Saturday, December 12, 2015

சிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்...!

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்... என் கட்சிக்காரர் சிம்பு என்ன பண்ணீட்டார் அப்படி... நீங்க எல்லாம் கிழ்ர்ந்து எழும் அளவிற்க்கு என்று பார்ப்பம்...! 

நன்றாக இருந்தால் பாராட்டுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமலும், பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு நேரம் ஒதுக்கி என்றாலும் திட்டுவதற்கு தயாராக இருக்கும் சமூகத்திற்கான ஒழுக்கத்தை கெடுத்து விட்டாக குற்றம் சாட்டப்பட்டு கைதாக வேண்டும் என்ற அளவுக்கு அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கப்பட்டுள்ளது. வேற எந்த காரணமும் இல்ல ‘புண்#க்கு’ என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி பாடல் எழுதி அதை பாடியமைக்காக சிம்புவும் அந்த பாடலுக்கு இசை அமைத்தமைக்காக அனிருதும் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் கைதாக போகின்றார்கள் என்ற நிலை. மாதர்சங்க, பெண்கள் அமைப்பு... இன்னும் என்ன என்ன எல்லாம் இருக்கோ அவை எல்லாம் சினிமா பாடல்களை கேட்டுதான் பெண்களை வழிநடத்துகின்றார்கள் போல... நீங்க எல்லாம் என்ன ‘பீப்’க்கு சங்கம், அமைப்பு வச்சிருக்கீங்களோ... சரி சரி அது என்ன ‘பீப்’? நம்ம சமூகத்தை அப்படி என்னதான் கெடுத்துட்டாங்க என்று பார்த்தா? ஒன்னும் இல்ல அந்தாளு ஏதோ ஒரு காண்டில ஒரு பாட்டு பாடீட்டு அத போய்...


கைல ஒரு போன் இருக்கு என்று நீங்க என்னவும் சொல்லலாம் என்றால் இவங்களும் என்னவும் பாடலாம்... என்ன பிழை இருக்கு...!?!

சல்மான் கானுக்கு கார் ஓட்ட தெரியாது அவர் குடி போதையில் ஒருவரை மோதி உயிரிழக்க செய்யவில்லை, என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது கொந்தழிக்காத சமூகம், மாதர் சங்கம் சிம்பு பாடிய ‘பீப்’ சாங் இற்காக கொந்தழிக்கின்றது. ஹர ஹர மஹாதேவகி விதம் விதமான கான்செப்ட்களில் வாட்சப்பில் வலம் வந்த போது சிரித்து மகிழ்ந்தவர்களும் அடுத்த வேர்ஷன் எப்போது வரும் என்று காத்திருந்தவர்களும் தான் இப்போது சிம்புவின் ‘பீப்’ சாங்’ற்க்கு எதிராக கிளம்புகின்றார்கள். ‘தூங்காவனம்’ படத்தில கமல் மூனு லிப் கிஸ் அடிச்சாரு அதில எந்த லிப் கிஸ் செம சொல்லுங்க பார்ப்பம் என்று டுவிட்டரில் போலிங் வைத்தவர்கள் தான் இன்று ‘பீப்’ சாங் பற்றி பேசுகின்றார்கள். சுமாராக 50 வயசு இருக்கும் அந்த மாதர் சங்கத்து பெண் உறுப்பினருக்கு அவங்க சிம்பு மற்றும் அனிருத் இன் படங்களை கிழித்து வீசி எதிர்ப்பை காட்டுகின்றார், இல்ல தெரியாமல் தான் கேட்கிறன்.. இந்த வயசில ‘பீப்’ சாங்க் கேட்கனுமா? இல்ல கேட்கனுமா என்றன்? சிம்புவை குறை கூறுபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட மனிதராக நீங்கள் ஒவ்வொருவரும் யோக்கியமானவர்களா?

நீங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெண்களில் மீது ஆபாசமான வார்த்தைகளை பிரையோகிக்காதவரா? சக நண்பனிடம்/நண்பியிடம் ஆபாசமான விடயங்களை பற்றி ஆபாசமாகவே எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் பகிர்ந்து கொள்வதை விரும்பாமல் அப்படி பகிர்து கொள்பவர்களை உங்கள் குழுவில் இருந்தால் அவர்களை தவிர்த்து இதுவரை உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவரா? முக்கியமாக நீங்கள் ஆணோ பெண்ணோ வாழ்க்கையில் ஒரு கணம் ஏனும் ஆபாச படங்களோ, காணொளிகளோ, கதைகளையோ, காமிக்ஸ்களையோ பார்க்காத, வாசிக்காதவராக இருகின்றீர்களா? இதை எல்லாம் விட முக்கியமான விடயம் ஒன்று இருக்கின்றது தகாத வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் எதுகுமே தெரியாமல், அவற்றை வாழ்க்கையில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத, உச்சரிக்காத நபராக இருக்கின்றீர்களா? தனிப்பட்ட முறையில் நீங்கள் இப்படியானவராக இருந்தால் நீங்கள் சிம்பு பற்றியும் அவரின் ‘பீப்’ சாங் பற்றியும் விமர்சிக்கலாம் உங்கள் காட்டங்களை வெளிப்படுத்தலாம்.

சமூகவலைத்தளங்களில் சிம்புவை ஒரு அயோக்கியனாகவும் பெண் பித்தனாகவும் குழப்படிகாரனாகவும் விமர்சித்து பிரபலம் என்ற போர்வைக்குள் இருப்பவர்கள் பலர், அவர்கள் எல்லாம் யோக்கியம் என்பது போல அவர்களில் வரிசையில் இன்று வழிசலைகள் எல்லாம் செயற்படுகின்றது. குறிப்பாக பெரும்பாலும் பெண்களுக்கு பிடிக்கவில்லையாம். சரி அந்த விடயத்துக்கு வருவம், ஆங்கிலேயன் அவன் தன்னுடைய நாட்டில் தனிப்பட்ட இசை அல்லது ஆல்பம் என்று குறிப்பிட்ட ஒரு சிலர் சேர்ந்து அவர்களே பாடல் இயற்றி அவர்களே பாடுவார்கள் அந்த பாடல்கள் அனைத்தும் எப்படியான பாடலாக இருந்தாலும் வரவேற்பை பெறும். உதாரணமாக ‘I HAD SEX...' ஏகோன் பாடிய 'I WANNA FUCK YOU...' இவை அனைத்தும் அவர்களிடையே பட்டைய கிழப்பிய பாடல்கள். ஆங்கிலேயனின் பாடல், இசை, இதை எல்லா விட அவனின் உடைநாகரீகம், புருசன் கொறட்டை விட்டால் ‘டைவர்ஸ்’ வாங்குவது வரைக்கும் அரை குறை ஆங்கிலேயனாக மாறிய எம் குல பெண்களுக்கு ‘பீப்’ சாங் பிடிக்கவில்லையாம்? அதுக்காக கட்டாயம் பிடிக்க வேண்டும் என்று இல்லை அது உங்கள் உங்கள் தனிப்பட்ட இரசனைக்கு உரிய விடையம். உங்களுக்கு பிடிக்கலைன்னா போக வேண்டியது தானே? நீங்க ஆரம்பித்து வைக்காத சமூக சீர் கேட்டை விட எந்த வகையிலும் சிம்பு கெடுத்து விடவும் இல்லை கெடுக்கவும் முடியாது.

ஏம்மா ஒத்த ரோசா(களே)... நீங்க போடுற லெகின்ஸ், தொடையில் சுற்று பருமனை பார்க்கும் போது கண்ணால் அளவெடுக்க கூடிய அளவு இறுக்கமான ஒரு ஜீன்ஸ், டி-ஷர்ட்டா இல்ல பெனியனா என்று தெரியாத ஒரு உடை.... இன்னும் இன்னும் பல... அதை எல்லாம் முழுமையாக சொல்லி முடிக்க போனால் எனக்கு எதிராகவும் ஒழுக்க சீர்கேட்டு வழக்கு பதிவு செய்தாலும் செய்வார்கள்.. நீங்க எல்லாம் அப்படியே பெரிய ஒழுங்(க்)கு ‘பீப்’கள் சமூகத்தை திருத்த வந்துட்டீங்க, சரி கழுத இதுகள் தான் இப்படி இருக்குன்னா... என்னோட நண்பனா இருந்துட்டு ஒருத்தனுக்கு ‘பீப்’ சாங் பிடிக்கவில்லை என்று சொல்லீட்டான், இது எல்லாம் எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்.. என்ன மச்சீ என்ன சொல்லுறாய் நல்லா தானேடா இருக்கு என்று கேட்டா.. ஆமாடா நல்லா தான் இருக்கு ஆனா என் கேள்ப்ரெண்ட்’க்கு பிடிக்கல அதனால எனக்கு பிடிக்கலை என்று சொல்லுறான்... டேய் நீங்க எல்லாம் லவ் பண்ணி என்ன ‘பீப்’ தானேடா கிழிக்க போறீங்க என்று சொல்லீட்டு வந்துட்டன். கேட்டா லவ் பண்ணுறானாம், ஆனா மச்சீ வாட்சாப்’ல ஒரு செம க்ரூப் ஒன்னு ஆரம்பிச்சு இருக்கன் உன்னையும் சேர்த்து விடவா என்று கேட்டவன் தான் இன்னைக்கு ‘பீப்’ சாங் சமூகத்தின் பெரிய சீர்கேடு என்று அந்த பாடலை எதிர்கின்றான்.. ONLY ‘பீப்’ SONG இனை எதிர்கின்றான் ‘பீப்’ இனை ஆதரிக்கின்றான்...!

இதை எல்லாம் விட பசங்க பண்ணுற டியூட்டி ஓவர் டியூட்டி... சொல்லி வேலை இல்லை, ஹர ஹர மஹாதேவகி ஆடியோ வந்த போது எனக்கு... எனக்கு... எனக்கு என்று சோத்துக்கு செத்தவன் சோத்துக்கு அலைஞ்சதை போல அலைஞ்சவன் எல்லாம் ‘பீப்’ சாங் சமூகத்தை சீர்கெடுக்கின்றதாம். ஹன்சிகா குளியல் வீடியோ, ஸ்ரீதிவ்யா செல்பி, ராதிகா அப்டேப் குறும்பட வீடியோ... என்று உள் நாட்டு, வெளி நாட்டு தெரிந்த தெரியாத அத்தனை பிரபலங்களில் வீடியோவையும் ஒட்டு மொத்தமா... மூச்சு இழைக்க இழைக்க... வலக்கையோ இல்ல இடக்கையோ வலிக்க வலிக்க... அம்புட்டு வீடியோவையும் பார்த்தவனுகளும், ‘ஜான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்...’ என்ற பாலிசில, வாட்சாப்’ல குரூப் ஆரம்பித்து தெரிந்தவன் தெரியாதவனுக்கு எல்லாம் பரப்பிய எம் ஆண்கள் சமூகம் இன்று என்ன ‘பீப்’க்கு சிம்பு மீது குற்றம் சாட்டுகின்றார்கள் என்று தெரியவில்லை.

தெருவில ஒரு பெண் போகும் போது ‘நாறின மீன பூனை பார்ப்பது போல...’ பார்ப்பவர்கள் சிம்பு ‘பீப்’ சாங் சமூகத்தை சீர் குலைக்கின்றதாம்.. டேய் டேய் கொஞ்சம் விட்டு இருந்தா அந்த பிள்ளைய கலையோ கலை என்று கலைச்சிருப்பாய்... நீ எல்லாம் சமூக திருத்தத்தை பேசுற அளவுக்கு வந்துட்டு சமூகத்தின் நிலை... பாடசாலைகளிலேயே கலவிக்கல்வி அவசியம் வேண்டும்? என்ற நிலையில் இருக்கும் போதும் ‘பீப்’ சாங் இற்காக அவர்களை கைது செய்யப்பட வேண்டும் என்று கிழர்ந்தெழுவது எந்த வகையில் நியாயம்.? அப்படியானால் நீங்க கலவிக்கல்வியில் ‘பீப்’ சம்மந்தமாக எந்த பாடமும் எடுக்க போவதில்லையா? அந்த பாடல் முழுக்க முழுக்க காதல் தோல்வி அடைந்த நண்பன் ஒருவனுக்கு ஆறுதல் சொல்லும் பாடலாக இருக்கின்றது, எல்லோரும் சகயமாக காதலில் தோல்வியடைந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லும் போது என்ன சொல்லுவோம்?, அவன் கவலைப்பட கூடாது என்று... ‘என்ன புண்#க்கு டா லவ் பண்ணாய்...’ என்றுதானே சொல்லுவம், அதை தானே சிம்புவும் சொன்னாரு...? என்ன நாங்க ஒரு நண்பனுக்கு சொல்லி இருப்பம், சிம்பு காதலில் தோல்வியடைந்த எல்லோரையும் தன் நண்பனாக நினைத்து சொல்லி இருக்கார்... இதை இத்தோட விடாமல் நுங்கு போல ஒவ்வொரு கண்ணா நோண்டீட்டே இருந்தால் சீழ் தான் வரும்...!

ஆம்பள மனச உடைக்க தெரிஞ்சா தாண்டா பொம்பள.. அவ பொம்பள, அந்த உடைஞ்ச மனசோட வாழ தெரிஞ்சாதாண்டா ஆம்பள.. நாம ஆம்பள...

அதை விட முக்கியமாக இந்த பாடலை சிம்புவோ, அனிருதோ ஒபீஷியலாக வெளியிடவில்லை, இந்த பாடலுக்கு அவர்களில் எவரும் உரிமையும் கோரவில்லை, அப்படி உரிமை கோரும் பட்சத்தில் இதனை பற்றி பேசுவதிலோ இல்லையேல் உங்களை யோக்கியனாக்கி சிம்புவை கெட்டவன் என்றாக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தலாம் அதுவரை வாட்சாப்பில் வரும் வீடியோக்களை பார்வையிடவும், ஏம்மா ஒத்த ரோசா... காயப்போட்ட அந்த லெகின்ஸ்’ஐ எடுத்து வை நாளைக்கு அதை போட்டுட்டு ROAD இல் நிறைய சமூக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கு..! இன்றைய நிலையில், எங்களுக்கான கலாச்சாரங்களில் மாத்திரமே நாங்கள் இருக்கும் நிலையினை தக்க வைத்திருப்போமேயானால் இந்த ‘பீப்’ சாங்கை குறை கூறலாம் ஆனால் நாம் தான் எல்லா கலாச்சாரத்தின் ஒட்டு மொத்த கலவையாக நின்று கொண்டு சமூகம்... சமூகம்... என்று குரல் கொடுத்து எந்த பயனும் இல்லை. மாற்றம் எம் ஒவ்வொருவரிடம் இருந்து ஏற்பட வேண்டியது, நாம் அனைவரும் சேர்ந்து ஒருவரை மாற்றுவது மாற்றமாகாது, அப்படியான ஒரு மாற்றத்தால் சமூகத்திற்கு பயன் தரும் எந்த உகந்த செயற்பாட்டையும் செயல்படுத்த முடியாது..!

இன்று ‘பீப்’ பாடலுக்கு எதிராக எழுப்பப்படும் எந்த ஒரு குரலும் சமூக நலனுக்காக கொடுக்கப்படுவது இல்லை, சிம்புவிற்கு எதிராகவும், குரல் கொடுப்பவர்கள் யோக்கியமானவர்கள் நல்லவர்கள், எந்த ‘பீப்’ ஐயும் கண்ணால கூட காணாத உத்தமர்கள் என்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகவுமே தவிர வேறு எதற்காகவும் இல்லை... இதை எல்லாம் விட ‘புண்#’ என்றால் பண்டைய காலத்தில் (பானாவை புனா என்று வாசித்தால் அந்த ‘பீப்’க்கு நான் பொறுப்பாக முடியாது..) ‘மலர்ந்த செந்தாமரை’ என்று பொருள் படும்... எங்கோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம். ஆக நாம் எல்லோரும் தான் அந்த சொல்லை இந்த ‘பீப்’ உடன் ஒப்பிட்டு வர்ணித்து அந்த சொல்லை ஒரு ‘பீப்’ சொல்லாக மாற்றிவிட்டோம் ஆக மொத்தத்தில் பிழை, சமூக சீர்குலைவு எல்லாம் எங்களால் தான் தொடக்கி விடப்பட்டுள்ளது. பள்ளிக்காலத்தில் நல்ல சினிமா பாடல்களுக்கு ஆபாச வரிகளாக மாற்றி (ஜிகுஜிக்கா.. ஜிகுஜிக்கா... ஜிக்கா...) எத்தனை பாடல்களை பாடி இருப்பார்கள்; அவர்கள் தான் இன்று ‘பீப்’ சாங் சமூக சீர்கேடு என்கின்றார்காள். எனக்கு மாத்திரம் அல்ல அநேகமானவர்களுக்கு பிடித்த கவிமார்கண்டேயன் ‘வாலி’ அவர்களில் சினிமா பாடல்களில் எத்தனை பாடல்கள் முழுக்க முழுக்க இரண்டை அர்த்தை மட்டுமே கொண்ட பாடல்கள் என்று தெரியுமா? அப்படியாயின் அந்த பாடல்கள் வெளிவந்த காலத்தில் பெண்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தினை காப்பாற்ற வேண்டும் என்று இன்று கூக்குரல் இடுபவர்கள் எல்லம் அன்று தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்களா என்ன?

சினிமாவில் சிம்பு மட்டும்தான் தப்பானவர் என்றால் அது இல்லை, அண்மையில் எத்தனை படங்களில் கேவலமான அருவருக்க தக்க காட்சிகள் வருகின்றன, குறிப்பாக சொல்லப்போனால் ‘குஷி’ படத்தில் ‘கட்டி புடி கட்டி புடி...’ வில்லு படத்தில் ‘டாடி மம்மி வீட்டில் இல்ல...’ இப்படி பாடல்கள் முழுக்க இரட்டை அர்த்தங்களுக்கு குறைவே இல்லாத பாடல்களும் அருவருக்க தக்க இசைகளையும் கொண்ட எத்தனையோ பாடல்கள் இளையராஜா தொடக்கம் இன்று வரை... அதை எல்லாம் விட படங்களில் ஹீரோ பேசும் போது ‘பீப்’ சொற்களை அதிகம் பயன்படுத்து இயக்குநரான கெளதம் மேனன் படங்கள் என்னாகின? இது எல்லாம் பிழை இல்லை தவிர்கலாம் என்ற நிலைக்கு உங்களால் வர முடிகின்றது என்றால் நிச்சயமாக உங்களுக்கு ‘பீப்’ சாங் பிடித்து உள்ளது, பாடிய சிம்புவைதான் பிடிக்க வில்லை என்பதுதான் உண்மை. இப்படி எல்லாமே எல்லோருமே பிழையாக இருக்கும் போது ஒருவரை மட்டும் அவர் என்ன செய்தாலும் குறை சொல்லுவது என்றால் எப்படி? அவர் என்ன ‘பீப்’க்கோ அப்படி ஒரு ‘பீப்’ சாங்கை பாடினார் கேட்க விருப்பம் என்றால் கேளுங்கள் பிடிக்கவில்லையா விலகி விடுங்கள் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நீங்கள் மூக்கை உட் செலுத்தாதீர்கள்... உங்களுக்கு ஆடை சுதத்திரம் எப்படியோ அதே போல ஒரு சுதந்திரமாக ஏன் நீங்கள் இதை எடுத்துக்கொள்ள கூடாது? இப்படியான ஒரு பாடலில் இருந்துதான் உங்கள் சமூகத்திற்கான விடிவிற்கான பாதையினை ஆரம்பிக்க வேண்டுமா?


தண்ணி அடிக்காத தாடிய வளர்க்காத, தம்ம அடிக்காத total ah waste என்ன ஆனாலும் அவளுக்காக அழுவாத Past is past uh...

ஒருவரை சரமாரியாக திட்டுவதானல் இகழ்வதனால் இழந்த எல்லாவற்றையும் முழுமையாக அடந்துவிடலாம் என்ற நினைப்பினை விட்டு விடுங்கள், கொஞ்சமாவது விழி திறந்து பாருங்கள் நீங்கள் இந்த பாடலுக்கு எதிராக, சமூகத்தில் அக்கறை கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது உங்களை சுற்றி உங்களுக்கு தெரியாமல் அல்லது மறைக்கும் நோக்குடன் எத்தனை தவறுகள் நடந்துகொண்டு இருக்கின்றது. அதில் ஏதாவது ஒன்றை சரி செய்யுங்கள் அல்லது சரி செய்வதற்கான ஒரு வழிமுறையை மேற்கொள்ளுங்கள் அதுதான் ஒரு தனி மனிதனாக உங்களால் சமூகத்துக்கு செய்ய கூடிய சேவை, மாற்றமும் கூட, இதைதான் இன்று சமூகமும் உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றது. இல்லை இது எல்லாம் சொல்ல நீ யார்டா... எங்களுக்கு அந்த ‘பீப்’ சவுண்ட் பிடிக்கல, அதனால் மட்டும்தான் சமூகம் கெடுகின்றது சிம்பு ஒரு கெட்டவன் அவனால் மட்டும் தான் சமூகம் சீர்குலைகின்றது என்றால்... வெரி சாரி... ஆண்ட் வெரி சீக்...! உங்களை எல்லாம் எத்தன சிம்பு வந்து எத்தனை ‘பீப்’ சாங் பாடினாலும் திருத்தவே முடியாதுடா என்று சொல்லீட்டு போய்ட்டே இருப்பதை தவிர வேற வழி இல்லை..!

சிம்பு ‘பீப்’ சாங் பாடி சமூகத்தை கெடுக்கின்றார் என்று குறை மட்டுமே சொல்கின்ற உங்களில் எத்தனை பேர் சிம்பு ‘லவ் ஆன்தம்...’ கேட்டு இருக்கீங்க, எத்தனை பேர் ஆதரவு கொடுத்தீங்க, எத்தனை பேர் பாராட்டினீங்க.. உருப்படியானது செய்யும் போது கண்டுகொள்ளாதீர்கள் அப்போது நீங்க ஏதாவது ஒரு ‘பீப்’ உடன் பிசியாக இருந்திருப்பீர்கள், சிம்பு ‘பீப்’ பற்றி பாடியதும் உங்களுக்கு எந்த ‘பீப்’ல வியர்க்கின்றது என்று தெரியவில்லை, இல்ல தெரியாமல் தான் கேட்கின்றேன்... உங்க டியூட்டி ஓவர் டியூட்டியாக இருக்குடா.. சரி அப்படி என்றால் இப்ப சிம்பு சாமி பாடல் ஒன்று எழுதி பாடினால் சிம்புவால் தான் எல்லோரும் சாமி கும்பிடுறோம், சிம்புதான் இந்த சமூகத்திற்கு நல் வழி காட்டுகின்றார் என்றா சொல்ல போறீங்க... அதுதானே இல்லை... இப்படி எத்தனை டக்காஸ்தி தனங்களை பார்த்திருப்போம்... அவரே ‘பீப்’ சாங் பாடுவாராம் அவரே சாமி பாடலும் பாடுவாராம் என்று ஒரு தரப்பும், ‘பீப்’ சாங் பாடினவன் சாமி பாட்டு பாடுறான்.. இந்த நிலமைக்கு வந்து விட்டது எங்களின் கலாச்சாரம்... என்று இன்னொரு தரப்பும் சொல்லுவீர்கள்... இரண்டு நாளாக பாடலுக்கு எதிராக என்று இல்லாமல் சிம்பு என்ற தனிப்பட்ட ஒருவனுக்கு எதிராக திரும்பிக்கொண்டு இருக்கின்றது சமூகவலைத்தளங்கள்...!

சரி இவங்கதான் ஏதோ கோபத்தில் இப்படி எல்லாம் எதிர்ப்பை காட்டுகின்றார்கள் என்றால், மீடியா, பத்திரிகைகள் எல்லாம் என்ன செய்கின்றார்கள் என்றால் ‘பீப்’ என்பது ‘புண்#’ ஆ இல்லை ‘சண்டை’ ஆ? என்ற ரேஜ் இல் அவர்கள் எழுதி தள்ளீட்டு இருக்காங்க, ஒரு காலத்தில் நடிகைகளின் விபச்சாரம் என்ற பெயரில், அவர்களுக்கு ஏற்ற ஏற்ற டேட் உட்பட எல்லாவற்றையும் அப்படியே அப்பட்டமாக எந்த வித சமூக சிந்தனையும் அக்கறையும் கொஞ்சமேனும் இல்லாமல் எழுதி, அந்த எழுத்தை விற்று வேசித்தனமாக காசு பார்த்த பத்திரிகைகளுக்கு எந்த வகையில் உரிமை இருந்து விடப்போகின்றது சிம்புவின் ‘பீப்’ சாங் இனை பற்றி சரியோ பிழையோ என்று சொல்வதற்கு... மீடியா பக்கம் போனால் டேய் நொன்னை நாய்களே... சின்ன பிள்ள டீவி பார்த்துக்கொண்டு இருக்குமே என்ற எந்த கொச்ச உணர்ச்சியும் இல்லாமல் உன்னுடைய டீ.ஆர்.பீ எகிறனும் என்று நித்தியானத்தா - ரஞ்சிதா படுக்கையறை வீடியோவினை செய்தியின் போது ப்ளாஸ் நியூஸ் என்று போட்டு போட்டு காட்டிய... உலக வரலாற்றில் முதல் டீவி நீ தானேடா... இந்த பாடலை பற்றி இவ்வளவு பேசிக்கொண்டு இருந்தாலும் வருகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அஞ்சு வயசு பிள்ளைய இந்த பாட முழு எமோஷனோட பாடவச்சு காசு பார்க்க போற விபச்சார சேனல்கள் எல்லாம் இந்த பாடலை விமர்சிக்காதீர்கள்...! சரி... சரி... இந்த மீடியாகாரனுகள நினச்சா கடுப்பு தானாவே வருது...! மன்னிச்சூ... மன்னிச்சு..!

விஜய் ஸ்டைல சொல்லனும்ன்னா ‘நீ வேற சமூகம் நா வேற சமூகம் இல்லடா எல்லாரும் ஒரே சமூகம் தாண்டா...’ ஆகவே சிம்பு பாடிய ‘பீப்’ (சாங்)இனை தேவை இல்லாமல் நோண்டாமல்... முடியும் என்றால் சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்லதாவது செய்யுங்க.. தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏதாவது செய்யலாம் இல்லையேல் செய்வதற்கு என்றாலும் எத்தனிக்கலாம், அட கழுத எத்தனிக்கதான் வேண்டாம் ஆதரவு அனுதாபம் கொடுப்பது போல பாவனையாவது செய்யுங்கள்... சிம்புவை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடையே ரீச் ஆகி அண்ணாத்த ரொம்ப ஒழுக்கமானவர் என்று பெயரை எடுப்பதை விட, வெள்ளம், விவசாயம், நீர் என்று சமூக வலைத்தளங்களில் உங்கள் ஆதவினை ஆக்க பூர்வமாக வெளிக்காட்டி இவருக்கு பெரிசு... அறிவு.. பெரிசு என்று பெண்கள் மத்தியில் உடனடியாக ரீச் ஆக முடியும்... ஒரு தனிநபரை குறிப்பிட்ட சிலர் ஒட்டு மொத்தமாக திட்டுவதனாலோ அல்லது மட்டம் தட்டுவதனாலோ எந்த பலனும் என்றும் கிடைக்கப்போவது இல்லை... எனக்கு தெரிந்த முடிவு இதுதான் சிம்புவும் மாறப்போவது கிடையாது இந்த சமூகம்... சமூகம்... என்று ஓய்வான நேரத்தில் மாத்திரம் போலியாக சுயநலம் பாடும் ‘பீப்’களும் மாறப்போவது கிடையாது.!‘பீப் என்பது யாதென கேட்பின் - அது ஆண்பாலும் இல்லை பெண்பாலும் இல்ல... அது ஒரு விதமான.. அட விடுங்க அது ஒரு விதமான ஒரு விதம்...!’

Post Comment

2 comments:

 1. ஒருத்தனில் பிழை பிடிக்கனும் என்று நினைத்தால் எப்படியாவது பிழை பிடிக்கலாம் ...!!!

  பிழையை பிடிப்பவர்கள் முதலில் தாம் அந்த பிழையை பிடிக்க தகுதியானவர்களா என்று பார்க்க வேண்டும்...!!!

  இது ஒரு தனி ஓர் மனிதனின் சுதந்திரத்துக்கு எதிரான அத்து மீறலாகும்...

  ReplyDelete
 2. எப்படியும் சிம்புவிற்கு ஆதரவா ஏதாசும் எழுதனும்னு முடிவோட எழுதிருகிங்கன்னு புரியுது
  சல்மான்கான் பிரசினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? மாதர்சங்கங்கள் நாட்டில் நடக்கிற பிரசினை எல்லாத்துக்கும்
  குரல் கொடுத்திட்டு இருக்கல ,தமிழ்நாடில நம்ம பெண்களை கேவலபடுதுறமாதிரியான செயல்களுக்கு அவங்க
  பொங்கிறாங்க ,இதுக்கே பொங்கலன்னா எப்டி ?

  அப்புறம் அவங்களுக்கு யோக்கியதை இருக்குன்னு கேக்கிறிங்க !
  கேள்வி கேக்கிரவங்க எல்லாம் ஜோக்கியனா இருக்கணும்நா நாட்டில ஒருத்தனும் கேள்விகேட்க முடியா .

  பெண்களை ஆபாசவார்த்தையில் திட்டாதவாரா நீங்க ?
  ஆமா திட்டி இருக்கிறோம் , பெண்ணை தனிமையில் திட்டுவதற்கும் பப்ளிக்கிள் திட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு ,
  சிம்பு இரண்டாம் வகை

  நீங்களே இந்தபாடலை செக்ஸ் வீடியோக்களுடன் ஒப்பிட்டுதான் எழுதிருகிங்க , அதில இருந்தே உங்களை அறியாமல் இந்த
  எந்த இடத்தில வைசிருகிங்கன்னு புரியுது .
  அந்த மாதரியான விசயங்களை ஒன்றாக இருந்து பாக்க ,கேக்கிற அளவுக்கு இன்னும் தமிழ் கலாசாரம் கீழே போகல

  அப்புறம் whatsapp விடியோக்களுடன் இதை ஒப்பிட முடியாது , whatsappன்னா என்னுன்னு தெரியாத அப்பனோ சுப்பனோக்கு கூட
  சினிமா பாடல்கள் இலகுவாக சென்றடைந்து விடும்

  சரி இந்த பாடலை கேட்டு 4 வயசு குழந்தை பாடிசுன்னா! என்ன சொல்லி இந்த பாடலை நீ படிக்க கூடாதுன்னு புரியவைப்பிங்க ?
  ReplyDelete