Tuesday, October 21, 2014

கத்தி - சினிமா விமர்சனம்!!!

பொதுவாக ஆக்‌ஷன் ஹீரோக்களின் படமாக இருந்தால் மக்களுக்காக போராட வேண்டும், அநியாயம் செய்யும் வில்லனை ஓட ஓட துரத்த வேண்டும் அல்லது அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இப்படியான கதையாக இருந்தால்தான் ஆக்‌ஷன் காட்சிகளின் மூலம் ஹீரோயிசத்தை உயர்த்திக்காட்டி ஹீரோவுக்கு மாஸ் இமேஜை உருவாக்க முடியும் அல்லது இருக்கும் மாஸ் இமேஜை தக்க வைத்துக்கொள்ள முடியும்! மிகவும் அருமையான ஒரு கூட்டனி விஜய் - முருகதாஸ், இதற்கு முதல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ‘துப்பாக்கி’ என்ற படத்தை கொடுத்த வெற்றிக்கூட்டனி கொடுக்கும் அடுத்த படம்தான் ‘கத்தி’! படம் தொடர்பான எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை! ‘துப்பாக்கி’ படத்தில் எப்படி தீவிரவாதிகளை அழித்து மக்களை காப்பாற்றும் இராணுவ வீரராக விஜய் நடித்து வெற்றி படம் ஒன்றை கொடுத்தாரோ, அதே போல ஒரு கதையை உள்ளடக்கிய படமே ‘கத்தி’!

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட First Look!!!படத்தின் கதை என பல கதைகள் வெளி வந்த போதும் எதையும் நம்மவில்லை அல்லது நம்பக்கூடய வகையில் கதைகள் இருக்கவில்லை! ஆனால் எப்போது படத்தின் Trailer வெளியானதோ அன்றே உண்மை நிலை என்னவென்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்! இருந்தும் படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டியது இரண்டு விடயங்கள் முதலில் விஜய், அடுத்து கதையில் பெரிய பிடிப்பு இல்லாவிட்டாலும் திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்லும் வல்லமை மிக்க இயக்குநர் முருகதாஸ்! உங்கள் எதிர்பார்ப்பை ‘கத்தி’ படம் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் இதற்கு நான் முழு பொறுப்பு ஆனால் கதை என்று தனித்து பார்க்கும் பட்சத்தில் ஒரு 2000 படங்களில் பார்த்து பார்த்து புளித்துப்போன கதை! இந்த கதையை இப்படி ஒரு படமாக கொடுக்க முடியுமே ஆனால் அது முருகதாஸ் போல ஒரு சிலரால்தான் முடியும்! ‘லைக்கா’ நிறுவனத்தின் பெயரை நீக்கினால் மாத்திரமே படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என்ற கோரிக்கைகள் சில தமிழ் அமைப்புக்களால் முன் வைக்கப்பட்டதற்கு இணங்க ‘லைக்கா’ பெயர் நீக்கப்பட்ட நிலையிலேயே ‘கத்தி’ படம் வெளியாகியது!


வில்லாதி வில்லன்!!!


படத்தின் கதை எதுவாக இருப்பினும் படம் பார்க்கும் போது விஜய் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை! படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்த விடயமே ஆனால் படத்தில் பெருவாரியான இடங்களில் ஒரு விஜயையே காட்டி இருக்கின்றார்கள், படத்தை கதையின் போக்கில் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட யுக்தியாக இருக்கலாம்! படத்தில் ஒரு விஜய் சட்டம் பேசும் ‘தமிழன்’ பட விஜய் போலவும் இரண்டாவது விஜய் ‘பிரியமுடன்’ படத்தில் வந்த ஹீரோயிசம் கலந்த வில்லனாகவும் வலம் வந்துள்ளார். படத்தின் பெரிய பலமே இரண்டாவது விஜய்தான்! பொதுவாக விஜய் படத்தில் காதல் காட்சிகளுக்கும், குறும்பான முக பாவனைகளுக்கும் குறைவிருக்காது. அதே போல இந்த படத்திலும் விஜயின் குறும்புத்தனமான முக பாவனைகள் பல இடங்களில் இரசிக்க வைக்கின்றது! படத்தில் ஹீரோவின் செல்வாக்கு எவ்வாறு இருக்கின்றது என்று பார்த்துவிட்ட நிலையில் படத்தின் கதைக்குள், விமர்சனத்துக்குள் செல்வோம்!

'கத்தி’ படம் தொடர்பான விபரங்கள்!

இந்தியாவில் அதுகும் குறிப்பாக தமிழ் நாட்டில் பல இடங்களில் இந்த படத்தின் தாக்கம் நிட்சயமாக இருக்கும், பல இடங்களில் இடம்பெறும், இடம்பெற்ற தக்கங்களில் கோர்வையாகவே இந்த படத்தின் கதையோட்டம் அமைந்துள்ளது. படத்தின் கதை தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டுதான் நகர்கின்றது என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்! ‘தலைவா’ ‘ஜில்லா’ போல் இல்லாமல் படம் விஜயின் ரசிகர்களால் விரும்பப்படும் பட்சத்தில் ‘ரமணா’ படத்திற்கு இன்று வரை இருக்கும் வரவேற்பை போல ‘கத்தி’ படமும் காலத்தால் நிலைத்து நிற்க்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை! கிராம பகுதியை அண்டிய இடத்தில் ஒரு பெரிய குளிர்பான தொழிற்சாலையை அமைப்பதற்க்கு அரசு அனுமதி கொடுக்கின்றது! அந்த குளிர்பான தொழிற்சாலையால் கிராமத்து தண்ணீர் உறுஞ்சப்படுகின்றது இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்! இதன் போது மக்களுக்காக விஜய் போராடுகின்றார் அந்த வெளிநாட்டு நிறுவனத்தை எதிர்கின்றார்! மக்களுக்காக போராடுகின்ற விஜய் திடீரென காணாமல் போய் விடுகின்றார்! படத்தின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பே இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்ரது! குறிப்பாக வில்லத்தனமான விஜய் இன் அறிமுக காட்சி சும்மா தெறிக்க விட்டிருக்காங்க திரையரங்குகளை! அனிருத்தின் பின்னணி இசை தக்க சமயத்தில் அஸ்திரங்களாக பாய்ந்துள்ளது! என்ன சொல்லி என்ன பயம் கதையில் உழுந்து வடையின் ஓட்டை போல் பெரிய ஓட்டை படத்துக்கு சொதப்பல் என்றால் அதுதான்! ‘மான்கராத்தே’ கதை முருகதாஸின் தான் என்றால் ஜோசித்து பாருங்கள் மக்களே ‘கத்தி’ கதை எப்படி இருக்கும் என்று!

கத்தி என்கிற கதிரேசன்!!!

ஒரு விஜய் காணாமல் போன தருணத்தில் சமந்தா, காதல் என்று ஜாலியாக இருந்த இன்னொரு விஜய் மக்களுக்கு அறிமுகம் ஆகின்றார். மக்கள் இவரை தங்களுக்காக போராடிய விஜய் என நினைத்து குறைபாட்டை எடுத்து சொல்கின்றார்கள், இந்த விஜய் மக்களில் பிரச்சனையை கேட்டு மக்களுக்காக தானும் களம் இறங்குகின்றார். ரெண்டு விஜய்க்கும் பெரிய வித்தியாசங்கள் என்று ஒன்றும் இல்லை, ‘அழகிய தமிழ்மகன்’ இரட்டைக்கதாப்பாத்திரத்தை நினைத்துக்கொள்ளவும்! காணாது போன விஜய்க்கு என்னா ஆகிற்று என்பதுதான் படத்தின் பெரிய ஒரு திருப்புமுனை, இந்த காட்சிகளின் ஒழுங்கமைப்பு, காட்சி எடுக்கப்பட்ட விதமும் பாராட்டியே ஆக வேண்டும்! கணாமல் போன விஜய் மற்றும் மக்களுக்காக போராடிக்கொண்டு இருக்கும் விஜய் இருவரும் சந்திக்கும் காட்சி இன்னொரு ‘ஜில்லா’தான். படத்தில் இருவரும் மக்களுக்காக போராரும் கட்டங்கள் காட்சியமைப்பும் சலிக்காமல் படத்தினை நகர்திய முருகதாஸின் இயக்கத்துக்கு ஒரு பெரிய பாராட்டு! படத்தில் சமந்தா பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் ஒரு கலர் இருக்கு என்றால் அது சமந்தாதான் காரணம்! சில சில காட்சிகளில் செம அழகாக காட்டி இருக்காரு இயக்குநர். படத்துக்கு சமந்தாதான் பலம் என்று சொல்ல முடியாது, கவர்ச்சி, ஹீரோவுடன் தேவையான காட்சிகள் என அளவாக சந்தாவை பயன்படுத்தியுள்ளார் முருகதாஸ்! உப்புக்கு சப்பாக வந்து போனாலும் சில சில காட்சிகள் படம் முடிந்த பின்னும் நினைப்பில் இருக்குமாறு செய்து விட்டார் சமந்தா! படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இரண்டு விஜயைக்கும், படத்தின் திரைக்கதைக்கும் தான்!

அஞ்சான் லெவலில் கவர்ச்சி இல்லாவிட்டாலும் அளவாக இருக்கு!!!

படத்தின் ஓட்டத்திற்கு சதீஸின் நகைச்சுவை எடுபடவில்லை! ஆனால் நகைச்சுவை காட்சி கட்டாயம் என்ற இடங்களிற்கு மாத்திரம் சதீஸ் வந்து போவது பெரிதும் பின்னடைவாக இருக்கவில்லை. இதற்க்கு முதலில் தரணி இயக்கிய ‘தூள்’ படத்தின் காட்சிகள், கதை நினைப்பு வருவது எனக்கு மட்டும்தானா? என பல காட்சிகளில் நினைத்ததுண்டு. தமிழ் சினிமாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட கதைக்களம் அவ்வாறு இருக்கும் போது இந்த கதையை விறுவிறுப்பாக ஒழுங்கமைத்தமை பாராட்டத்தக்க விடயமே! சினிமாவில் மக்களுக்காக போராடுவதில் எம்.ஜி.ஆர் இற்கு பிறகு விஜய்தான்! இருந்தாலும் படத்தில் இந்த அளவுக்கு சண்டைக்காட்சிகளை வைத்திருக்க கூடாது எல்லா சண்டை காட்சிகளும் மிரட்டுவதாக உள்ளது, பயங்கரமாக உள்ளது, ஜீரணிக்க முடியாது உள்ளது. படத்துக்கு இன்னொரு பக்க பலம் பிரதான வில்லன், மற்றும் இசையமைப்பாளர் அனிருத். வில்லனில் நடிப்பு மற்றும் வார்த்தை பிரயோக அசைவுகள் பிரமாதம், சாவால் விடும் சந்தர்பங்களிலும், விஜய்யுடன் பேசும், மோதும் காட்சிகளும் ரசிகர்களில் இரசனைக்கு விருந்துதான்! வில்லனின் டயலாக் டெலிவரிகள் செம சில சில இடங்களில் விஜயை முந்தி விடுகின்றார். படத்தில் சில தொய்வுகள் விஜயின் டயலாக்டெலிவரியும் ஒரு காரணம்!

படத்தில் இசையில் சரவெடி!!!

இரண்டு விஜயையும் திரையில் காட்டுவதில் அக்கறை காட்டியதை போல இன்னும் கொஞ்சம் அதிகமாக வில்லனுக்கு காட்சிகளை கொடுத்திருந்தால் படம் இன்னும் விறு விறுப்பாக இருந்திருக்கும்! படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற நிலையில் பாடல்களுக்கான விழியம் எவ்வாறு இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது! குறிப்பாக ‘Selfy புள்ள... பாடல் ‘ஆத்தி... பாடல் மற்றும் ‘பக்கம் வந்து.... பாடலும் கலக்கலோ கலக்கல்! நிட்சயமாக திரை அரங்குகளில் ரசிகர்களில் குத்தாட்டத்துக்கு குறைவே இருக்காது! பாடல்களை விட பின்னணி இசை கலக்கல். அனிருத் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் சும்மா தெறிக்க விட்டிருக்காரு! இது அனிருத்திற்கு 6வது படமாகும், 6 படங்களின் பாடல்களும் வரிசையில் வெற்றி என்பது சாதாரணமான விடயம் அல்ல! விஜய் படத்தின் பாடல்கள் வெற்றி அடைவது புதிய விடையமோ, சாதனையான விடயமோ அல்ல வழமையானதே! ஆனால் கத்தி படத்தின் பாடல்கள் அனைத்தும் எங்கிருந்தோ திருடப்பட்ட இசை என்பது மாத்திரம் உண்மை! YOU TUBE இல இதற்கான ஆதாரத்தை பார்க்கலாம்!

சந்தாவை இன்னும் கொஞ்சம் படத்துக்காக யூஸ் பண்ணி இருக்கலாம்!!!

இரண்டு விஜய்களும் இணைந்தார்களா? அல்லது அவர்களுக்குள் போராட்டமா? முடிவில் ஜெய்ச்சது எந்த விஜய்? மக்களில் பிரச்சனை தீர்க்கப்பட்டதா? வெளிநாட்டு நிறுவனத்திற்கு என்னவாகிற்று? என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கின்றார்களா? என்பதுதான் ‘கத்தி’ படம்! படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் கொஞ்சம் கூட படத்துக்கு ஒத்து வரவில்லை! சொல்லப்போனால் சகிக்க முடியவில்லை! இது படத்தின் பெரிய பின்னடைவுக்கு காரணமாகும்! நிச்சயமாக விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக ‘துப்பாக்கி’ வரிசையில் ‘கத்தி’யும் இருக்கும். நல்ல சமூக நோக்கம் கருதிய படம், தற்போது மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளை மையமாக கொண்ட படம், அதன் சீற்றங்களை காரம் குறையாமல் சொல்லி இருக்கும் படம், விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும் என்று தெரியவில்லை! நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி இமாலயமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி! நடுநிலையான ரசிகனாக செலவு செய்த நேரத்திற்கு திருப்தியான படம்! படத்துக்கு மார்க்கு போடனும் என்றால் 2.5/5 கொடுக்கலாம்! கட்டாயம் எல்லோரும் திரையரங்கம் சென்று பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்! 

பின் குறிப்பு - விஜய் முதல் படம் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இரண்டாவது படம் நடிக்கும் போது, அந்த படம் பெரும்பாலும் பிளாப்பாகும்! 

ரமணா இயக்கிய ‘திருமலை’ ஹிட் ஆனால் ‘ஆதி’ பிளாப்!
தரணி இருக்கிய ‘கில்லி’ ஹிட் ஆனால் ‘குருவி’ பிளாப்!
பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ ஹிட் ஆனால் ‘வில்லு’ பிளாப்!
முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ ஹிட் ஆனால் ‘கத்தி’???

விதி விலக்காக இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த இயக்குநராக 
கே.செல்வபாரதி இயக்கிய ‘பிரியமானவளே’ ஹிட் அதே போல ‘வசீகரா’வும் ஹிட் இதற்க்கு ஒப்பாக சித்திக் இயக்கிய ‘பிரெண்ட்ஸ்’ ஹிட் ‘காவலன்’ பெரிய அளவில் இல்லை என்றாலும் நல்ல பேர் எடுத்த படம்! ‘கத்தி’யின் முடிவில் தெரிந்துவிடும் முருகதாஸ் முதலாவது பட்டியலை நிரப்புவாரா அல்லது இரண்டாவது பட்டியலில் இடம் பிடிப்பாரா என்று! முடிவு உங்கள் கையில்! 


“இரண்டு பக்க கத்தி, ரெண்டுமே ரொம்ப ஷார்ப்பூ ஆனா பிடி மட்டும் கொஞ்சம் லூசூ”

Post Comment

2 comments:

  1. INNORU ANJAAN READY; SARIYANA MOKKAI BLADU ITHUKKA IVLO BUILDUP

    ReplyDelete
  2. really super movie vijay anna the mass

    ReplyDelete