயன்பாடு என்பது முக்கியமாகும். இருக்கு என்பதற்காக தேவையில்லாமல் வீணாக்க கூடாதுதானே? எவ்வாறு சுற்றுவது எப்படி எல்லாம் புகைக்கலாம் என்று பார்த்தாகி விட்டது. இனி என்ன விதமான போதைகள் வெளிப்படும் என்று பார்ப்போம்! புகைக்க ஆரம்பிக்கும் போது நீங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒரு முறை உள்ளே எடுத்து வெளி விட்டதும் பிறந்த குழந்தைக்கும் சமனாக சிறு பிள்ளைத்தனமாக மாறிவிடுவீர்கள். புகைத்ததும் யாரைப்பார்த்தாலும் சிரிப்பு நிறுத்த முடியாத அளவுக்கு வரும்! ஆனால் அதை நிறுத்த முயற்சி செய்வதை விட அதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டால் போதை அதிகம். எப்போதுமே உங்களுக்கு நியாபகம் வராத கனவுகள் எல்லாம் நியாமகம் வரும், அதை எல்லாம் விட யாரிடம் கடன் கொடுத்துவிட்டு இன்னமும் வாங்காமல் விட்டிருக்கின்றோம் என்பது வட்டியும் முதலுமாக கணிப்பான் இல்லாமலேயே நினைப்புக்கு வரும்! புகைத்த பின்னர் குளிரான பால் குடிப்பதோ அல்லது சாக்கிலேட் சாப்பிடுவதோ அல்லது ஜோக்கட் சாப்பிடுவதோ இன்னமும் போதையை கூட்டும். மாறாக சூடான திரவங்களை உள்ளெடுக்கும் போதும் போதை முழுமையாக உடனடியாக குறைந்து விடும்!இதனை புகைப்பது தவிக்கப்பட வேண்டியது தான் ஆனால் உச்சக்கட்ட வித்தியாசமான ஒரு போதையினை கொடுப்பதனால் தவிக்க முடியாமல் போய் விடுகின்றது. மருத்துவக்குணம் மிக்க ‘கஞ்சா’ அளவாக உள்ளெடுக்கப்படுமாயின் மருந்தாகவும் அளவுக்கு அதிகமானால் போதை பொருளாகவும் மாற்றமடையும். தொடர்ந்து பாவிப்பதனால் தலைப்பகுதி, கழுத்து பகுதிகளில் படைகள் போன்று உருவாகி கடி மற்றும் சொறி போன்ற வியாதிகளை கொடுக்கும். அடிமைத்தன்மையினை உண்டு பண்ணும். கண் பார்வையினை குரைக்கும், இதனை பயன் படுத்தாது எதனையும் யோசிக்க முடியாது என்ற நிலமைக்கு தள்ளப்படும்! ஆனால் கொடுக்கும் போதையோ வித்தியாசமானது! போதையின் போது சாதாரணமாகவே போதையை கொடுக்கும் இடைக்கால இளையராஜா, ரகுமான் பாடல்களை கேட்கும் போது வேறு ஒரு உலகத்து உங்களுக்கு விருப்பமானவர்களுட சென்று வாழ்வது பொன்ர ஒரு நிலைப்பாட்டை உணர்வீர்கள். ஆனால் பின் விளைவுகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக சிறுவயதில் மரணம் வரைக்கும் செல்லும். ஆனால் ஆண்மை தன்மைக்கும் எந்த பங்கமும் ஏற்படாது அந்த விதத்தில் ஜலதோஷம் தான் இல்லை இல்லை சந்தோஷம்தான். அதை விட ஆண்மையில் வீரியம் அதிகமாகும்! குறிப்பாக பெண்கள் புகைப்பது கொஞ்சம் சிக்கல்தான் என்ன அந்த பெண் திருமணம் ஆகி இருந்தால் கணவனுக்கும் அல்லது காதலன் இருந்தால் காதலனுக்கும் சிக்கல்தான்! (புரிந்தவன் மட்டும் சிரிச்சுக்கோ...!!!


எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது இதில் இருக்கும் நல்ல பயனுள்ள விடயங்களை கொஞ்சம் பார்த்துவிட்டு கடையை சாத்துவோமா? செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் :- இத்தாவரத்தில் 60க்கும் மேற்பட்ட கன்னாபினாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவையே இத்தாவரத்தின் செயல் ஊக்கப் பொருட்களாகும். ஃபிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. விதை எண்ணெயில் லினோலியிக் அமிலம் உள்ளது. மருத்துவப் பயன் உடைய பகுதிகள்:- தாவரத்தில் இருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள், இலைகள், பெண் தாவரத்தின் மலர் கொண்ட அல்லது கனி கொண்ட நுனிப்பகுதி மற்றும் விதைகள் பயனுள்ள பகுதியாகும். தண்டு பகுதியில் இருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பாங், கஞ்சா, சரஸ்:- போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது. இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். மனநோய்க்கு மருந்து:- பாங் மற்றும் கஞ்சா பசி தூண்டுவி. நரம்பு செயல் தூண்டுவி. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. பாங்குடன் பால், சர்க்கரை, நீர் சேர்த்து போதை தரும் பானமான மாஜூம் தயாரிக்கப்படுகின்றது. மனமாறாட்டம், மனநோய், ஆகியவற்றிர்க்கு மருந்தாக சரஸ் சிபாரிசு செய்யப்படுகிறது. இது ஆஸ்துமா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. இது அபின் போன்றே பயன்படுத்தப்படுகிறது. அபின் பயன்படுத்தப்படும் மகப்பேறு மருத்துவம், மூட்டுவலி, மாதவிடாய், முடக்குவாதமென அனைத்திற்கும் மருந்தாகிறது. ஆனால் அபின் போன்று பயன்பாட்டிற்குப் பின் ஏற்படும் பின்விளைவுகள் அற்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. மனச்சோர்வு போக்கும். தூக்கத்தை தூண்டுவதாக இது பயன்படுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது:- இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. இதில் காணப்படும் polyunsaturated கொழுப்பு அமிலங்கள் சிறந்த துணை உணவாக பயன்படுகிறது. இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப்போக்கினைத் தடுக்கிறது. அண்மைக்கால ஆய்வுகள் கஞ்சா தாவரத்தில் காணப்படும் செயல் ஊக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளன. இவை வாந்தியை தடுக்கக் கூடியது. வேதி மருத்துவம் பெறும் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் தண்டுவட பாதிப்பு, கால்வலிப்பு, தொடர்வலிகள் மற்றும் பசியின்மைக்கும் சிறந்த மருந்தாகிறது.

“கஞ்சா உடலுக்கு நல்லது என்று சொல்லவில்லை; உடலுக்கு நல்லதாகவும் பயன்படுத்தலாம் என்றுதான் சொல்கின்றேன்”

Post Comment

1 comment: